வட கிழக்கே அடுப்படி இருக்கக் கூடாது ,கிழக்கே பாத்து
சமைக்கணும்
என்பது போன்ற சில முக்கியமான அடிப்படை
விதிகள் தவிர எனக்கு
வாஸ்துவில்
அவ்வளவு நம்பிக்கை
இல்லை .
என் கணவருக்கு அதில் நம்பிக்கை
உண்டு .
அதன் படி எங்கள்
ஃ பிளாட்டின் தென்
மேற்குப் பகுதியில்
உள்ள
பால்கனியில் ஒரு ஸ்லாப் அமைக்கப் பட்டது .
அதில் வேண்டாத சாமான்கள் எல்லாம்
போட்டோம் ,
( வேண்டாத என்ற
பிறகுஅதை ஏன் வீட்டில் வச்சுக்கணும் என்று
வக்கீல்
மாதிரி யாரும் குறுக்குகேள்வி
கேட்கவேண்டாம் )
அதற்கு வைத்த ஒரு பாதிக்
கதவு ஒரு சுப யோக
தினத்தில் கையோடு வந்து
விட்டது .
“ அதைப்
பொறுத்த வேண்டி
ஆசாரியைக் கூப்பிட்டா
இந்த சின்ன
வேலைக்கெல்லாம் வருவது
சரிப்படாது
“
என்றபடியால்
அதை நாங்கள் இதுவரை நாங்கள் பொருத்தவில்லை.
எனவே ஒரு பாதி மூடப்படாமல்
அப்படியே உள்ளது .
எங்கள் வீட்டிற்குப் பின்னால்
உள்ள ஃ பிளாட்டில் ஒரு
நடிகை வசிக்கிறார் .
அவர் ஒரு
பூனை வளர்க்கிறார்
அது அவர் வீட்டுப்
பூனை என்று எங்கள் ஃ
பிளாட் வாட்ச்மென் சொல்லுகிறான் .
ஆனால் அந்த நடிகையிடம் நான்
அது உண்மைதானா
என்றெல்லாம்
கேட்டதே இல்லை .
பத்து வருடங்கள் பக்கத்திலேயே
இருந்தாலும் நான் இது வரை
அவரிடம்
பேசியதே இல்லை..
அந்தப் பூனை எப்போ
குட்டி போட்டாலும் அது எங்கள் வீட்டு
பால்கனி
ஸ்லாபில்
தான் குட்டி
போடுகிறது .
எங்கள்
வீட்டு ஜன்னல்
சன் ஷேடில்
புறாவுக்குப்
பருப்பு
சாப்பிட வைப்பேன் .
பால்கனிக்கு
உள்ளே புறாக்கள்
வரவே வராது,
அம்மா பூனை வெளியே போய்
விட்டால் அவ்வப்போது
பூனைக்குட்டி களை இந்தப்
புறா சீண்டுகிறதா என்னவென்று
தெரியவில்லை ,
இப்போது புறாக்கள்
பால்கனி உள்ளே வருகின்றன.
பூனை வேறு
அடிக்கடி பால்கனிக்கு வருகிறது .
பட்டா பிரகாரம் நாங்கள் உரிமை கொண்டாடி
சுதந்திரமாக பால்கனிக்குப் போக முடியவில்லை.
இரு தரப்பு ஆக்கிரமிப்புத் தொல்லை
... தாங்க முடியவில்லை .
துணி காய வைக்க
பால்கனிக்குப் போகும் போது
“ மஹா ராணி வருகிறார்
பராக் பராக் என்கிற மாதிரி
“நான் டொக் டொக்
என்று சத்தம் போட்டுவிட்டு
அதன் பின்தான் போக முடிகிறது .
இரவில்
பூனைக்குட்டிகளின் சத்தம்
.
ஆனால் நேற்றிலிருந்து
சத்தமே காணோம் .
பூனைக்குட்டிகளுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை
.
உரிமைகள்
மீட்க்கப்பட்டு
விட்டாலும் மனதை என்னவோ
செய்கிறது.
சாதாரண விடயமெனினும் சொல்லும் விதம் அழகு.
ReplyDeleteஇப்பொழுதெல்லாம் பண்டைக்காலம் மாதிரி வாஸ்து பார்க்க முடியாது காரணம் எல்லாமே ப்ளாட் ஆகிவிட்டது இஞ்சினியர்கள் அவர்களது கவுண்டிங் சரியாக வருவதைத்தான் பார்ப்பார்கள் அதுவும் இன்றைய இஞ்சினியர்கள் அப்படித்தான் இனி வருபவர்களுக்கு வாஸ்து என்றால் என்னவென்றே தெரியாது மறைந்து போகும்.
விடுங்கள்.... பிற உயிர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். நல்ல காரியம்.
ReplyDeleteஹஹஹ்ஹ அழகாக உங்கள் நடையில் அருமை! பாவம் அவர்கள் வாழ்ந்த உலகில் இடத்தில் தான் நாம் வாழ்கிறோம் மட்டுமின்றி அவர்களுக்கும் வாழ உரிமை வேண்டுமே! நல்ல காரியம் செய்து வருகிறீர்கள்..
ReplyDelete