அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை காரணமாக பிளாக் பக்கம்வரவோ அல்லது மற்றவர்களின் பிளாக்கைப் படித்துவிட்டு காமெண்ட்போடவோ நேரம் இல்லை .மேலும் நெட்டில் உட்கார்ந்தால் மற்றவேலைகள் கெடுவதால் நெட் பக்கம் வருவதைத் தவிர்த்து வந்தேன் .
இன்று மகளிர் தினம் .
மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
மகளிர் தினமான இன்று நான் வேலை பார்க்கும் இடத்துக்கும் மிகஅருகாமையில் வசிக்கும் ஒரு பெண் பதிவர் பற்றி எழுதுவது மிகவும்பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று அவர் பற்றிய பதிவு.
நிறையப் பேருக்கு மிகவும் பரிச்சயமானவர்.அவருடன் நான் போனில் தான்இதுவரை பேசியுள்ளேன் . நேரில் பார்த்தது கிடையாது.
போனிலேயே அவரின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை இழையோடும் .
குழப்பமற்ற தெளிவான சிந்தனையால் மட்டுவே வரக்கூடிய லாஜிக்கான பேச்சு.. டீச்சர் வேலைக்குச் சென்றிருந்தால் இந்நேரம் "நல்லாசிரியர் விருது "வாங்கி இருப்பார். நஷ்டம் அந்த விருதுக்குத்தான்.
பல தடவை நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இருவரும் சந்திக்கஎண்ணியும் இருவருமே அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால்சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
ஒரு வழியாக வியாழக் கிழமை என்று நினைக்கிறேன் .சந்தித்தோம்..
குரலில் தெரிந்த கம்பீரத்தால் அவரை ஒரு ஐந்தரை அடி உயரமான வாட்டசாட்டமான கிட்டத்தட்ட கிரண் பேடி மாதிரியான ஒரு மனுஷி போல ஒருஉருவம் தான் என் மனதில் அவரைப் பற்றி வரைந்து வைத்திருந்தேன்.
என் வேலை பகுதி நேர வேலை என்பதால் 12.30 அளவில் முடிந்துவிடும்.அன்று மாலை காலேஜு வேலை இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்குவருவதாக முதல் நாளே பிளான் போட்டுவிட்டோம் .என்னை என்அலுவலகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாகக் கூறியிருந்தார். .நான் தலைக்கு மெஹந்தி போடுவதால் என்அடையாளத்தை அவரிடம் கூற அவர் மஞ்சள் நிற லெக்கிங்க்சுபோட்டுவருவதாகவும் தனது வண்டி நம்பரையும் சொல்லிவைத்திருந்தார்.
நான் போன் பண்ணியதும் சொன்னபடியே வந்தார் . எனக்கு அவரைப்பார்த்ததும் ஒரே ஷாக் .
திருக்குறள் போல இருந்தார் . நான் நினைத்துக் கொண்டிருந்தஉயரத்திற்கும் ஓர் ஒன்றரை அடியாவது குறைந்த உயரம்.நிஜமாகவேஅவர் திருக்குறள் தான் . ரெண்டே வரியில் நிறைய பொருள் பொதிந்தகுறள் போல அந்த ஒரு ஐந்தடி உயர உருவத்தில் ஒரு செல் நரம்புஇரத்தக்குழாய் விடாமல் தன்னம்பிக்கை .ஐந்தடி உயரத்தில் 500 கிலோதன்னம்பிக்கை .
நிஜமாகவே ஒரு இனிமையான மனுஷி.
நம்பவில்லை என்றால் அவரின் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால் தெரியும் .
கிட்டத்தட்ட 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறதாம்.
கவாஸ்கர் சுரீந்தர் அமர்நாத் இவர்களெல்லாம் முதல் டெஸ்ட்மேச்சிலேயே சதம் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் .
ஆனால் இவர் முதல் டெஸ்டிலே 400 ஆம் .
ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் கிரிக்கெட்டில் இவர் சர்க்கரை அளவில் .
அவர்தான் நமது பெருமைக்குரிய பதிவர் கீதா.
அவரையே மகளிர் தின சிறப்பு பதிவர் ஆகத் தேர்வு செய்துள்ளேன்,
அவர் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
குறள் போல...
ReplyDeleteநல்ல தேர்வு... வாழ்த்துகள்...
.வருகைக்கு நன்றி
Deleteஎன்ன அவரும் என்னைப் போல ஸ்வீட்டான ஆளா?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஹஹஹ் ஆமாம்பா நானும் உங்களைப் போல ரொம்ப ஸ்வீட்டான ஆளு...ஸ்வீட் 16 ஆக்கும்..ஹிஹிஹி
Deleteகீதா
அட காணமல் போன பதிவு மீண்டும் வந்துடுச்சே.... ஒருவேளை திருக்குறள் போல என்று சொன்னதால் கீதா அவர்கள் இந்த பதிவை ஹேக் பண்ணிவிட்டாரோ என்னமோ?
ReplyDelete.வருகைக்கு நன்றி
Deleteஅவர் பற்றி நிறைய இன்னும் பாசிடிவ் பாயிண்ட்ஸ் கள் இருந்தாலும் ஒரு பெண் என்பதால் பப்ளிக்காக அதை வெளியிட வேண்டாம் என்பதால் சுருக்கி விட்டேன்.
புதிய ஆட்களை கண்டால் நான் பேச தயங்குவேன் அதுவும் பெண்ணாக இருந்தால் இன்னும் அதிகம் ஆனால் இவரை பார்த்து பேசிய போது தயங்காமல் பேசினேன். அவரும் பேசினார். ஆனால் அதிகம் பேச நேரம் கிடைக்கவில்லை..... சரி சரி நான் அவரை பார்த்து பேசியதை அவரிடம் சொல்லிவீடாதீர்கள் அவர் என்னிடம் பேசவில்லை எனது டூப்பிடம்தான் அவர் பேசி இருக்கிறார். ஹீஹீ
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஹஹஹஹாஹஹ்ஹ் மதுரைத் தமிழா மாட்டிக் கொண்டீர்களா!!! ஹஹஹ்ஹஹ ஆஹா இதை எப்படி டமாரம் அடிப்பது!!! ஹிஹிஹி...அப்படி சைக்கிள் காப்ல புகுத்திருவோமே..இந்தச் செய்தியை...
Deleteம்ம்ம் ஆம் உங்களுடன்...ம்ம்ம் அதான் உங்க டூப்புடன் அன்று அதிக நேரம் பேச முடியவில்லை....ஆனால் வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா..எனக்குத் தயக்கம் எல்லாம் கிடையாது. மொக்கை போட்டுருவேன்...
கீதா
ஹஹஹ ஆமா அதானே...அன்று பதிவு வெளியாகி சகோ ரஞ்சனி அவர்களின் கமெண்டும் பார்த்த நினைவு. காணாமல் போய்விட்டதா? மீண்டும் இந்தப் பதிவு எங்கள் மின் அஞ்சல் பெட்டியில் வந்து இருந்தது. அதான் இங்கு வந்தால் இவ்வளவு சமாச்சாரமா??!!!!
Deleteகீதா
அருமையான நட்பு கிடைத்ததற்கு இருவருக்கும் வாழ்த்துக்கள் ... ...
ReplyDelete15.03.2016 அன்று கீதாவை சந்தித்தேன்...
ReplyDeleteஇன்னொரு வலைப்பதிவர் சார்பாக ஒரு முக்கிய உதவி செய்ய வந்திருந்தார்...
இப்போதைக்கு சஸ்பென்ஸ்...
முழு விபரங்கள் விரைவில் எனது பதிவில் வெளியிடுகிறேன்...
வருகைக்கு நன்றி .
ReplyDeleteபதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்