Monday, 18 July 2016

ஆபீஸ் காமெடிகள்



 சில ட்ரான்ஸ்லேஷன்  வேலைகள் வந்து விட்ட படியால் பிளாக் பக்கம்  அவ்வளவாக வர முடியவில்லை .

ஆபீஸ்  காமெடிகளில் சில மறக்க முடியாதவர்கள் /மறக்க முடியாதவைகளும் நிறைய உண்டு .

 லீவு அப்பிளிக்கேஷன் கொடுக்கும்போது அதில் காமெடியான ஒரு coloumn  காரணம் .(Reason ).

 அதை   அந்த சீட்   இன்  சார்ஜாக  இருந்து  என்ஜாய்   பண்ணியவர்கள்  மட்டுமே உணர  முடியும் .

ஒரு  RURAL BRANCH  கிளார்க்  பையன்  அடிக்கடி  எங்கள்  ஆபீஸிற்கு   வருவான் .
 காரணம்   அவன் ஹைததாபாத்திலிருந்து   தினமும்   30-40 கீமீ  சென்று வருவதால் அந்த பிராஞ்சு தபால்கள்   நாங்கள்  அனுப்ப  வேண்டியது  என்று எல்லாமே  அவன் மூலம் தான் .

அவன்  என்னிடம்   இங்கிலீஷில் தான்   TALK பண்ணுவான் .

நானும் அவனிடம் தெலுங்கில் தான்" மாட்டலாடு"வேன்.

 அவனது இங்கிலீஷ் படு சுத்தம்.

 பாவம்  அவன்  படித்த  கிராமத்தில் இங்கிலீஷ்  பேசுவது  என்பது
 மற்றவர்களால்  கிண்டலடிக்கப் படும்   ஒரு விஷயம் .

தவிர  தெய்வம் என்பது என் டி ஆர் என்கிற மனித உருவில்  நடமாடுவதாக நம்புவார்களாம்.

பாட  சம்பத்தப் பட்ட வரிகளை விட என்  டி ஆரின் டயலாக்குகள் அப்படியே மனப்பாடம்

 நான் அவனிடம்  தெலுங்கு பேசிப் பழக  அவன்  என் மூலம் இங்கிலீஷ் அறிவை வளர்த்துக்  கொள்ள .....


இப்படியே போனது

 ஒரு  முறை அவசரமாக  வந்து  "மேடம் , நீங்க  என்   லீவு  லெட்டரை இன்னைக்கே    சாங்க்ஷன்  பண்ணுங்க   என்றதோடு  மட்டுமல்லாமல் அவனே தனக்கு  பதிலாக  ஒரு  கிளார்க்கையும்  தயார்  பண்ணி  வைத்து விட்டான்.

 பல பேர் பல காரணங்கள் சொன்னாலும் மறக்க முடியாத ஒரு காரணம்  

ஒன்று அவன்  எழுதியிருந்தான்.


 Marriage  of  my KNEES  என்று.

 லீவு கேட்ட கிளார்க்கும்  லீவு சாங்க்ஷன் பண்ணும் கிளார்க்கும் வேறு வேறு யூனியன் .

நான் ஒழிந்து போகுது சாங்க்ஷன் பண்ணலாம் என்றால்  என்  கீழ்  வேலை பார்த்த    கிளார்க்” கிடைத்த  அவலை மெல்லாமல்  விடுவேனா” என்று சொல்லிவிட்டு

 "நாளைக்கு      வேற ஒருத்தன்  Marriage  of  my eyes , my ears , my hands  என்று வருவான் என்று சொல்லிவிட்டு
வேலை மெனக்கெட்டு  “Employees conduct Rules “ “ Manual “எல்லாம் Refer பண்ணி  conduct ரூல்ஸ் படி ( As per Chapter / Section எல்லாம்  எழுதி )  இதெல்லாத்துக்கும் லீவு கிடையாயது   என்று   திருப்பி   அனுப்பி   நோட்டு  போட்டுவிட்டான் .


அவனுக்குப்  பாவம்   எதனால்  திருப்பி  அனுப்பினார்கள்  என்று  புரிய  வைக்கவே  ரொம்ப  நாழியாச்சு .

ஆனாலும்  ORAL  SANCTION   பண்ணி   போப்பா  என்று   சொல்லிவிட்டோம் .
.

பிறகு  கொஞ்ச   நாள்   கழித்து   ஸ்டேட்  பாங்கில்  வேலை  கிடைத்துப் 

  போய்விட்டான்.

Wednesday, 13 July 2016

கேட்டு வாங்காத சொந்தக் கதை



திரு ஸ்ரீராம்  அவர்களின் கேட்டு வாங்கிப் போட்ட கதை மாதிரி எனக்கும் ஒரு நிகழ்வு நடந்தது.
 2006 ம் வருடம் நடந்தது. என்னுடன் சேர்ந்து ஜப்பானிய மொழி படிக்கும் தோழி ஒருத்தி என்னுடன் சேர்ந்து படித்தால் சீக்கிரம் மனதில் பதிகிறது அது இது என்று ஐஸ் வைத்து என் வீட்டுக்கு வந்து என்னுடன் படிப்பாள்

ஒரு காரியம் என்று தீவிரமாக எடுத்தால் அதில் ரொம்ப கவனம் செலுத்துவேன் 
,அதனால்   ஈர்க்கப் பட்டு அவள் நான் எப்படிப் படிக்கிறேன் என்று நோட்டம் போட வந்தாள் போல .

முதலில் எனக்குப் புரியவில்லை .

 தன் தந்தை ஒரு குடிகாரர் என்றும்
தாய் ரொம்பக் கஷ்டப் பட்டு வளர்த்த விதம் எல்லாம் சொல்லியிருந்தாள்.

கல்யாணம் ஆகி  ஒரு  குழந்தை இருந்ததால் என்னளவு அவளால் அவ்வளவு தூரம் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பாள்

ஆனால் எனக்கும் குழந்தைகள் இருந்த போது நானும் கஷ்டப் பட்டேன் . எல்லோருக்கும் இது பொதுப் பிரச்னை என்பேன் .

 நான் படிக்கும் போது கஷ்டமானவைகளை முதலில் காலையில் 4 மணிக்கே  எழுந்து விடுவதால் அவற்றை 100% எனக்கு நம்பிக்கை வரும் வரை  தினமும் ரிவைஸ்  செய்வேன் சொல்லிப் பார்ப்பேன் .

ஒரு நாள் வழக்கம் போல என் வீட்டுக்கு வந்தவள்  மாலையில் கிளம்பிப் போனாள்.

அவள் வந்த நேரம் ஒரு தெரிந்த கொத்தனார் வேறு ஒரு உதவிஆளுடன்  வந்து வேலை பார்த்தார்.
 பிறகு என்  வீட்டு வேலை முடித்து விட்டு நன்கு உறங்கி மறுநாள்   காலை எழுந்தால்   என்  புத்தகத்தைக் காணோம் .

 அதில் தான் நிறைய நோட்ஸ்   EXPLANATION  எல்லாம் எழுதி வைத்திருந்தேன்.

.அது  இலக்கணப் புத்தகம் .

வீடு  முழுக்கத் தேடினேன் . கிடைக்கவில்லை .

பரீக்ஷைக்கு   இன்னும் 15   நாள்   மட்டுமே   இருக்கறப்ப   இந்தக்   கூத்து


 என் தோழிக்குப்  போன் செய்து சொன்னேன் ,

அப்படியா?  ஐயோ  பாவம்  நீங்க  எவ்வளவு  கஷ்டப்பட்டு  நோட்ஸ் எல்லாம் எழுதி வெச்சிருந்தீங்க .... பரவாயில்ல விடுங்க .
உங்க ளுக்கு  இருக்கிற அறிவுக்கு நீங்க  அது இல்லாமையே பாஸ் பண்ணிடுவீங்க

அதை விட்டுட்டு  மத்ததை  படிங்க  என்றாள்  கூலாக .

 அதெப்படி விடமுடியும் என்றேன் .

அப்ப அந்தக் கொத்தனாரைக்   கேட்டுப் பாருங்க  மேடம் என்றாள்.

உன்னிடம்  தவறுதலாக  வந்து விட்டதா பார் என்றேன் .

100% சான்ஸே இல்லை என்றும்       தாய்  மீதெல்லாம் சத்தியம் பண்ணினாள் .

வீட்டிற்கு வேறு யாரும் வரவில்ல்லை  தவிர அந்தக் கொத்தனார்  இதை  எடுத்து  விலைக்கு  விற்றால்( 400 கிராம்)  Rs 4  மட்டுமே தேறும்
அந்த அளவு சிறிய  புத்தகம் . அதை அவர்கள்  மெனக்கெட்டு திருட மாட்டார்கள் .

 அப்புறம்   அடுத்த நாள்   நான் போன்   பண்ணி   "அந்தக் கொத்தனாரு   ரொம்பக் கோவப்பட்டுக்கிட்டு நான்   திருடலம்மா .

அது   இதுனு  பேசிட்டு   ஏதோ முட்டையை வச்சு   மந்திரம்  பண்ணினாத் தெரியும் மா
அப்படி  நான்  எடுத்திருந்த என்  புள்ளைங்களுக்கு கெடுதல்.
 வர  ஞாயிற்றுக் கிழமை பண்ணி யாரு எடுத்துட்டான்னு சுத்தமா சொல்லிடும் சாமி அப்படீன்னான் "..
 நான்  செய்யலாமான்னு  இருக்கேன் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன் .

 ம்   ………..அவ்வளவெல்லாம் போகாதீங்க மேடம்   என்று ஒரு ஐந்து நிமிடம் கழித்துப் போன் பண்ணினாள் .

பிறகு   அரை மணி   நேரம் பொறுத்து  அவளே அந்தப் புத்தகம்   தன்   பையில் ஏதோ ஒரு   ஓரத்தில்  சுருண்டு  கொண்டு   இருந்ததாம் ,
 அன்னைக்கே கொண்டு தருவதாகச் சொன்னாள்.


 நானும் நீயும்  என்வீ டு வரை நடக்க வேண்டாம்.

,குழந்தையை   வேறு அம்மாவிடம் விட்டு விட்டு வருகிறாய் ,

 நானே பஸ்  ஸ்டாண்ட் வந்து வாங்கிக்கறேன் ,

 எனக்கும் அந்தப் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு
அந்த  லேடிய   வீட்டுக்குள்ள  அனுமதிக்கவே பயந்தேன்.

 புத்தகத்தை வாங்கிக் கொண்டேன் ,அதன் பிறகு பேசினேன்
.வீட்டுக்கு அழைக்க வில்லை .

 இப்போது   சுத்தமாகத்  தொடர்பு எல்லைக்கு வெளியில்”



Tuesday, 12 July 2016

டெபுடேஷன் காமெடிகள்

டெபுடேஷன் காமெடிகள்


 நான்   வடக்கே  வேலை செய்த போது லீவு  டெபுடேஷன்

போன்றவற்றைப் பார்க்கும் செக்ஷனில் வேலை 

செய்த போது நிறையாக காமெடி   நிகழ்வுகள்  நடக்கும்.

 சில பிராஞ்சுகள்  ஒரு ஆபீசர் ஒரு கிளார்க்கு ஒரு பியூன் ஒரு கூட்டும் ஆள்  

இவர்கள் மட்டுமே இருப்பார்கள் . அவர்களுக்குள் ஒரு "நல்ல புரிதல்

இருக்கும் .


அதனால் லீவு  என்பது எண்ட்ரீ ஆகாமலேயே லீவு எடுத்துக் கொள்வார்கள்.

அவை எல்லாமே கிராமப் புற பிராஞ்சாக இருப்பதால் அவர்கள் போய்வர 

எடுத்துக் கொள்ளும் சிரமம் இவற்றை எல்லாம் கணக்கில் சேர்த்துக் கொண்டு 

  நகரத்தில் இருப்பவர்கள் யாரும் அதை பெரிசாக எடுத்துக் கொள்வதில்லை .

 நாங்களும் கம்பிளையண்டு என்று வந்தால் தவிர கண்டுகொள்வதில்லை

ஏனெனில் மாற்று ஆள் கிடைப்பது கஷ்டம் .

நிறைய நாள் லீவு என்றால் மட்டுமே எங்களுக்கு சாங்க்ஷன் செய்யக் கோரி 

லீவு லெட்டர் வரும் ,

நாங்கள் வேறு ஒரு ஆளை டெபுடேஷனில் அனுப்பி வைப்போம் .;


டெபுடேஷன்  போன ஆள் இங்கே வந்து வத்தி வெச்சப்புறம் நிறைய 

விஷயங்கள் தெரிய வரும் ..

 அது மாதிரிப் போன ஒரு ஆள் சொன்ன விஷயம் .செம காமெடி .


அந்த ஊரில் ஒரு ஆறு இருந்தது ,அந்த ஆற்றைக் கடந்து தான் 

வங்கிக்  கிளைக்குப்  போகணும்

மழை பெய்தால் அங்கு போக முடியாது. இந்த டெபுடேஷனில் போன ஆள் 

பிராஞ்சு இருந்த இடத்தில்  அதாவது ஆத்துக்கு அந்தப் பக்கம் மாட்டிகிட்டான்.  

