Friday 18 November 2016

வாதத் திறமையில் வல்லமை



வாதம் செய்வது என்பது , நான் சொல்வது தமிழ் சினிமாவில் அரிவாளைத் 
தூக்குவது அல்ல

வல்லமையை வார்த்தை மூலம் காட்டி ,   அரசனாயினும் சரி   
  
அல்லது கடவுளே மனித ரூபத்தில் வந்தாலும்    சரி துளியும் கவலைப் 
படாமல் அறத்தை நிலை நாட்டும் வாதத் திறமை

 தமிழ் இலக்கியத்தில் வரும் கதா பாத்திரங்களில் வாதம் செய்யபவர்கள் பலர் இருந்தாலும் நான் எடுத்துக் கொண்டுள்ளது வாலி கண்ணகி மற்றும் நக்கீரன் மட்டுமே .
.இந்த மூன்று பேருக்கும் உள்ள ஒற்றுமை

இந்த மூவரில் எவருமே என்ட்ரான்சு பரீட்சை எழுதி சட்டக் கல்லூரியில் 

பயின்றவர்கள் அல்ல.

 நக்கீரன் " எமக்குத் தொழில் கவிதை "

கண்ணகி    "வீட்டுக் குயில் ."

வாலி எப்படியாகப் பட்ட எதிரியையும் வீழ்த்தக் கூடிய திறம் ,வலிமை நிறைந்த அரசன் powerful பதவி .

 இந்த மூவருமே அறமற்ற வழியில் தமக்கு இழைக்கப் பட்ட அநீதியைத் 

தட்டிக்கேட்ட தைரியசாலிகள்.

  இதில் கண்ணகி தன்னந்தனியே எந்த ஒரு  சப்போர்ட்டும் 

இல்லாது  அதுவும் வேற்று நாட்டில்  ( அந்நாளில் விசா கிடையாது
அந்த நாட்டு மன்னனிடம் நேரிடையாக வாதம் செய்கிறாள் .
  கிழக்கும் தெரியாத மேற்கும் தெரியாத எந்த ஒரு உறவும் , தெரிந்த மனிதரும் இல்லாத ஊரில் ...... அவள் .
ஆனால் ரொம்பத் தெளிவாக இருக்கிறாள் .

அவளின் கோபத்தை  வாயிற் காப்போனிடம் பேசும்போதே ஹை பிச்சில் தான் 

ஆரம்பிக்கிறாள் .
 உன் அரசன் அறம் பிழைத்தவன் என்பதை  முதலிலேயே சொல்லிவிடுகிறாள்
அதுவும்   விவரமாகத்  தப்பு உன்பால்     இல்லை ,உன் அரசன் பேரில்தான்.
ஆனால் நீ  அப்படிப் பட்டவனிடம் தான்  துப்பு    கெட்டத்தனமாக    வேலை 
பார்க்கிறாய் என்பதை hint   செய்கிறாள் .

"வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே. " என்கிறாள் ..

 நக்கீரானது விஷயத்தில்  காட்சி மாறுகிறது .
கடவுள் அரசவைக்கு வந்து நக்கீரனிடம் வாதம் செய்கிறார் .  

இங்கே நக்கீரன் கண்ணகி போல்  தனித்து இல்லை ,
அவையோர் பலர் இருக்கின்றனர் . ( அங்கேயும் சில எட்டப்பன்கள் இருந்திருக்கலாம் ,) இங்கே  ஈசன் வந்து எவண்டா என் பாட்டில் குறை சொன்னது  என்றதும் நக்கீரன் பயம் கொள்ளாது   உடனே  நேரம் தாமதிக்காமல் செம்ம தெளிவுடன் 

"நான்தான்யா உன் பாட்டில் குறை சொன்னேன் "என்கிறார் .

ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி
யாரை நங் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா
                                       முன்னம்
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
சீரணி புலவன் குற்றம் யாது எனத் தேராக் கீரன்.



வாலியின் விஷயத்தில் கதைக்   களமே வேறு.

