Tuesday 11 August 2020

நான் காதலித்த வார்த்தைகள்

 

நான் கதையோ கவிதையோ கட்டுரையோ படிக்கும்போது சிலவற்றை ரொம்பவே ரசித்துப் படிப்பேன் . சொல்லப் போனால் தீவிரமாகக் காதலித்தேன்   சில வார்த்தைகள்  கிட்டத்தட்ட ஒரு வாரம் : சில சமயங்களில் பல வருடம் கடந்தும் திரும்பத் திரும்ப மனதில்  ஓடிக்கிட்டு இருக்கும்

அது எங்க அம்மாகிட்டே இருந்து வந்த ஜீன்ஸின் விளைவு. 

இதில் இரு மொழித்திட்டம்  மும்தொழித்திட்டம் என்றெல்லாம் இல்லாமல் எல்லா மொழியிலும் சில வாக்கியங்கள் வார்த்தைகளை நான்  காதலித்தேன் .

உதாரணமாகக் காட்டில் காய்ந்த நிலா என்பதை   ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துறாங்க.. என்று பொருள் கொள்வதில்லை  . மாறாக Full many a flower is born to blush unseen  என்பதன் தமிழக்கமாகத்தான்  நான் நினைப்பதுண்டு .

தெலுங்கு இந்தி ஜப்பானிய மொழி எல்லாவற்றிலுமே அழகான வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன த்சுந்தொக்கு என்ற   ஜப்பானிய மொழி வார்த்தை பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருக்கிறேன் . அதன் லிங்க் இதோ . படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம்  http://abayaaruna.blogspot.com/2013/12/blog-post_25.html

இளம் வயதில் அந்த வயதிற்கேற்பப்   புதிதாக( அதான் இங்கிலீஷுலே ஓவரா ஸீன்போடறது  ) ஏதாவது ஆங்கில வார்த்தைகள்  கண்ணில் பட்டால் அதை அடுத்த ஒரு வாரத்திற்குப்  பாக்கிறவங்ககிட்டே வலுக்கட்டாயமாக எப்படியாவது உபயோகிச்சு பந்தா காட்டறது

 அவங்க பேந்த பேந்த முழிக்கிறது ,அட இவ இவ்வளவு அறிவாளியான்னு நம்பள பாத்து ஆச்சரியமாய் பாக்கிறது இதையெல்லாம்ரொம்பப் பெருமையா நெனச்சுக்கிட்டு இருந்தேன் .

டெல்லியிலே இருந்த போதுஎன் கூட வேலை செய்த பாதிப் பேருக்கு  இந்தி மீதுள்ள அதீத பாசத்தால் இங்கிலீஷ் எழுத்து ஆறுக்கு மேலென்னாலே சறுக்கிடுவாங்க . அப்புறம் கல்யாணம் குடும்பம் இத்யாதிகளை நடுப்பறயும் நிறையப்  படிச்சேன்  ஆனால் முரசு கொட்டிக்கிறதை விட்டாச்சு .

 அப்படி நான் ரொம்ப ரசிச்ச வார்த்தைகளில் ஒண்ணுதான். Serendipitous .

இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் எதோ ஒன்று கண்டு பிடிக்க என்று ஒரு ஆராய்ச்சியை ஆரம்பித்தால் தற்சயலாக முக்கியமான  வேறு ஒன்றைக் கண்டு பிடிப்போம் .மைக்ரோவேவ்  கொய்நைன் , எக்ஸ் ரே  பேஸ்மேக்கர் எலெஸ்டி (LSD) எல்லாமே இப்படிப் பட்ட கண்டு பிடிப்புகள்தானாம் .இதுபோலத் தற்செயலாகக் கண்டு பிடிப்பதற்கு இந்த வார்த்தை உபயோகிக்கிறோம்

இந்த வார்த்தையோட ஸ்பெஷாலிட்டியே  உதடுகள் ஒன்றோடு ஒன்று ஓட்டும். நாக்கு யதாஸ்தானத்தை விட்டு மேலே நகர்ந்து மேலண்ணத்தைத் தொடும் அப்படியே மேல் பல் வரிசையின் பின் புறத்தையும் ஒரு தட்டு லேசாத் தட்டிட்டு தான் திரும்ப பழைய பொசிஷனுக்கு வர முடியும் .   நான் காதலித்த வார்த்தை ஒன்னும் லேசுப் பட்ட வார்த்தை இல்லை .நிறைய பேருக்கு இந்த வார்த்தையே தெரியாது , அப்படியே கண்ணில் பட்டாலும் கண்டுக்காமா கடந்து போயிடுவாங்க .

