Sunday 2 August 2020

பூ மாதிரி இட்லி

எங்க பெரிய பையன் சின்ன வயசில் பண்ணிய அலப்பறைக்கு அளவே இல்லை . 
அவனுக்கு இட்லி தயிர் இது ரெண்டும் பிடிக்காது . 

 இட்லியாவது கொஞ்சம் பரவாயில்லை .தயிர் சாதம் பக்கத்தில் உக்காந்து யாராவது சாப்பிட்டால் ஓடிப் போய்விடுவான் . 

ஆனால் இட்லி உடம்புக்கு நல்லது என்று அவனை எப்படியாவது சாப்பிட வைக்கணும் என்று எங்க அப்பா வேறு ஏதேதோ ஜிஞ்ஜின்னாக்கடி வேலை பண்ணிப் பார்த்தார் , எதுவுமே நடக்கலை . 

 என் பையனின் நாக்கின் சுவை அரும்புகள்செம . கொஞ்ச வித்தியாசமான டேஸ்டாக இருந்தாலும் கண்டு பிடிச்சுடுவான் .

தக்காளி  ஜூசுஎன்றால் ரொம்பப் பிடிக்கும். 
 ஒரு தடவை  தக்காளி ஜூசுகேட்டான்
 தக்காளி எங்க ஏரியாவில் சில சமயங்களில் கிடைக்காது .
அப்படியே தக்காளி கிடைத்தாலும் சின்ன சைஸாக இருக்கும் எனவே சாத்துக்குடி ஜூஸில் கேசரிப் பவுடர் கொஞ்சமாகக் கலந்து கொடுத்தோம் .

 வயசு என்னவோ மூணு தான். இது பாத்தா தக்காளி ஜூசு மாதிரி இருக்கு சாப்பிட்டா சாத்துக்குடி ஜூசு மாதிரி இருக்குன்னுட்டு கண்டு பிடிச்சுட்டான்.

  அவனை ஏமாத்தறதும் கஷ்டமாக இருந்திச்சு . 

 எங்க வீட்டில இருந்த பணிமனுஷி வேறே எங்கே இருந்துக்கா இந்தப் புள்ளைய புடிச்சாந்தீங்க என்று விளையாட்டாகக் கேட்பாள் . 

 தினம் ஆபீஸ் முடிந்து வந்ததும் ஒரு பஞ்சாயத்து பண்ண வேண்டியிருக்கும் . சில நாட்கள் வினோதமான வழக்குகள் இருக்கும் பையன் அவளை பத்தியும் அவள் இவனைப் பத்தியும் குறை சொல்வார்கள் . நான் தார்மிக முறைப் படி என் பையனுக்கே சப்போர்ட் பண்ணுவேன் ..

 ஒரு நாள் சாயந்திரம் ஆஃபிஸ்லிருந்து வந்ததும் பையன் இந்த அக்கா இன்னைக்கு என்னை ஏமாத்தப் பாத்துச்சு , தாத்தா வேறே அக்கா சொல்றது தான் சரின்னாங்க பேசாம ரெண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிச்சுடுன்னான்.

ரெண்டு பேருமா சேந்து என் பையனை ஏமாத்தினீங்களாமே என்ன ஆச்சுன்னேன் .
 ம்....உன் பையனையே கேளுன்னாங்க . 
 எங்க அப்பாவுக்கு அன்னைக்கு எல்லா கிரகமும் நீச்சத்துலே போலிருக்கு 

பையன் அம்மா இன்னைக்கு காலையில என்கிட்டே வந்து தாத்தா “டேய் i தம்பி இட்லி சாப்பிடுடா பூ மாதிரி இருக்கு” ன்னு சொன்னாங்க. 

 பையன் சின்னப்ப புள்ள தானே அவன் எதோ சாமந்திப்பூ ரோஜாப்பூ மாதிரி இருக்கும்ன்னு நெனச்சுக்கிட்டு “சரி குடு”ன்னுருக்கான். 

இவங்க என்னா பண்ணியிருக்காங்க  எப்பவும் பண்ற அதே இட்லியைக் கொண்டாந்து தட்டிலே போட்டுக் குடுத்திருக்காங்க .

 இவருக்கு ஒரே ஷாக் . இருக்காதா பின்னே .

“பூ …பூ ன்னு சொல்லிட்டு இட்லியையே கொண்டாந்து வைக்கிறீயே என்னையா ஏமாத்தப் பாக்குறீங்க “அப்படீன்னு லா பாயிண்ட் எடுத்து விட்டிருக்கான் . 

 பணி மனுஷி சின்னப் பையன்னு நாம பேசிகிட்டு இருக்கிற எதிர் பார்ட்டி எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு தெரியாம “தம்பி இங்க பாரு மல்லிப்பூ மாதிரி சா ஃ ப்டா இருக்கு “ன்னு சொன்னதும் என் பையன் ரொம்பவே கடுப்பாயிட்டான் . 