 வாலி கண்ணகி மாதிரி தனித்து இல்லை அவனது படை கூட உள்ளது , மேலும் அவனுக்கே உள்ள வரம் ( அதாவது எதிரியின் பலத்தில் பாதி  வாலிக்கு  ஆட்டோமேட்டிக்காக  ட்ரான்ஸ்பர்  ஆகிவிடும் )   அதுவே  ஒரு பெரிய பலம் .


“பாரினை வேரோடும் பறிப்பல்  என்று ஓரும் அழுந்தும்         
இச்சரம்  எய்தவன் ஆர் கொல் ?”

என்றபோது  இராமன் உடனே நேரில் வருவதாக  சொல்லப்படவில்லை .

சுக்கிரீவன் தான் வருந்தி வீழ்ந்தான் .


 தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ ?' எனும்; 'அயலோர்
யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர்
மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும்.           

நேமிதான் கொலோ? நீலகண்டன் நெடுஞ் சூலம்,
ஆம் இது, ஆம் கொலோ? அன்று எனின், குன்று உருவு அயிலும்,
நாம இந்திரன் வச்சிரப் படையும், என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ? யாது?' எனப் புழுங்கும்.

 ஒரே குழப்பமாக இருக்கிறது அவனுக்கு , இது யாராக இருக்கும் என்று .

வாலி அது இராமன் என்பதை அந்த அம்பில் இராமனின் பேர் இருப்பதைப்  பார்த்து விட்டுப் புரிந்து கொள்கிறான் இது  இராமனின் வேலை என்று .



 நேரே சென்று வாதம் புரியும் போது கண்ணகி  தெள்ளிய மனத்தினளாய்  அரசனை முதலிலேயே தேரா மன்னா! செப்புவது உடையேன்;

என்று சொல்லிவிட்டு த் தன் பிறந்த ஊர்ப்  பெருமை யைச் சொல்லுகிறாள்.


எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே;

பிறகு தன்னைப் பற்றி ச் சொல்லும் போதே வழக்கு என்ன

( Case details in brief ) என்பதையும் சொல்லிவிடுகிறாள் .
அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே என- ‘

உடனே அரசன்
  பெண் அணங்கே!      கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;

 என்கிறான் .

 யாருகிட்ட? ……ம்   ……என்கிற தொனியில்  வள வள ன்னு பேசாம நேரே மேட்டருக்கு வந்து       சிலம்பை உடைச்சு        நீதாண்டா     கள்வன் என்கிறாள் .

 பாண்டியன் திருடிய பொருளைத் தன் வசம் வைத்திருந்ததனால் திருடன் ஆகி விட்டான்
"யானோ  அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்..
உடனே விழுந்து விடுகிறான் உயிர் துறக்கிறான்.

 சடுதியில் கண்ணகி விஷயத்தை முடிக்கிறாள்.

நக்கீரன்  மேட்டரிலும் விஷயம் சீக்கிரமே முடிகிறது . ஒன்னை   அடிச்சு அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பகூட மகளிரின் கூந்தலுக்கு   மணமில்லை    என்று   சொல்லணும் ன்னு யாரோ சொல்லிக்கொடுத்த மாதிரி  , அவங்க கூந்தலுக்கு , இவங்க கூந்தலுக்குன்னுட்டு கடைசியிலே  சிவனின் மனைவி கூந்தலுக்கு என்று கேட்ட போதும்  தயங்காமல் அதுக்கும் வாசனை கிடையாது போய்யா என்று கூறி விடுகிறான் .


உற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.     
               
 கடவுளாக இருந்தாலும் மனைவியைக் குறை சொன்னால் அதோ கதிதான் என்பதைப் புரிந்துகொள்ளாததனால்    " விளைவு நோக்கான்.  " என்கிறாரோ .?

 ஈசன் கோபத்துடன் பார்த்தபோதும் கலங்காமல்  தான் சொன்னதையே சாதிக்கிறார் நக்கீரன்
கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே
                                      காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல்
                                       ஆகம்
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.        
 

வாலி விஷயத்தில் வாலி பல வித கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்  இராமன் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறான் .

'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்!             

'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?     
 என்கிறான்

 மேலும் மனைவியை  விட்டுப் பிரிந்ததனால் புத்தி கெட்டுப் போயிடுச்சா உனக்கு     என்கிறான் .


"ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! "


  எந்த   மனு நெறி பாய்ண்டுலே நீ வந்து என்னைக் கொன்றாய்


'அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்று உண்டோ?

சூப்பராக்கேட்கிறான் வாலி .

 மேலும்  எனக்கும்  உனக்கும் என்ன தகராறு  எம்மேலே என்ன தப்பு ?

இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்?

 என்கிறான் 

 உன் ஊரில் நாட்டைத் தம்பிகிட்டே  கொடுத்திட்டு இங்கே வேற 
மாதிரி     பாலிடிக்ஸ் பண்றே .
இது என்னா நியாயம் ?
"பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ ?

 ஏன்  நடு நிலை இன்றி பாரபட்சமாக உள்ளாய் ?

'இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ, அறம் காக்கின்ற பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு,
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ?         

 என்று பலவிதமாகச் சொன்னாலும்   இன்னும் இராமனின் செயலை சரி என்பவர் உள்ளனர் .

 கண்ணகியின் விவாத வெற்றி எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படுகிறது .

 நக்கீரனின் வெற்றி  வாதத்தில் முடிந்தாலும் இரண்டு பார்ட்டிகளும் சமரசம் பண்ணிக் கொள்கிறார்கள் .

வாலியின்  வதமும்  , அவன் வாதமும்  காலம் காலமாக விவாதிக்கப் படுகிறது, எதிகாலத்திலும் அதே ஸ்டேட்டஸ் மெயின்டைன் ஆகும்





9 comments:

  1. பழங்கால சரித்திரத்தையும் நிகழ்கால வார்த்தைளையும் கோர்த்து அழகான நாடகம் கண்டதுபோல் இருக்கின்றது.
    அன்று
    கடவுள் என்று அறிந்தும் நக்கீரர் சொல்போறிட்டார்
    இன்று
    அமைச்சர்கள் சொல்போர் வேண்டாம் ஊமையார்கள் போல் உட்கார்ந்து இயந்திர மனிதர்களைப்போல் மேஜையை தட்டுகின்றார்கள் காக்கா பிடிக்க...

    ReplyDelete
  2. அது எப்படி உடனே காமெண்ட் போடுகிறீர்கள் ? வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. சுவாரஸ்யம். எப்படி இப்படி ஒரு ஒப்பீடு ஆராய்ச்சி செய்து, எழுதத் தோன்றியது? வாலிக்கு அப்போதே ப்ளூ டூத் டிரான்ஸ்பர் வசதி இருந்திருக்கிறது!!! உங்கள் தீர்ப்பும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . நான் எழுத நினைத்தது வாலி பற்றி ஆனால் வாலியின் வதை பற்றி பதிவுகள் கட்டுரைகள் ஏகத்துக்கும் உள்ளது , எனவே புதிய கோணத்தில் வாலி பற்றி அணுகவேண்டும் என்ற முயற்சி இது . கொஞ்சம் நன்கு யோசித்து எழுதிய பதிவே இது . சில பதிவுகள் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக எழுதுவேன் , இது அப்படி அல்ல . என் அம்மா தமிழ் வித்துவான் தானே படித்தார்கள் . எனவே வீட்டில் நிறைய தமிழ் புத்தகங்கள் இருந்தன . என் அம்மாவால் தமிழில் ஆர்வம்

      Delete
  4. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி . .ஆனால் எப்படி இணைப்பது என்று புரிய வில்லை . சேர் எனும் பட்டனை அழுத்தினால் அது தானாகவே சேர்வதற்கான கோரிக்கையை ரத்து செய் என்று வருகிறது

    ReplyDelete
  6. அட! நல்ல அழகாக ஒப்பிட்டுள்ளீர்கள்! அதுவும் லோக்கல் மொழி + இலக்கிய மொழி..

    கீதா: இன்னாபா துளசி அது யாரு அத லோக்கல் மொழினி சொன்னது..அதுவும் இக்கால இலக்கியம்தான்...மக்களுக்குப் புரியணும்ல....

    அருமை ! ரசித்தோம்

    ReplyDelete