Thursday, 30 July 2020

காபி எனும் மந்திரம் (தந்திரம்?)

வீட்டில் அமைதி நிலவ சண்டை சச்சரவு நீங்க இந்த மந்திரத்தை 108 முறை சொல்லணும் இந்த பரிகாரம் செய்யணும் இந்த நம்பருக்குப் போன் பண்ணினால் தீர்வு சொல்லப் படும் அது இது என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள் . 

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிப் பலரது வாழ்வின் இன்றியமையாத பானமான காபிக்கும் அதே பவர் இன்னும் சொல்லப்போனால் கூடவே இருக்கிறது என்பதை இதைப் படித்தபின் நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள் .

 சில வருடம் நான் முன்பு ஒரு முறை என் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன் . கணவன் மனைவி இருவருக்குமே காபி மீது அலாதி பிரியம் .

ஒரு இரண்டு நாட்கள் நான் அவர்கள் வீட்டில் தங்குவதாக பிளான். அவர்கள் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு டவுனில் குடியிருந்தார்கள் .

.ஆனால் காபித்தூள் மட்டும் திருச்சியில் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் தான் வாங்கு வார்கள் . எப்படியும் யாராவது திருச்சிக்கு அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அடிக்கடி போவார்கள் .

அவரின் மற்ற உறவினர்கள் தெரிந்தவர்கள் நிறைய பேர் தஞ்சையில் இருந்தனர்.அதனால் தஞ்சைக்குப் போவது என்பது அவர்களுக்கு அடுத்த தெருவுக்குப்போகிற மாதிரி. 

நான் போயிருந்த அன்று அவரின் கணவர் தஞ்சை சென்றிருந்தார் . போன மனுஷன் ராத்திரி 8 மணி ஆகியும் வரவில்லை . மனைவிக்கு சீக்கிரம் சாப்பாட்டை முடித்து விட்டால் மற்ற வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டுப் படுக்கலாம் என்ற எண்ணம் . 

அதனால் 8 மணிக்கு ஆரம்பித்த திட்டு முதலில் ஸ்லோ ஸ்பீட்ல தான் போய்கிட்டு இருந்திச்சு. பிறகு கொரோனா ஸ்பீடுக்கு வேகம் எடுத்துச்சு . வார்த்தைகளின் வீச்சு நிமிடத்துக்கு 500 இருக்கலாம் . 

டின்னர் சாப்பிடும்போது கூடவே டெஸர்ட் குடுப்பாங்களே அது மாதிரி திட்டும்போது இதற்கு முன்பு எத்தனை தடவை இது மாதிரி லேட்டாக வந்தார் அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறுகள் இவைகளை தேதி மாதம் வருடம் வாரியாகப் பட்டியலிட்டு பயங்கரத் திட்டு . 

அதைக் கேட்டு என் பொது (வரலாற்று அறிவு? ) அறிவு ஏகத்துக்கும் வளர்ந்து விட்ட திருப்தி எனக்கு.

 நேரம் ஆக ஆக எனக்கு ஹோம் பிச்சில் ஹோம் டீம் வெளையாடற மேச்சைப் பாக்கறதுக்கு முன்னாடி ஒருஎக்ஸைட்மெண்டு  இருக்குமேஅது மாதிரி எக்ஸைட்மெண்டு .

நான் நினைத்தேன் இன்னைக்கு ஒரு சம்பவமோ சரித்திரமோ அல்லது ஒரு சம்பவமே சரித்திரமாகவோ ஆகப் போகுது.அந்த சரித்திரத்தின்  மகத்தான  சாட்சியாக நாம் இருக்கப் போகிறோம் . அப்படீன்னு மனசுல சொல்லமுடியாத கிளுகிளுப்பு. 

சரி முழிச்சுகிட்டு இருந்தா சண்டை சரியாப் போடாமா விட்டுட்டா ... த்ரில் . போயிடுமோ அப்படீன்னு நெனச்சுக்கிட்டு போர்வையைத் தலை எல்லாம் மூடற மாதிரி போத்திகிட்டு படுத்துத் தூங்கிற மாதிரி பாவ்லா காமிச்சுக்கிட்டு இருந்தேன் .
 உடம்பு கொஞ்சம் கூட அசையாத மாதிரி பாத்துக்கிட்டேன் . 

நாம அசந்து  தூங்கறோமுன்னு அவங்களுக்குத்  தெரியவேண்டியது முக்கியமாச்சே....
அப்புறம் சண்டையின் சுவாரஸ்யமே 
போயிடுமில்லியா
பத்தாததுக்கு    ரெண்டு கொசு வேறே எப்படியோ போர்வை உள்ளே பூந்துகிட்டு இம்சை பண்ணுது .... ம்ஹூம் நான் அசையவே இல்லை கொஞ்சம் கூட அசையவே இல்லை. 

