Sunday, 30 May 2021

செயற்கரிய செயல்

 நம்ம எல்லாருக்குமே இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒரு காரியம் செய்யணும்ன்னு ஆசை இருந்திருக்கும் . இதை நம்ம தான் கண்டு புடிச்சோம் . உலக வரலாற்றிலேயே முதல் முதலாக   இங்குதான் செய்யப்பட்டது ,

செய்தவர் இவர்தான் என்கிற மாதிரி பேர் வரணும் அப்படியெல்லாம் நிச்சயமாக இருந்திருக்கும் . .

  மத்தவங்க எப்படியோ தெரியாது எனக்கு நிச்சயமா இருந்திருக்கு

 இது நாள் வரை அதற்கான கால நேரம்  ஒத்து வரவில்லையா இல்லை கிரக நிலைகள் கோளாறா என்னவென்று தெரியவில்லை 

 என்னென்னவோ  குட்டிக்கரணம் போட்டும் முடியவில்லை .

 மனித குலம் படும்  துயரங்களைக்  களைய வேண்டும் என்று ஒரு தீராத தாகம் .

எத்தனையோ ஏச்சும் பேச்சும் மனிதர்கள் அனுபவித்தாலும்  எல்லோராலும் நிச்சயமாகக் கேட்கப் பட்டிருக்கும் ஏச்சு

 "உனக்கெல்லாம் மூளையே கிடையாதா "

 "  வாயை இவ்வளோ பெருசுக்கு வச்ச அந்த ஆண்டவன் உனக்கு மூளையை ஏன் வைக்க மறந்தான் ""

“பொறந்த அன்னைக்கே தெரியும் அந்த டாக்டர் ஒழுங்கா செக் பண்ணாமல் என்கிட்டே கொடுத்துட்டா"

இப்படி சம்பந்த சம்பந்தம் இல்லாமல் சகட்டு மேனிக்குத் திட்டுவாங்க

இது தவிர  இந்த இந்த ஊரில் இருக்கறவங்களுக்கு , இந்த நாட்டில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் மூளையே கிடையாது . அவனுங்களே அப்படித்தான்  மூளை இருந்தா  அவன்  ஏன் இப்படி இருக்கான் ?

அப்படீன்னு மூளையைப் பற்றின அதாவது மூளை இல்லை என்கிற  ஒரு விஷயத்தைப்  பற்றி விலாவாரியப் பேசறாங்களே தவிர அதுக்கு ஒரு தீர்வு இது வரைக்கும் யாரும் கண்டு  பிடிக்க வில்லை . 

அதாவது மூளை இல்லாதவங்களை அப்படியே  நடமாட விட்டால் இது ஒரு சமுதாயத்திற்கு நாட்டுக்கு எவ்வளவு கேடு என்பதை யாரும் உணரவில்லை .

 இப்பக்கூட  பாருங்க மாஸ்க்கை   தாடி மாதிரி வச்சுக்கிட்டே பேசறவங்களைப் பாத்து "மூளை  கெட்ட ஜென்மங்கள் "அப்படி எல்லாம் திட்டுறாங்களே தவிர இதுக்கு என்ன பண்ணனும் அப்படீன்னு யாருமே யோசிக்க வில்லை . கண்டு பிடிக்க  முயற்சி  செய்த மாதிரியும் தெரியவில்லை 

.இப்படி இருந்தால் எப்படி 

 இந்த லாக் டவுன் நேரத்தில்  இதுக்கு  நாமே ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும் என்று அதி தீவிரமாக யோசித்தேன் .

 முயன்றால் முடியாததும் உண்டோ  /முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்  இப்படியெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொண்டு உசுப்பேத்திக்கிட்டேன் . அப்பாடா மனித குலம்   மேம்பட ஒரு வழி பிறந்து விட்டது .  