சரி இப்ப எதுக்கு இந்த ஒரு வார்த்தைக்கு இப்படி தோரணம் கட்டி விழா எடுத்து அப்படீங்கிறீங்களா சொல்றேன்

 போன வாரம் ஒரு முகூர்த்த நாளில் நானும் தற்செயலாக ஒரு கண்டுபிடிப்பு செய்தேன் . பேப்பர் டிவி இதிலெல்லாம் வரவில்லை

எனக்குச்    சமையலறையில் டப்பாக்களில் பேர் எழுதி ஒட்டி வைக்கும்   பழக்கம்    உண்டு . மைதா என்று எழுதியிருந்த டப்பா ரொம்ப நாளாகத் திறக்கவே இல்லை . சரி இன்னைக்கு நான் (NAAN ) பண்ணிடனும் என்று நினைத்துக் கொண்டு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொஞ்சமே கொட்டினேன் . நான் ( NAAN )பண்ணலாமென் று கொஞ்சம் உப்பு சர்க்கரை   எண்ணெய் கருப்பு எள்ளு  பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எல்லாம் கர்ம சிரத்தையுடன் போட்டுக் கரண்டி கொண்டு பிசைந்தப்புறம் தான் தெரிந்தது அது மைதா மாவு அல்ல அரிசி மாவு என்று .

சரி என்னடா பண்றதுன்னுட்டு அதிலேயே கொஞ்சம் குடமிளகாய் பச்சைக் கொத்தமல்லி  தேங்காய்ப்பூ  எல்லாவற்றையும் சரியான அளவில் கொட்டிப்   பிசைந்து ஒரு அரிசி அடை மாதிரிப் பண்ணினேன் .   

பார்த்தால் பார்வைக்கு  எதோ ஒரு புது  மாதிரி  டிபன் போல  இருந்ததும்  இருந்த  டால்  ( நானுக்குத் தொட்டுக்க ணும் என்று பண்ணியது ) கூட்டு எல்லாவற்றையும் அணிவகுப்பு நடத்தும்படி செட் பண்ணி    ஒரு    போட்டோ எடுத்து என் மகன்கள் மருமகள்கள் இருக்கும் வாட்சப் குரூப்புக்கு  அனுப்பிட்டேன் ..போட்டோ    ஷூட்முடிஞ்ச  அப்புறமா எப்படித்தான் இருக்கு என்று சாப்பிட்டுப் பார்த்தால் சூப்பரோ சூப்பர் டேஸ்ட். 

தொட்டுக்கை எல்லாம் இல்லாமையே ஒரு அரிசி வடை   மாதிரி இருந்திச்சு   .

அப்புறம் இந்த வாரமும் ஒரு தடவை பண்ணி ஆசை   தீரச் சாப்பிட்டாச்சு.

.இப்ப சொல்லுங்க  உலக வரலாற்றில் இடம் பெறவில்லை என்றாலும்   என்  கண்டு பிடிப்பு ஒரு அமர்க்களமான  serendipitous கண்டு பிடிப்பு   இல்லையோ?