ஒரு ஒன்பதரை மணி இருக்கும் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. கணவர் வந்தார் . அவரும் முன் அநுபவம் காரணமா தற்காப்பு நடவடிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை . கூட அவரிடம் படித்த பையன் ஒருவனோடு தான் வந்து இறங்கினார் . கள நிலவரம் அறிய பையனைத்தான் முதலில் அனுப்பினார் . 

தான் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு பின்னாடி வருகிற ரோல் அவருக்குப் போல ..வந்த பையன் நுழையும் போதே அக்கா " இந்தாங்க காபித் தூள் " 

திருச்சியிலிருந்து எங்க அண்ணண் வாங்கியாந்துச்சுக்கா . 
அவன் போன இடத்துலே வேலை மேல கொஞ்சம் லேட்டாயிடுச்சு .
 உங்க கிட்டே கொடுக்கச் சொல்லி என்கிட்டே கொடுத்தனுப்பிச்சான். 

அதான் சாரை எங்க வீட்டுல இருக்கச் சொல்லிட்டு அண்ணண் வீட்டுக்குப் போய் நான் காபித் தூள் வாங்கியாந்தேன் .. சார் எங்க வீட்டிலேயே சாப்பிட்டுட்டாரு அக்கா"

 ஒரு சூப்பர் ஃ பைட்டு சீன் வருவதற்கான  அத்தனை முகாந்திரத்தையும் எங்கேயோ இருந்து வந்த பயபுள்ள காபித்தூளை வச்சே சல்லி சல்லிய நொறுக்கிட்டான் .

 டயலாக் ஒழுங்கா போய்கிட்டு இருக்கான்னு ஸ்கூட்டரை ஸ்டாண்டு போட்டுக்கிட்டே கவனிச்சு கிட்டு மொள்ள தான் நுழையறாரு கணவர் .

 நாய் வேறே அவர்கிட்டே ஆசையாத் தாவுது அதல கொஞ்சம் வாய்தா வாங்கிக்கிறார் கணவர் . 

ஏன் அவங்க வீட்டிலே சாப்பிட்டீங்க இங்க தான் சாப்பாடெல்லாம் இருக்கே . இது மனைவி
 பையன் தான் முந்திக்கிறான் 'இல்லக்கா இன்னைக்கு எங்க வீட்டில பருப்புருண்டைக் கொழம்பு அதனால தான் அக்கா"

கணவர் பர் ஃ பாமென்ஸை பர்ஃபெக்டா பண்ணிக்கிட்டு இருக்காரு. லூசுத்தனமா வாயை தொறந்து மாட்டிக்கக் கூடாது என்பதில் செம கவனம் .

மனைவி கேக்கிற கேள்வி எல்லாத்துக்கும் பையன்தான் பதில் சொல்லறான் பையன் அன்னைக்கு ராத்திரி இவங்க வீட்டிலேயே தான் படுத்துக்கிறான்.(முழுப் பாதுகாப்பு கருதி?) 

எனக்கோ தாங்கவொண்ணாத துக்கம் . 

ஒரு 100 எலுமிச்சை பவர் கொண்ட விம் பளபளன்னு துலக்குதுன்னு அட்வார்டைஸ்மென்டு வந்தபோது நான் நம்பலை .

ஆனா இப்ப அதே பவர் ஒரு கிலோ காபித் தூளுக்கும் உண்டு என்று உரக்கச் சொல்லுவேன்

17 comments:

  1. காபி பிரியரகளுக்கு மட்டுமே தெரியும் அதன் அருமை பெருமை!😆 நான் ஒரு காபி பிரியை. எனக்கு காபி perfect ஆக இருக்க வேண்டும்.😍 yes a lot can happen over a coffee☕ 💯👍 A nice write-up Sensei!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. 'பவர்' உண்டு... அதற்கான விளைவுகளும் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. ஹா ஹா ஹா அருணா உண்மையிலேயே காபிக்கு உண்டு அந்தப் பவர்!

    காபி பிரியையா சொல்றேன்.! ஆனா அதீதமா சாப்பிடும் பழக்கம் இல்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. Kaiyaal thoda mudiyaatha alavu choodu.. kaikuttaiyaal tumlerai porthi, chuda chuda kaapiyai directa thondaiyil vidum nabargaluku thaan kaapi magimai nanraaga puriyum

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. காபியின் ருசி வெறும் காபிப்பொடியில் மட்டும் இல்லை.  டிகாக்ஷன் சரியாகப் போடத் தெரிந்தவர்களுக்குத்தான் அந்தக்கலை கைவரும்.  அதுபோல இந்த விஷயத்தை நீர்த்துப்போக வைத்ததன் மையப்புள்ளி காபிப்பொடி ஆயினும் அதை சரியான வகையில் கையாண்ட கணவரின் சாமர்த்தியம்தான்!  நொடி பிசகி இருந்தாலும் அடிதடிதான்!    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. அடுத்த வீட்டின் சண்டை காஃபியைவிட சுவைதான் போலும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. சுவையான பதிவு - காஃபியைப் போலவே. ஆனாலும் உங்களுடன் கூட எங்களுக்கும் வந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தினைத் தந்தது! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. ������

    ReplyDelete