போளி ஐஸ்கிரீம்
படிக்கிறபோது சயின்சு புத்தகத்தில் ஏதாவது ஒரு விதி அல்லது உபகரணம் ஒன்றின் பட விளக்கத்துடன் இன்னார் கண்டு பிடித்தார்கள் என்று பாடம் வரும் . அதில் சைடில் அதைக் கண்டு பிடித்தவர்கள் படம் அதாவது போட்டோ மாதிரி ஒன்று போடுவார்கள். . இந்த விதி உபகரணம் பற்றிய கேள்வி ஒன்று கட்டாயம் அதன் நீளம் விவரத்தைப் பொறுத்து ரெண்டு மார்க்கு அஞ்சு மார்க்கு கேள்வியில் வரும்
அதைப்
பார்க்கும் போது எல்லாம்
எனக்கு நாமளும் வளர்ந்து
பெரிய ஆளானதும் பத்து மார்க்கு பெரிய கேள்வியில் வர மாதிரி(எல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சலைக்
கொட்டிக்கத்தானே தவிர
உலகு க்குப் பெருமை
சேக்க எல்லாம் இல்லை
) ஏதாவது கண்டு புடிக்கணும்ன்னு
பெரிய பிளான் இருந்தது
. படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வேலை கிடைச்சிட்டதாலே இந்த
உலகம் ஒரு மாபெரும்
கண்டு பிடிப்பை இழந்து
விட்டது.
சரி போளி செய்தாகி
விட்டது . இனிமேல் ஐஸ்கிரீமை வைக்கணும்
.
இது பெரிய வேலையான்னெல்லாம் கேட்கக்
கூடாது .
அங்கே தான் இருக்கு
சூட்சமமே .
நானும் முதலில்
ஆர்வக் கோளாறில் விஞ்ஞானி
நியூட்டன் கண்டுபிடிப்புக்கு நிகரான எதோ ஒன்றைக்
கண்டு பிடிக்கப் போகிறோம்
என்று நினைத்துக் கொண்டு
அவசர அவசரமாக சூடாக
இருக்கிற போளி யில் நெய் மேலே
தடவி உள்ளே ஐஸ்கிரீம்
வைத்ததும் அது கல்யாண
வீடுகளில் பக்கத்துக்கு
இல்லை வரை பாஞ்சு
ஓடுற ரசம் மாதிரி
ஓடிருச்சு என்னடா இது கொரோனா
தடுப்பூசிக்கு நிகரா இப்படி
டஃ ப் கொடுக்குதேன்னு
நொந்துட்டேன்.
சரி.எப்படியாகப் பட்ட அறிய கண்டு பிடிப்புகளுக்கும் ஒரு தடை வருவது சகஜம் தானே என்று தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களை
நினைத்து ( இதெல்லாம் டூ மச்
அப்படீன்னு எனக்கும் தோணுச்சு) என்னை
நானே உசுப்பேத்திக்கிட்டு மறுபடியும் சோதனையைத் தொடர்ந்தேன்
சரி சாப்பிட்டுப் பாப்போமேன்னு
பார்த்தால் அப்படி ஒரு டேஸ்டு. இனிமே என்னைக்கெல்லாம் போளி பன்றேனோ அன்னைக்கெல்லாம் கட்டாயம் ஐஸ்கிரீம் கட்டாயம் வாங்கிடணும்ன்னு தீர்மானிச்சாச்சு
.
நான் போளி கோதுமை மாவில் தான் செய்தேன். மைதா மாவில்
செய்யவில்லை . எனவே மஞ்சள் நிறத்தில் இல்லை . டேஸ்ட் நிஜமாகவே படு பிரமாதம்
. காப்புரிமை வாங்கலாமென்றால் வெளியில் போக
முடியாத நிலை .
ஸயன்ஸில் ஒன்றும் பெரிதாகக் கண்டு பிடிக்கவில்லை என்றாலும் எதோ செயற்கரிய செய்த ஒரு திருப்தி .
உலக மாணவர்கள் அத்தனை பேருக்கும் நல்ல காலம் போல தப்பிச்சுட்டாங்க .
நல்லா கவனிச்சுக்கோங்க ஐஸ்கிரீம் போளி இல்லை
அப்படீன்னாக்க தேங்கா போளி பருப்பு போளி காரப் போளி மாதிரி இல்லை
அதெல்லாம் காரணப் பெயர் .
போளி உள்ளே அதைப் பூரணமா வச்சுப் பண்ற அயிட்டம் .