நான் செய்த serendipitous அடை இதோ


 


 

 

18 comments:

  1. நான் படித்த அங்லோ இந்தியன் கொன்வென்ட்ல உருப்படியா சொல்லிக்கொடுதது இங்கிலிஷ்.வெலுதுவங்கிடிவோம்.மீதியெல்லம் சலவைக்கு பொட்டு இந்த seredipitய்,rendevous,இதெல்லாம் ஒரு ப்புண்ணாக்குகு பெறத விஷயங்கலயெல்லாம் சகட்டுமேனிக்கு பேச சொல்லிகுதுது அனுபினங்க.எங்க அம்மா வயதெறிச்சல நல்லா வாங்கி kattikitanga எங்க nuns . ஓன்னுத்துக்கும் லாயக்கு இல்லனலும் வஅய் jasthi ன்னு சொல்வாங்க.
    Adede அடை pramadham..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. That பேப்பர் டிவி ல் லாம் வரவில்லை-- humor 😄😍

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை இளவேனில்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஏகப்பட்ட வார்த்தைகள் இருக்குமே

      Delete

  5. ////இளம் வயதில் அந்த வயதிற்கேற்பப் புதிதாக( அதான் இங்கிலீஷுலே ஓவரா ஸீன்போடறது ) ஏதாவது ஆங்கில வார்த்தைகள் கண்ணில் பட்டால் அதை அடுத்த ஒரு வாரத்திற்குப் பாக்கிறவங்ககிட்டே வலுக்கட்டாயமாக எப்படியாவது உபயோகிச்சு பந்தா காட்டறது////


    இப்ப சின்ன வயசு புள்ளையாட்டம் ஒரு ஆங்கில வார்த்தையை உபயோகப்படுத்தி ஒரு ஸீன் போட்டுடுட்டீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தவறுதலாக மைதாமாவுக்குப் பதில் அரிசிமாவு போட்டதை அழகாக serendipitous என்கிற யாரும் அவ்வளவாகக் கேள்விப்படாத ஒரு வார்த்தை யோடு கோத்துவிட்டு பில்டப் .... லாக்டவுன் நேரத்தில் மட்டுந்தான் இதுக்கெல்லாம் நேரம் இருக்கும் . பில்டப்பிலும் ஒரு திருப்தி இருக்கத் தானே செய்கிறது

      Delete
  6. இந்த வார்த்தையை நான் வேறெதிலோ படித்து சில வருடங்களுக்குமுன் அர்த்தம் தேடிப்பார்த்தேன்.  மறுபடி நினைவூட்டினீர்கள்!  

    மைதா அரிசி மாவு மாறிய விவகாரம் எனக்கு வேறொன்றை நினைவூட்டியது.  இரண்டு நாட்களுக்கு முன் வொயிட் சிமெண்ட் கேட்டார் வீட்டு வேலைக்கு வந்த பிளம்பர்.  எடுத்துக் கொடுத்து விட்டு எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  அவரும் ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி தயார் செய்து பூசி விட்டு பிறகு சந்தேகப்பட்டு அந்த பாக்கெட்டை எடுத்துக் பார்த்துவிட்டுச் சொன்னார்...  "ஸார்...    இது சபீனா!"

    அப்புறம் சரியாய் எடுத்துக் கொடுத்தோம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      இது மாதிரி தவறுதல் எல்லோருக்குமே நடக்கிறது

      Delete
  7. சுவாரஸ்யமான பதிவு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. அருணா இந்த வார்த்தை மகன் எனக்குச் சொல்லிக் கொடுத்தான்.

    மைதா அரிசி மாறியது போல எனக்கு இங்கு ரவையும் சர்க்கறையும் ஒரு முறை மாறியது!!

    நீங்க செய்திருப்பது அரிசி ரொட்டி/அக்கி ரொட்டி கன்னடால/பத்ரி மலையாளத்துல. ஒரே ஒரு ப்ராசஸ் தான் வேறு ஆனால் இப்படியும் செய்வதுண்டு.

    கீதா



    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    இது மாதிரி தவறுதல் கள் குடும்ப வாழ்க்கையில் சகஜம் . இந்த அக்கி. ரொட்டியில் சிலர் வெங்காயம் மட்டும் போட்டு விட்டு அரிசிக்குள் புதைத்து விட்டு ஒரு ஆறு மணி நேரம் கழித்துச் சாப்பிடுவார்கள் செம்ம டேஸ்ட்டா இருக்குமாம்

    ReplyDelete
  10. சின்னச் சின்ன தவறுகளிலிருந்து தான் புதியதாக சிலவற்றை கற்றுக் கொள்ள முடிகிறது! :) இனிய அனுபவம்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete