Monday, 7 November 2016

இதற்குத் தான் ஆசைப் பட்டோமா ?


 நிறைய பேர்  என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் .
ஆசைப் பட்ட இனிப்புகள் காரங்கள் மற்றும் சாப்பிட்டு வகைகளைப் பார்த்தால் சாப்பிடத்  தோன்றும் .


ஆனால் உடம்பு வெயிட் போடும் என்கிற பயம் ,தவிர உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது போன்ற பிரச்னைகளால் சாப்பிட முடிவதில்லை .

ஆனால் அந்த ஏக்கம் மனதினில் எப்போதும் இருந்து  கொண்டே இருக்கும் அல்லது நமது நாக்கைக் கட்டுப் படுத்தாமல் இரட்டிப்பாகச் சாப்பிட்டு விடுவோம் .
அந்த பண்டகளின் மீது அப்படி ஒரு craze !

 எனக்கு பனீர் மசாலா போன்ற  பனீர் போட்ட பண்டங்களின் மீது ஒரு தீராக் காதல் இருந்தது

 ஆனால் கிட்னியில் கல் .

பனீர் சாப்பிட்டால்   கல் பெரிதாகி விடும்.

அறவே  கூடாது.

.வீட்டில் பசங்களுக்கு செய்யும் போது எனக்கென்று தனியாகச் செய்யவும் நேரமும் இருக்காது ,
உண்மையைச் சொன்னால் உ டம்பும் வளையாது .

 அதுவும் நானே சமைக்கும் போது அந்த மனம் மூக்கை வருடும் போது
நாக்கைக் கண்ட்ரோல் பண்ணவும் தெரியவில்லை .

 பிறகு ஒரு வழி கண்டு பிடித்தேன் .

பனீர்  துண்டங்களை எடுத்து வாயில் போடுவேன் நன்கு மென்று  சாப்பிடுவேன் .
ஆனால் முழுங்க மாட்டேன் .

துப்பி விடுவேன் .

வாயில் அந்த ருசி போகக்  கூடாது என்பதற்காக தண்ணீர் கூட ஒரு பத்து நிமிடம் வரை சாப்பிட மாட்டேன்  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்

இதே போல் தான் காஜூ கத்லியும்.

நாக்கில் போடுவேன்  சாப்பிடுவேன் பிறகு துப்பி விடுவேன் .

 ருசி என்பது நாக்கின் முன்  பாதி வரை தான்

என்பதைப் புரிந்து கொண்டால் போதும் .

ஆசையும் தீரும் ,

வயிறும் கெடாது .

பிறகு தோணும்

இதற்குத் தான் ஆசைப் பட்டோமா ?

 எப்படி என் ஐடியா 

5 comments:

  1. ஆஹா நல்ல யோசனையாக இருக்கின்றதே...

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்து பாருங்கள்

      Delete
  2. ம்ம்ம்.. நல்ல யோசனைதான்,. இது சாத்தியமா?

    ReplyDelete
    Replies
    1. முதலில் கொஞ்சம் முழுங்கி விடுவோம் , பிறகு பழகி விட்டால் துப்புவோமே தவிர முழுங்கமாட்டோம் முயற்சி செய்து பாருங்கள்

      Delete
  3. துளசி: அது எப்படி முழுங்காமல்...கஷ்டமான விஷயமாச்சே....முயற்சி செய்துதான் பார்க்க வேண்டும்

    கீதா: எனக்கு அந்தக் கவலையே இல்லை...மூக்கு வேலை செய்யாததால், நாக்கின் முன் பகுதியான பட்ஸ் க்கும் வேலை இல்லை. இருந்தாலும் மூளைக்கு முந்தைய நினைவுகள் மறக்குமா அந்த சைக்கலாஜிக்கல் சென்ஸ் உண்டே...அதை வைத்துத்தான் சாப்பிடுவது. ஃபேளவர் தெரியாவிட்டாலும் உணவின் மீது வெறுப்பே வரவில்லை. இப்போதும் ருசித்துப் பார்க்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சிலவற்றிற்கு எனகென்று ஒரு தனி அகராதி இருக்கு. அது எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது சொல்லத் தெரியாதே..ஸோ சுகர் பேஷன்ட் நாலும் நாக்கு வரை செலுத்திவிட்டுத் துப்பிவிடலாம் .கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைனு சொல்வதை மாற்றி..நாக்கிற்கு/வாய்க்கு எட்டியது வயிற்றிற்கு எட்டாமல்...!!! நல்ல ஐடியாதான்...

    ReplyDelete