Saturday 28 December 2013

நினைத்துப் பார்க்கிறேன்


 இந்த வருடம் நான் என்ன செய்தேன் என்று நினைத்துப்  பார்த்தால்   சாதனைகள்  லிஸ்ட் டில் நான் இந்த  பிளாக்கை ஆரம்பித்ததை தாராளமாகச் சொல்லலாம்.
 காசா பணமா நம்மளை நாம உற்சாகப் படுத்திக்கிறதிலே
தப்பில்லையே!

எனக்கு பிளாக் ஆரம்பிக்கனுமின்னு ரொம்ப நாளாகவே ஆசை இருந்திச்சு.
ஆனா எப்படீன்னு தெரியாது.


பசங்களுக்கு அம்மாவோட திறமை பத்தி புரியலை .
சொல்லிக்குடுக்க மாட்டங்க

சந்தேகம் கேட்டால் ஒரே தடவையிலே புரிஞ்சுக்கணும் என்பார்கள் .
அது நமக்கு முடியறதில்லே .

 நானும்   ஃ பிரீ லான்சர் என்பதால் இந்த வருடம் ஜூன் வரை ரொம்ப பிசியாக என்று சொல்லமுடியாவிட்டாலும்  continuously   occupied  ஆகத்தான் இருந்தேன்.

பிறகு  நாக்கில் வந்த ஒரு சிறு கொப்புளத்தை  ஒரு பிரபல மருத்துவ மனையின் பல டாக்டர்கள்    கூடி ஒரு வழி ஆக்கி நான் பேச முடியாமல் சாப்பிட முடியாமல் இருந்தேன்.

மீறிப்  பேசினால் என் அறிவார்த்தமான பேச்சு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமால் போனது.

உதாரணமாக
நான் கீரை  என்று சொன்னால் அது மற்றவர்கள் காதில் கீதை யாக விழுந்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம் .
அது பற்றி தனி பதிவே போடலாம்.

கம்யுனிகேஷன்  என்பது ரொம்ப கஷ்டமான போதும் , எல்லோரும் ஒரு ஒரு மாதிரிச் சொல்லி குழப்பிய போதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயம் , பதிவர் சந்திப்பு என்ற செய்தியைப் படித்தேன்.

நம்ம ஒரு பதிவாவது எழதினா தானே பதிவர் என்ற வெறியில் திரு தமிழ் வாசி அவர்களின் பதிவு எப்படி ஆரம்பிப்பது என்ற பதிவைப் பார்த்தும் பிறகு திரு திண்டுக்கல் தனபாலனிடம்  இரண்டொரு சந்தேகங்கள் கேட்டும்  முதல் பதிவை சுப யோகம் சுப முகூர்த்தம் எல்லாம் பார்க்காது  3.08.2013 அன்று அரங்கேற்றினேன்

தட்டி முட்டிக் கத்துக்கிட்டதுதான்.

 அப்புறம் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு திரு பழனி கந்தசாமி
( என் சகோதரர் பற்றி  அறிந்தவர் ) திரு செல்லப்பா  (  நானும் அவரும் முன்பே ராம்ஸ்  அபார்ட்மெண்ட் காம்பிலேக்சில்  வசித்தவர்கள்   பரிச்சயமானவர்கள் )
திரு கவியாழி கண்ணதாசன் திருப்பூர் ஜோதிஜி திரு தமிழ்வாசி   திருமதி சசிகலா, ராஜி ,அகிலா போன்ற பலரையும் சந்தித்தேன்.

ஒரு தைரியம் வந்தது.
நம்மளும் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாமின்னு.

முன்பே பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் உண்டு.'
 ஞான ஆலயம் சிநேகிதி மங்கை, மங்கையர் மலர்  எனப்  பல.

 தமிழில் முதலில் டைப்பிங் அவ்வளவு  ஃ பாஸ்ட் ஆக வரலை.
இப்போ பரவாயில்லை .

நானும் முப்பத்தி ஐந்து பதிவு போட்டுவிட்டேன்.

பதிவுகள் பாபுலர் ஆச்சா என்பதை விட என் மன விரக்தியிலிருந்து மீண்டு
வர  இந்த பதிவு எனக்கு உதவியது என்றே சொல்லலாம்
.
இவற்றை நான் மாத இதழ் களுக்கு அனுப்பியிருந்தால் பணம் கிடைத்திருக்கலாம் ,
உடனே  publish  ஆகாது
ஆனால் எனக்கு  மன திருப்தி இதில் நிறையவே கிடைக்கிறது.

 எனக்கு என் எண்ணங்களைப் பகிர ஒரு மேடை   இது என்ற விதத்தில்
சந்தோஷமே.
  என் உடல் நிலையில்  இன்னும் குழப்பிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.

இருப்பினும் இந்தப் பதிவுகள் என்னை   occupied  ஆக வைக்கிறது.

தவிர முகமறியா நட்புகள் பல என்னை ஏதொ ஒரு விதத்தில் என்னை  உற்சாகப் படுத்துகிறது.

. பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய  அனைவருக்கும்  நன்றி..


9 comments:

  1. ///பதிவுகள் பாபுலர் ஆச்சா என்பதை விட என் மன விரக்தியிலிருந்து மீண்டு வர இந்த பதிவு எனக்கு உதவியது என்றே சொல்லலாம்//
    வருவோரை வாழ்த்தி வரவேற்று
    உற்சாகம் கொடுக்கும் ஒரே உலகு
    வலை உலகுதான்
    தங்களின் எழுத்துப்பணி தொடர
    வாழ்த்துகின்றேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  2. வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  3. அடுத்த வருடம் இன்னும் நிறைய பதிவுகளை படியுங்கள் சகோதரி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  4. தங்களைப் போன்றவர்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.. வருகிற வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி .'
      உங்கள் பிளாகுகளைப் படிக்கும் போது எனக்கு ஒரு intimate உணர்வு வரும் காரணம் நான் வளர்ந்தது திருச்சியில் என்பதால் .
      புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  5. நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete