Sunday 9 August 2020

பூ மாதிரி சப்பாத்தி

 


இட்லி  பூ மாதிரி பண்ணினோமே  இதையே கொஞ்சம் விரிவாக்கம் பண்ணி சப்பாத்தி பண்ணிப் பாக்கலாமேன்னு இன்றைக்கு முயற்சி பண்ணினேன் .

சும்மா சொல்லக்கூடாது நல்லாவே வந்திருக்கு , பூ  மாதிரிஇருக்கு

 ஆனால்  வட்ட வடிவச்   சப்பாத்தியைப்   பூ வடிவத்தில்    கொண்டு வருவதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கு  முதல் சப்பாத்தி ஒரு மாதிரியாக ஆனால் பரவாயில்லை ரகத்தில் சேர்த்தி

இரண்டாவது ஓகே . 



பூ வடிவத்திற்காகச்  சப்பாத்தியை ஆறாகக் கூறு போட்டுக் கொண்டேன் .பிறகு அதில் ஓரங்கள் கூர்மையாக இருக்கும் ஒரு எவர்சில்வர் கப்பு  கொண்டு .நுனிப் பாகத்தால் ஒரு  கால் வட்ட வடிவம் வருமாறு கட் பண்ணினேன் . நடுவில் ஒரு வட்ட வடிவத்திற்கு லிப் ஸ்டிக் டியூப் உபயோகித்து கிட்டத்தட்ட பூ மாதிரி இருக்கிறபடி பார்த்துக்கொண்டேன் .



   நான் உபயோகித்த உபகரணங்கள் இவைதான்  



எனக்குச்   சப்பாத்தி  தேய்க்கும்  கல்லில்   அவ்வளவாக மாவு     பரப்பிச்   சப்பாத்தி தேய்க்கும் வழக்கம் இல்லை  அதனால் சப்பாத்தி கல்லிலிருந்து எடுக்கவே சிரமமாக இருந்தது.  நாளைக்குச்    செய்யும் போது மாவு நிறையச் சேர்த்து தேய்க்கணும் .  

ஒட்டுப் போட்ட இடங்களில் லேசாகச்  சப்பாத்தி குழுவி கொண்டு தேய்த்தால் நாம் பண்ணின ஒட்டு வேலைகள் தெரியாது     

 இதே போல் ஹார்ட் ஷேப்பிலும் செய்தேன் அது கூட பரவாயில்லை ரகம் தான்.


17 comments:

  1. சூப்பர்!!

    நல்லா வந்திருக்கு

    கீதா

    ReplyDelete
  2. ஹார்ட் ஷேப்பில் நாண், சப்பாத்தி அப்புறம் பிஸ்கட் கட்டர் வைத்து விலங்குகள் ஷேப்பில் சப்பாத்தி என்று ஒரு காலத்தில் செய்தது. பூரி கூடச் செய்யலாம் ஆனால் பொரியும் போது விரியும் இல்லையா அப்போ அந்த ஷேப் தெரிவது போல் கொஞ்சம் டீப்பா கட் செய்தால் விரியும் போதும் தெரியும். குறிப்பா ஹார்ட், விலங்குகள்

    என்னன்னா சிலப்போ பூரி நம்மள டபாய்ச்சுடும். பொங்கி விரியாமல். கட் செய்யும் போது நடுல எங்கியாச்சும் கீறல் விழுந்தா போச்சு. பூ நல்லா வரும்.

    அசத்தீட்டீங்க!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பூரிநீங்க சொல்றமாதிரி கால வாரி விடும் .செய்து பார்க்கணும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. POLUDHUM, RASANAIYUM SERNDHAL VILAYIYUM SADHANAI PATIALIL IDHUVUM ADANGUM.JAPANESE IL THERNDHAVARKU IDHU EMATHIRAM

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. Super Sensei! Looks like you are good in everything. Making of this type of chapathi needs patience and skill. Looks attractive and 😋Yummy.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. அருமையாக வந்து இருக்கிறது பூ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. இப்படி கஷ்டப்பட்டு பண்ணி அதன் பின் அதை பிச்சு பிச்சுதான் சாப்பிடப் போறோம்... இருந்தாலும் உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளுக்குப் பிடிக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. பூ சப்பாத்தி அழகா வந்திருக்கு.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. அதானே, இட்லிமட்டும் தான் பூப்போல செய்ய முடியுமா என்ன?

    பூ வடிய சப்பாத்தியும் இதய வடிவ சப்பாத்தியும் இதயத்தை கவர்ந்தன.

    ஒருவேளை சாதாரணமாக சப்பாத்தி செய்துவிட்டு பின்னர் நாம் விரும்பும் வடிவத்தில் வெட்டிக்கொள்வது இன்னும் வேலையை இலகுவாக்கும் என்பது என் யோசனை.

    ReplyDelete