மூளை  இல்லாதவர்கள் இனியும்  கவலைப் படவேண்டாம் 

இதோ  இங்க பாருங்க

உங்களுக்காகவே பிரத்யேகமாக



 

 


Thursday, 20 May 2021

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா

 


சின்ன வயதில் நான்  ஸ்கூலுக்கு ஒழுங்காகப் போகவில்லை , 

வீட்டிலேயே படித்துக் கொள்வேன் அந்த ஸ்கூல் வாத்தியார் வந்து சொல்லிக்கொடுத்தார் . ரொம்ப  தூரம் நடக்கணும் என்பதும் ஒரு காரணம் .

தவிர  அது   ஒரு சின்ன ஸ்கூல் என்பதால் வீட்டிலேயே அம்மா சொல்லிக் கொடுத்தார்கள் .

என் அம்மா தமிழ் இலக்கியம்  படித்திருந்ததால் என்னைப்படிக்க வைத்துவிட்டுத் தான் தமிழ் நல்வழி புறநானூறு கம்பராமாயணப் பாடல்கள்     போன்றவற்றை மனப்படமாகச்  சொல்வார்கள் .

நான் அப்போது அம்மா தப்பில்லாமல் சொல்கிறார்களா என்று பார்க்கணும் . அப்படியே எனக்கும் நாளடைவில் சில தமிழ்ப்பாடல்கள் மனப்பாடம் ஆனது .

இது தவிர எங்க அம்மாவிற்கு நல்ல ஞாபக சக்தி .சரித்திரம் பூகோளம் ஆங்கில மீடியத்தில் படித்ததால் சில நாடக டயலாக்கள் எல்லாம்  அத்துப்படி .

எப்படி என்றால் எங்க அம்மா மனப்பழக்கம் தான் என்பார்கள் . குடும்பத்தில் பிரச்னைகள்  . இருந்தாலும் என் அப்பாவின் சப்போர்ட் இருந்தது படிக்க .

அது ஒன்றை வைத்தே  படித்துக்  கொண்டிருப்பார்கள்  

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – 

இதை அடிக்கடி சொல்வார்கள் .

அந்த வயதில் என் ஒரே ஐடியல் ஹீரோ அம்மா தான் .

இறந்து 35 வருடம் ஆனாலும் என் உறவினர் ஒருவர்" பாட்டி பத்து நிமிஷம் பேசறதுக்குள்ள 15 தமிழ்ப் பாட்டை மேற்கோள் காமிப்பாங்க "என்பார்கள் .

 இதை நானும்   ஒரு படிக்கும் முறையாக ஏற்றுக்கொண்டேன்

இந்த மனப் பழக்கம் நாம் பழகிக் கொண்டுவிட்டால்

ஞாபகம் வைத்துக் கொள்வதே எளிதாகி விடும் .

அதாவது.ஞாபகம் வைத்துக் கொள்ள   ஏதோ ஒரு mnemonic 

 (குறியீடு )வைத்துக் கொள்வது முக்கியம்  . .அது ஜென்மத்துக்கும் மறக்காது .

உதாரணமாக எவரெஸ்ட் மலையின் உயரம் என்னவென்றால் 8848என்று எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள   முடியும் எப்படி என்றால் எட்டு எட்டா நாலு எட்டு வச்சா எவரெஸ்ட் போயிட  முடியும்  .

 இது போன்று என் தனிப் பட்ட குறியீடு வைத்துக் கொண்டு தான் நான்  Banking   பாடங்களில் வரும்  Sections  மற்றும் Negotiable instruments act எண்களை ஞாபகம் வைத்துக் கொள்வேன்.

இது போலவே கஸ்டமர்  பெயர் எந்த நம்பர் பக்கத்தில் அவர்கள் அக்கவுண்டு வரும் என்பதெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வேன்.

 இதே முறையைத் தான் ஜப்பானிய  படம் போன்ற எழுத்துக்களை  ஞாபகம் வைத்துக் கொள்ள உபயோகிக்கிறேன் .

