Friday, 25 November 2016

கார் நாற்பது


 இது பதினெண்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று .

இப்பொழுது கை வசம் வேலை எதுவும் இல்லாத காரணத்தால் தமிழ் இலக்கியங்களை ப்  படிக்க ஆரம்பித்துள்ளேன் .

 நான்  ஸ்கூல் போற  சின்ன வயதில்  இந்த தலைப்பை
' என்னா இது கார் நாற்பது ன்னு ,அப்ப      லாரி நாற்பதுன்னெல்லாம் ஏன் எழுதலைன்னு கிண்டலடிச்சிருக்கேன் "

 வேலையில் சேர்ந்த பின் கன்னிமாரா நூலகத்தில் இதை எடுத்துப் படித்தேன் ஆனால்  அதன் ஆழம் புரியவில்லை .


 பிறகு இப்போது படித்தால் தான் அதன் ஆழம் புரிகிறது தவிர அதுமாதிரி எழுதுவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பது ம்  புரிகிறது .

 வயதும் அனுபவமும் பலவற்றைக் கண்டு ரசிக்கவைக்கிறது என்பது உண்மை .
இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.

திருமால், பலராமன், சிவன் ஆகிய கடவுளர்களைக் கூறியிருப்பதன் மூலம்  இது சைவம் வைணவம் இவை தழைத்து ஓங்கிய காலத்தது  என்பது புரிகிறது .

 மொத்தம் நாற்பது பாடல்கள் ..

இதில்   முக்கியமானவர்கள்  பொருளீட்டச் சென்ற தலைவன்  கார்காலம் வருவதற்குள் நான் வருவேன்என்று சொல்லிப் போனான்.

  அவன் வரவுக்குக்காகக் காத்திருக்கும் தலைவி .

அவள் தோழி .  

தலைவனின் தேர் ஓட்டும் பாகன் . அவனுக்குப்    passive role  . பேசவில்லை எதுவும்

 இவர்களை ப்  பின்னுக்குத் தள்ளும் கார்கால  வர்ணனைகள் ,

 சிறப்பாக மழை பற்றி .

 கடைசி வரை தலைவன் வந்தானா என்று சொல்லவில்லை ,
( இல்லை நான் புரிந்து கொள்ளவில்லையா என்றும் தெரிய வில்லை ).

வந்தன செய் குறி; வாரார் அவர் என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
நந்தும்,-மென் பேதை!-நுதல்.      உரை
நோய்     தீர் மருந்து ஆகி, என்று  நேர்மறை வார்த்தையுடன் முடிவதால் 
தலைவன் சீக்கிரம் வந்து சேர்கிறான் என்று நினைக்கிறேன்
               
 கார்காலத்தில் வனப்பை  அழகாக விவரித்துள்ளார் .

 நான் கற்றுக்  கொண்ட பல  புது த்  தமிழ் வார்த்தைகள்
 நமர் = நம் தலைவன்      பகழி =அம்பு நாச்சியார் = விரும்பியவர்
நந்தனார் =பகைவர்
புறவு =காடுகள்  இன்னும் பல உள்ளன .

  இதில் உள்ள உவமைகள் ரொம்பவே சிறப்பாக உள்ளன .

  தலைவியின் கண்களை ப்
 " பகழிபோல் உண் கண்ணாய்!- "
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்"
 என்றெல்லாம் தோழி வர்ணிக்கின்றாள்.


இந்த பாரு கார்காலம் வருவதற்கான அறிகுறி தென்படுகிறது   வந்துடுவார்” என்று  ஆறுதல் சொல்கிறாள் .

 தோழி என்பவள் எந்த ஒரு இடத்திலும் எதிர்மறையான சொல்லைச் சொல்லவே இல்லை . அது வரை அவள் ரொம்ப நல்லவள்  ( டி. வி  சீரியல் தோழிகள் மாதிரி அடுத்துக் கெடுக்கவில்லை )

 அவன் உன்னை விட்டுப் போனதுக்கு காரணம்
'இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் "
செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம் '


புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,

வேண்டுமென்றே  உன்னை விட்டுப் போகவில்லை என்றெல்லாம் சொல்கிறாள் .