இது போளி ஐஸ்கிரீம்
அதாகப் பட்டது ஐஸ்கிரீம்
உள்ளே இருக்கும்
ஆனால் பூரணமாக இல்லை
.தப்பா சொல்லிடாதீஙங்க
தலைப்பை ஆராய்ச்சி பண்ணித்தான் கவனமாக வச்சிருக்கேன்
Nice , I think it's worth trying
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇந்தப் போளி, போலி இல்லாதவரை மகிழ்ச்சியே...
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇவ்வளவு எள்ளலுடன் ஒரு ரெசிப்பி வாய்ப்பே இல்லை
ReplyDeleteவாழ்த்துகள்
வருகைக்கு நன்றி
Deleteசைனிஷ் உணவகத்தில் பிரைடுஐஸ்கிரிம் என்று ஒரு டேஸ்டி ஐட்டம் உண்டு இது அது மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அது ball போல உருண்டை வடிவில் இருக்கும். நல்ல முயற்சி. Will try sometime. Written with wit and humor😆
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஅட்டே...! ஐடியா செம...
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇதுவும் சயின்ஸ் தான் - ஹோம் சயின்ஸ்.-- பூரி உருளை கிழங்குபோல இதை சப்பாத்தி ஐஸ்க்ரீம் என்றுகூட சொல்லலாமோ?
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநினைத்தே பார்க்க முடியாத செயல்முறை. ஆச்சர்யம்தான். நாங்கள் எங்கே இதைச் செய்துபார்க்கப் போகிறோம்?!!
ReplyDeleteநாங்கள் பெரிது படுத்திப் படிக்க முடியும் என்றாலும் நீங்கள் பதிவு வெளியிடும்போது Font சைஸ் கொஞ்சம் பெரிதாக போடலாமே...
வருகைக்கு நன்றி
Deleteஃ பான்ட் சைசு பெரியதாகத்தான் எனக்கு வருகிறது நான் கேட்டு சரி செய்கிறேன் போலி செய்வது ஈஸி . நான் அடிக்கடி செய்வேன் இந்தப் பதிவில் கொடுத்துள்ள லிங்கைப் பார்க்கவும்
நல்ல யோசனை. போளி எனக்கு மிகவும் பிடித்தது! ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்றாலும் இப்போதெல்லாம் சாப்பிடுவது இல்லை! போதாக்குறைக்கு பொன்னம்மான்னு இப்போது தீதுண்மி காலம் வேறு! அதனால் ஐஸ்க்ரீம் பக்கம் சென்று சில மாதங்கள் ஆகிவிட்டது. பதிவு பார்த்து முயற்சிக்கத் தோன்றுகிறது! :)
ReplyDeleteபோதாக்குறைக்கு பொன்னம்மா...!!!
Deleteபுதிய சொலவடை! இப்போதுதான் கேட்கிறேன் வெங்கட்.
ஹாஹா... அம்மா பெரியம்மா சொல்லிக் கேட்டதுண்டு ஸ்ரீராம்.
Deleteவருகைக்கு நன்றி பெரியம்மா அப்டேட் பண்ணிக்கொண்டேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDifferent Try mam
ReplyDeleteவருகைக்கு நன்றி
DeleteA very different try
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteபோளி விருப்பமானதுதான்
ReplyDeleteஅருமை
வருகைக்கு நன்றி
Deleteபுதுசாக் கீது!! இரண்டுமே பிடிக்குமே ஆனால் ரெண்டுமே சாப்பிட முடியாது.
ReplyDeleteஎப்பவாச்சும் கொஞ்சமேனும் சாப்பிட்டுப் பார்த்தா போச்சு!!
போளி பூரணம் வைச்சும் கூட ஐஸ்க்ரீம் செஞ்சுரலாம் போல! ஆனா ஃப்ரிட்ஜ் இல்லை!! ஹா ஹா
கீதா
வருகைக்கு நன்றி
Deleteகிட்டத்தட்ட போளி போட்டு பாயாசம் போட்டுச் சாப்டுவோமே எங்கூர் ஸ்டைல்ல அது போல இருக்கு!! பாயாசம் சூடா இருக்கும் அல்லது ஆறி. சில்லுனு போட்டா?!
ReplyDeleteகீதா
பாயாசம் போட்டுச் சாப்பிடுவது மங்களூர் போளியாக்கும். சீனி போட்டு பூரணம் மெல்லிசா சப்பாத்தி போல தேய்ப்பது
ReplyDeleteகீதா
வருகைக்கு நன்றி .ஓ பாயசம் போட்டும் சாப்பிட்டுப் பாத்துட்டாப் போச்சு
ReplyDelete