சாமிகிட்ட இருந்த மல்லிப்பூவை எடுத்துக் கொண்டாந்து காமிச்சு எவிடென்ஸோட அவங்க தப்பா சொல்றாங்க . ஏமாத்தப் பாக்குறாங்க அப்படீன்னு புரூவ் பண்ணிட்டான். 

 மீண்டும் தளராத எங்க அப்பா இது பாருடா பஞ்சு மாதிரி இருக்கு அப்படீன்னுருக்காங்க . 

இவனும் விடப்பிடியா காட்டன் ரோல் கொண்டாந்து காமிச்சு “இது பஞ்சு இது இட்லி”ன்னு தெளிவா அறிவுப் பூர்வமா ஆதாரத்தோட ஒரு சுப்ரீம் கோர்ட் லாயர் ரேஞ்சுக்கு அசராம ஆர்க்யூ பண்ணியிருக்கான் . 

 உங்க அம்மா இட்லி யைப் பஞ்சு மாதிரி பூ மாதிரின்னு எல்லாம் சொன்னதே இல்லையா ன்னு எங்க அப்பா பணிமனுஷி கட்சிக்குத் தாவி விளக்கம் கேட்டிருக்காங்க 

 சிங்கிளா இருந்தாலும் சிங்கமில்லையா என் மகன் 

கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல் "எங்க அம்மா பொய்யே சொல்லமாட்டாங்க இட்லியை இட்லிம்பாங்க பூவு பஞ்சுன்னெல்லாம் பொய் சொன்னதே இல்லை"யின்னு ஒரே அடியில் ரெண்டு பேரையும் ஆல் அவுட் ஆக்கிட்டான் .

 நாலு வயசிலேயே களத்திலே கடைசி வரைக்கும் நின்னு கலங்காம விளையாண்டிருக்கான் என் பையன் .

.அது புரியாம என்கிட்டேயே எங்க அப்பா "நான் பெத்த பசங்கள்லாம் இப்படி சரிக்கு சரி பேச மாட்டாங்க அப்படீன்னாங்க . 
 பஞ்சாயத்தில் தீர்ப்பு அடுத்தநாளைக்கு சொல்றேன்னு அவையை ஒத்தி வெச்சாச்சு. 
 அடுத்த நாள் காலையிலே சீக்கிரம் எழுந்து இது போல அழகா பூ மாதிரியான இட்லி பண்ணிவெச்சுட்டேன் . 




 யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிட்டு என் பையன் எழுந்ததும் சம்பந்தப் பட்ட பார்ட்டிங்களைக் கூப்பிட்டு சொம்பில் தண்ணி துண்டு சகிதம் ஒரு கட்டிலில் உட்கார்ந்து நான் பண்ணிய பூ இட்லி யை டிஸ்பிளே பண்ணி.

 “இதோ இது தான் பூ மாதிரி இட்லி. எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க என் பையன் சொன்ன இட்லி இது தான் தப்பா புரிஞ்சுகிட்டு வெட்டியா என்பையனை வம்புக்கு இழுத்த ஒங்களுக்கு நாலு நாளைக்கு காலை பதினோரு மணி காபி கட் என்று தீர்ப்பு வழங்கினேன். 

தட்டில் இட்லிப்பூ . பையன் முகத்தில் மத்தாப்பு

19 comments:

  1. அரூமையாna தாய். வேடிக்கையாna மகன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. அருமையா சமாளிச்சுட்டீங்க!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. அடடே இட்லி பூ மாதிரியே இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. ஹா ஹா ஹா ஹா நிறைய நினைவுகள் என் மகனுடனான நினைவுகள்.நல்லா சொல்லிருக்கீங்க

    எத்தனையோ பாத்துட்டம் இத பாத்துரமாட்டமா!!!!!

    அவன் பெயரே காம்ப்ளான் பாய் தான் சின்ன வயசுல. இதைப் பத்தி ஒரு பதிவு போடலாம்ன்ற அளவுக்கு மேட்டர்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. சின்னக் குழந்தைகள் இருக்கும் அம்மாக்கள் க்ரியேட்டிவாக, ஈசி கோயிங்கா, நாசுக்கா திரை மறைவில் சமாளிக்கத் தெரிஞ்சு இருக்கணும்னு நான் அடிக்கடி சொல்லுவேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. நல்ல சமாளிப்பு. என் மகளும் சிறு வயதில் சாப்பிட ரொம்பவே படுத்துவாள். வெள்ளையாக இருக்கும் எந்த பானமும் வேண்டாம் - அதனால் பாலில் ரூஹஃப்சா கலந்து ரோஸ்மில்க் மாதிரி கொடுக்க வேண்டியிருக்கும்! இப்போது வரை தயிர் என்றால் காத தூரம் ஓடுவாள்! :) மோர் ஓகே!

    ReplyDelete
  10. ஆம் சில குழந்தைகள் சில சாப்பாடு மட்டுமே விரும்புகின்றன பெரியவன் இன்னமும் சப்பாத்தி வகைகள் விரும்புகிறான் தயிர் வலுக்கட்டாயாமாகக் குடுத்துப் பார்த்தால் துப்பி விடுகின்றனர்

    ReplyDelete