Tuesday 8 March 2016

மகளிர் தின சிறப்பு பதிவர்



அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை காரணமாக பிளாக் பக்கம் வரவோ அல்லது மற்றவர்களின் பிளாக்கைப் படித்துவிட்டு காமெண்ட் போடவோ நேரம் இல்லை .மேலும் நெட்டில் உட்கார்ந்தால் மற்ற வேலைகள் கெடுவதால் நெட் பக்கம் வருவதைத் தவிர்த்து வந்தேன் .
 இன்று மகளிர் தினம் .
மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

மகளிர் தினமான இன்று நான் வேலை பார்க்கும் இடத்துக்கும் மிக அருகாமையில் வசிக்கும் ஒரு பெண் பதிவர் பற்றி எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று அவர் பற்றிய பதிவு.

நிறையப் பேருக்கு மிகவும் பரிச்சயமானவர்.அவருடன் நான் போனில் தான் இதுவரை பேசியுள்ளேன் . நேரில் பார்த்தது கிடையாது.

 போனிலேயே அவரின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை இழையோடும் .
குழப்பமற்ற தெளிவான சிந்தனையால் மட்டுவே வரக்கூடிய லாஜிக்கான பேச்சு.. டீச்சர் வேலைக்குச் சென்றிருந்தால் இந்நேரம் "நல்லாசிரியர் விருது "வாங்கி இருப்பார். நஷ்டம் அந்த விருதுக்குத்தான்.

பல தடவை நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இருவரும் சந்திக்க எண்ணியும் இருவருமே அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால் சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஒரு வழியாக வியாழக் கிழமை என்று நினைக்கிறேன் .சந்தித்தோம்..
குரலில் தெரிந்த கம்பீரத்தால் அவரை ஒரு ஐந்தரை அடி உயரமான வாட்ட சாட்டமான கிட்டத்தட்ட கிரண்  பேடி  மாதிரியான ஒரு மனுஷி போல ஒரு உருவம் தான் என் மனதில் அவரைப் பற்றி வரைந்து வைத்திருந்தேன்.

என் வேலை பகுதி நேர வேலை என்பதால் 12.30 அளவில் முடிந்துவிடும் .அன்று மாலை காலேஜு வேலை இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்கு வருவதாக முதல் நாளே பிளான் போட்டுவிட்டோம் .என்னை என் அலுவலகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். .நான் தலைக்கு மெஹந்தி போடுவதால் என் அடையாளத்தை அவரிடம் கூற அவர் மஞ்சள் நிற லெக்கிங்க்சுபோட்டு வருவதாகவும் தனது வண்டி நம்பரையும் சொல்லிவைத்திருந்தார்.

 நான் போன் பண்ணியதும் சொன்னபடியே வந்தார் . எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரே ஷாக் .
 திருக்குறள் போல இருந்தார் . நான் நினைத்துக் கொண்டிருந்த உயரத்திற்கும் ஓர் ஒன்றரை அடியாவது குறைந்த உயரம்.நிஜமாகவே அவர் திருக்குறள் தான் . ரெண்டே வரியில் நிறைய பொருள் பொதிந்த குறள் போல அந்த ஒரு ஐந்தடி உயர உருவத்தில் ஒரு செல் நரம்பு இரத்தக்குழாய் விடாமல் தன்னம்பிக்கை .ஐந்தடி உயரத்தில் 500 கிலோ தன்னம்பிக்கை .


 நிஜமாகவே ஒரு இனிமையான மனுஷி.

நம்பவில்லை என்றால் அவரின் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால்  தெரியும் .
கிட்டத்தட்ட 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறதாம்.

கவாஸ்கர் சுரீந்தர் அமர்நாத் இவர்களெல்லாம் முதல் டெஸ்ட் மேச்சிலேயே சதம் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்
ஆனால் இவர் முதல் டெஸ்டிலே 400 ஆம் .
ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் கிரிக்கெட்டில் இவர் சர்க்கரை அளவில் .

 அவர்தான் நமது பெருமைக்குரிய பதிவர் கீதா.
அவரையே மகளிர் தின சிறப்பு பதிவர் ஆகத் தேர்வு செய்துள்ளேன்,
அவர் நீடுழி  வாழ வாழ்த்துகிறேன்.


10 comments:

  1. மிகவும் நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள், நீங்கள் சந்தித்தப் பதிவர் பற்றி. இவர் யாரென என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது வலைத்தள முகவரியாவது கொடுங்கள்.
    அவருக்கும், உங்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .Thulasidharan V Thillaiakathu என்ற தளத்தில் பதிவிடுகிறார்.

      Delete
    2. அருணா, துளசிதரன் v தில்லைஅகத்து எனது நண்பர். எங்கள் தளம் தில்லைஅகத்துக்ரோனிக்கிள்ஸ்

      Delete
    3. அவரா? எனக்குத் தெரிந்தவர்தான். சிலசமயங்களில் அவரும் எனது பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போடுவார்.
      நல்வாழ்த்துகள்!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. முதலில் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை அபயா அருணா. ஒரு சில ஃபோன் உரையாடல்கள், ஒரு நேர் சந்திப்பு இதிலேயே என்னைப் பற்றிக் கணித்ததும் இங்கு சொல்லியதும் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. முதலில் இந்தப் பதிவு எதற்கு இதற்கு நான் பொருத்தமானவளா? அப்படி ஒன்றும் நான் பெரிய ஆளும் இல்லை, என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தாலும், என்னைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? நான் இதற்குத் தகுதியானவளா? வலையுலகில் பல பெண்கள் தன்னம்பிக்கையுடன் பல சாதனைகள் புரிந்து வரும் வேளையில்..ஏன் நீங்கள் உட்பட இருக்கும் போது நான் எதற்கு என்றுதான் தோன்றியது உங்களிடம் சொல்லலாம் என்றும் தோன்றியது. ஆனால் நீங்கள் நட்புடன் அன்புடன் தரும் சொல்லியிருப்பதை நான் நிராகரித்தால் உங்கள் அன்பை நான் ஹார்ட் செய்துவிடுவேனோ என்றும் மறுபுறம் தோன்றியதால் உங்கள் பார்வைக்கே விட்டுவிட்டேன்.

    எனது நம்பிக்கையும் எனது கருத்துகளும் பெண்கள் பலரை அடைந்து அவர்களை நம்பிக்கை நட்சத்திரங்களாக மாற்றும் என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்கியே.

    உங்கள் அன்பிற்கும், நீங்கள் எனக்குக் கொடுக்கும் இந்த மாபெரும் மரியாதைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மிக்க நன்றி சகோ/தோழி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் பார்த்ததும் எனக்கு என்ற வரி தான் ஞாபகத்திற்கு வந்தது.

      Delete
    2. உங்களைப் பார்த்ததும் எனக்குDont judge me by my cover என்ற வரி தான் ஞாபகத்திற்கு வந்தது.

      Delete
  4. சகோதரி கீதா அவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். பதிவுகள் தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு... :)

    ReplyDelete