 கையை விட்டு  வளைகள் இறங்கும் அளவுக்கு இளைத்த தலைவியிடம்
 "தா பாரு கார்காலத்துக்கு ஆன அறிகுறிகள் வந்து விட்டன , கருவிளை பூக்க ஆரம்பிச்சுடுச்சு  கவலைப் படாதே  வந்துடுவார் "என்பதை அழகாகச் சொல்கிறாள்

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து.


மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;-(௧௨)
நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம் '



கவலைப் படாதே வானம் தூது  போய் இடி இடிச்சு நேரம் தாழ்த்தாதே ( நீடன் மின் ) என்று சொல்லும் என்பதை
கடிதிடி வான முரறு நெடுவிடைச்1
சென்றாரை நீடன்மி னென்று.
 இலக்கிய நயத்துடன் தோழி சொல்கிறாள்



 மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனாருக்கு  பொம்பளைங்க ஜாஸ்தி பேசினா புடிக்காதா என்ன தெரிய வில்லை , தலைவியை வர்ணிக்கும் பொழுது இரண்டு இடங்களில் சில் மொழி, பேதை வாய்(19 )  மற்றும் 39 ம் பாடல்களில் சில் மொழிப் பேதை ஊர்  என்றெல்லாம் சொல்கிறார் .

 தேர் ப் பாகனிடம் தேரை வேகமாக ஒட்டு ,!ஊரில் பெரிய விருந்து இருக்கு நமக்கு என்று    சொல்கிறான் .
பக்கத்து இலைக்கு  ப் பாயசம் ஊத்தணுங்கிற மாதிரி  ( தான் விரைந்து செல்லவேண்டும் என்பதற்க்காக அல்ல )

சில் மொழி, பேதை ஊர்
நல் விருந்து ஆக, நமக்குஎன்கிறான்.

ஆனால்   தலைவனின்   மனம் முன்பே   தலைவியிடத்துச் சென்று அடைந்து விட்டது என்பதை
"பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு. "19
 பாடல் வரிகளால் சொல்லப்பட்டது .

இவை எல்லாவற்றையும் விட எனக்கு ரொம்பவே  பிடித்த ஒரு விஷயம்
 மழையின் வர்ணனைதான் . உரைநடையில் மழை பெய்தது என்பதை நம்மால் மிஞ்சி மிஞ்சி   கனமழை ,அடை மழை , பெரு மழை இவ்வளவுதான் .

ஆனால் புலவரோ 

  "வானம்    கரு இருந்து ஆலிக்கும் போழ்து? (1

எழில் வானம்   மின்னும், அவர் தூது உரைத்து.(2)
  
உரும் இடி வானம் இழிய, எழுமே-(3)

கடிது இடி வானம் உரறும், (6)

பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும் மழை.(7)

வேந்தர்  களிறு எறி வாள் அரவம் போலக் கண் வௌவி,
ஒளிறுபு மின்னும், மழை.(13

பெருங் கலி வானம் உரறும்-(16  )    

அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பௌவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்(17  )      

செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை.(2௦)

கண் திரள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று(23 )

புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.(26       )
               
முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,(27 ) .   
    
இமிழ் இசை வானம் முழங்க,(28 )

அப்பப்பாஎத்தனை விதமான வர்ணனைகள் !

ஒரு முறை படித்துப் பார்க்கலாம் , ஆஹா ... நாமும் பதினெண்கீழ் கணக்கு 

நூல்களுள் ஒன்றைப் படித்தோம்  என்ற  பெருமை

 கிடைக்குமே .



5 comments:

  1. கார் நாற்பது - எத்தனை வர்ணனைகள்.... நூலகத்தில் கிடைக்கிறதா பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி
      சைவ சித்தாந்தப் பதிப்புக் கழகத்தில் நான் வாங்கினேன் மிகச் சிறிய புத்தகம்

      Delete
  2. ரசித்துப் படித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. ரொம்பவே ரசித்து இருக்கிறீர்கள் போல இருக்கு!!! சூப்பர்!!

    ReplyDelete