ஹோட்டல் எல்லாம் கிடையாது அந்த ஊரில் .

எனவே ஒரு வீட்டில்   தங்கி  இருந்தார் .


 இரவு நல்ல மழை


மேனஜர்வீடு  ஆற்றுக்கு இந்தப் பக்கம் .....


 அவரின் குழந்தைகள் நகருக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் படித்துக் 

கொண்டிருந்ததால் மேனேஜர் ஆற்றின்    மறு   கரைப்பக்கம்

(அதாவது  வங்கிக்கு எதிர்க் கரைப்பக்கம்  )வீடு எடுத்துக் கொண்டார் .


அவர்  கொஞ்சம் வவுச்சர் கொஞ்சப் பணத்தை வைத்துக் கொண்டு  

வீட்டிலேயே சில  பணம் கொடுக்கல் வாங்கல் இவைகளைப்  பண்ணி 

இருக்கிறார்.

ஒரு வாரம் மழை விடவில்லை .

உதவி செய்ய என்று புதுசாய் போனவர் அந்த ஊர் மக்களிடம் ஒரு வீட்டில் 

படுத்துக்கொண்டு  ஏதோ  ஓசி சாப்பாடு சாப்பிட்டு   ( மழையால் நகர்ப் பக்கம் 

வரமுடியாததால் காய் கறிகள் கிடையாது ) அவ்வளவாக  டி வி வசதி 

இல்லாத ஊர் அது .பேப்பர் வருவதும் முடியாது.

 வேலையும் இல்லாமல் பொழுதே போகவில்லையாம் . டாய்லெட் போன்ற 

இன்ன பிற சிரமங்களும் கூட

ஆனால் வெளியே இருந்த மானேஜர் மட்டும் வெள்ளிக்கிழமை அனுப்ப 

வேண்டிய ஸ்டேட்மெண்டுகளை தானே  எழுதி தவறாமல் அனுப்பி விடுவார் .

 கடைசியில் டெபுடேஷன்  அனுப்பியதற்கே அர்த்தமில்லாமல் போய் விட்டது


 திரும்பி வந்த பின் அந்த கிளார்க்   செம கடுப்பில் .

Friday, 8 July 2016

மத்தியானச் சோறு



 நானெல்லாம்  ஸ்கூல் படிக்கும்போது முக்கால் வாசி தயிர் சாதம் , எலுமிச்சை சாதம் இட்லீ தேங்காய் சாதம் .புளியோதரை  இவ்வளவுதான்.        


 சில பேர் வீட்டில் அன்றைக்கு மடியாகத்தான் சமைக்கணும் என்று  இன்னும் சிம்பிளாக சாதமும் பொடியும் தொட்டுக்க வடுமாங்காய்  அல்லது ஏதோ ஒரு ஊறுகாய் .

 பழைய சாதம் கொண்டு வருபவர்களும் உண்டு.

ஜுரம் அல்லது வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் மட்டுமே பிரெட் ,  ( சிரிப்பாக இல்லை ?)

 பிறகு என்   பையன்  காலத்தில் எல்லாம் சப்பாத்தி யுடன் சன்னா மசாலா பன்னீர் மசாலா பனீர் பாலக் போன்றவை  முன்னுக்கு வந்து இட்டலியைப் பின்னுக்கு த் தள்ளியது .
சில சமயம் மட்டுமே பூரி ,உருளைக் கிழங்கு.

ஹைதஹராபாத்தில் என் மகனுக்கு ஒரு கேரளா பையன் தோழன் .

அவன் ஒரு சாப்பாடு கொண்டு வருவதை என் மகன் விவரிக்கும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அது என்னாம்மா நடுவிலே இட்லீ அந்த இட்டலியைச் சுத்தி  மொறு 
மொறுன்னு தோசை  என்பான் .

 அதுதாங்க நம்ப ஆப்பம் .

இப்பெல்லாம் பீசா , பர்கர்  சான்டவிச்சு ,பாஸ்தா  இத்யாதிகள் .

ஆனால்  நெட்டில்  நான் பார்த்த  கார்ட்டூன் காரக்டர்களை  லன்ச் பாக்சில்
 வைக்கும் இந்த ஐடியா  என்னை  வியக்க வைத்தது.

நிஜமாவே  ரூம் போட்டு

யோச்சிக்க றாங்களோன்னு  தோணிச்சு.


 நீங்களே பாருங்களேன் .

எப்படியெல்லாம் கற்பனை பண்ணி  எப்படியெல்லாம் மெனக்கெட்டிருக்காங்க .