சில குறியீடுகள் சுவாரசியமாக இருக்கும் .சில என் மாணவர்களுக்கும் பிடிக்கும் 

ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட  ஒரே மாதிரியான

 சப்தம் உள்ள ஆனால் அர்த்தம் மாறுபடும் வார்த்தைகள் குழப்பமாக இருக்கும்.

அவற்றை புரிந்துகொள்ள (வேறு படுத்த )சில mnemonic குறியீடு வைத்துக் கொள்வேன் .

யாரும் சண்டைக்கு வரவேண்டாம் என்ற முன்னுரையுடன் என் mnemonic குறியீடுகளைச் சொல்கிறேன் .

இவை ஞாபகம் வைத்துக்கொள்ள  மட்டுமே .

உதாரணமாக "ஓதோஎன்றால் "சப்தம்" . "ஒத்தோஎன்றால் "கணவன் "

ஆரம்பத்தில் த் என்ற அழுத்தம்   "சப்தம்  "என்கிற வார்த்தைக்கு    வருமா 

அல்லது

 "கணவன் "என்கிற வார்த்தைக்கு    வருமா....  ரொம்ப குழப்பமாக இருந்திச்சு.

 குழப்பம் தீர  நான் ஒரு mnemonic குறியீடு வைத்தேன்

 சப்தம் என்றால்  சாதாரணமாக   இருக்கும் அவ்வளவே . ஆனால் ஓவரா சவுண்டு குடுத்தா அதுதான் கணவன் .

(அழுத்தம் கொடுத்து . அதாவது .த் என்ற அழுத்தம் என்று புரிந்து கொள்ளவேண்டும் )

 எனது இந்த mnemonic பல  மகளிரிடம் வரவேற்பு பெற்றது . பசங்களும்  கொஞ்சம் damaging ஆக இருந்தாலும் பரவாயில்லை ஞாபகம் வச்சுக்க வசதியாக

 இருக்கு என்ற  எண்ணமே பரவலாக இருக்கு . இது போலப் பெண்களை வைத்தும் சில காமெடி நிமோனிக்ஸ்  வைத்து ஞாபகம் வைத்துக் கொள்வேன் .

இது பொறாமை என்பதற்கான எழுத்து . அதாவது    女   என்ற இரண்டு எழுத்துக்களின் கூட்டு ஆகும்

நான் இதற்கு வைத்துள்ள mnemonic என்னவென்றால்  பொறாமை இருந்தால் பொண்ணு கல்லாகிடுவா

 இடது பக்கம் உள்ள எழுத்து பெண்ணைக் குறிக்கும் வலது பக்கம் உள்ளது கல்லைக் குறிக்கும் 

 இதை  ஞாபகம் வைத்துக் கொள்ளும்  போது அந்த எழுத்து வரிசையில் தான்  ஞாபகம் வைத்துக் கொள்ள வேண் டும் இது முக்கியம்  .

நமக்குப்  பெண்கள் மேல்   ஆத்திரம்  என்று சொல்லிக்கொண்டு கல் மாதிரி  பெண்கள் மனசு   ,கல்லும் பெண்ணும் சேர்ந்தால் பொறாமை என்று சொன்னோமானால் நாம் தப்பாக எழுத வாய்ப்புண்டு . 

அதாவது அதே வரிசையில் வரணும்

இதே  போல  விளையாட்டாகப் படித்தால் கஷ்டமான படிப்புக்களும் ஈசியாக இருக்கும் .

செய்ய வேண்டியது அவ்வையார் சொன்ன மாதிரி மனப்பழக்கம்

மனதில்  எழுதி வைத்து விட்டால் வேறே யாரும் அழிக்க முடியாது 

மனம் என்பது ஒரு எல்லையற்ற ஜி பி கொண்ட சக்தி  வாய்ந்த கணினி