Friday 20 December 2013

பெண் பார்க்கும் படலம



 என் தோழி (சுமார் 30 வருடம் முன்பு) ஒருவர் ஒரு  கதை  சொல்வார்.
 ஒரு கல்யாணம்  ஆன ஆம்பிளை 
 கோழி வெந்துச்சான்னுஅம்மாவைப் பாக்கச்சொன்னா  
அம்மா நா மாட்டேன்"பத்து நிமிஷம்  முன்னாடி பாத்தப்போ  கோழி அடுப்புலேருந்து கத்துச்சு"ன்னு சொன்னாளாம் ,
 சரின்னு ,பொண்டாட்டியைப் போய்
 கோழி  வெந்துச்சான்னு பாக்கச்சொன்னா  பொண்டாட்டி  
 " நா மாட்டேன் ரெண்டு நிமிஷம் முன்னாடி நா பாத்தப்போ  கோழி
கொத்த வந்துச்சு"ன்னு சொன்னாளாம் .

என் மகனுக்குப் பெண் பார்க்கிறேன் .
சரி ஒரு முன்னோடி சர்வே பண்ணலாம்ன்னு  மகனுக்குக் கல்யாணம் பண்ணி முடித்த அம்மாக்களிடம் பண்ணினேன் .
புரிந்த உண்மைகள் :
1. மருமகள்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
2. நான் கல்யாணம் பண்ணும் முன்பு
புகுந்த வீடு எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  ஏன்னாக்க அது தான் உன் வாழ்க்கையே   என்றார்கள் .
இப்போது
 வர மருமக எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சொச்ச காலத்தை ஒட்டணுமில்ல என்கிறார்கள்  .
சரி ஆண்களிடம் சர்வே செய்யலாமின்னு  சமீபத்தில்  கல்யாணம் பண்ணிக்கொண்ட பையன்களிடம் நிலைமையை விசாரித்தேன்.
அதில் ஒருவர் சொன்ன பதில் எனக்கு காமெடியாக  ( உங்களுக்கு ஷாக் ஆக இருந்தால் நான் பொறுப்பல்ல ) இருந்தது.
அம்மா அப்பா பார்த்து அம்பது  பவுன் நகை  சீர் செனத்தி எல்லாம் வாங்கிக்  கல்யாணம் பண்ணி வைத்த பெண் .
ஆனாலும் கல்யாணம் ஆனா ரெண்டாம் மாசமே நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது மாதிரியான சூழ் நிலை .

பையனுக்கு குரு உச்சத்தில் இருக்கும் நாட்களில் அம்மா ஒரு மாதிரி சாப்பாடு மனைவி ஒரு மாதிரியான சாப்பாடு என்று ரெண்டு விதமான சமையல்  ,

பையனுக்கு  என்ன செய்வது என்று தெரியாமல் ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு  வெள்ளைப் புறா வைப் பறக்க விடுவதாக நினைத்திருக்கிறான் .
ஆனால் வீட்டில் நடப்பதென்னவோ 24x 7x 365 காக்கா கூட்டம் போல ஸீன்!

குரு சிலநாள்  சனி கிட்டே சார்ஜ் கொடுத்திட்டு  வாக் கீக் போயிடுவாரோ என்னவோ
 சொல்லி வச்ச மாதிரி சில சமயம்  ரெண்டு பேருமே சாப்பாடு தரமாட்டர்களாம்.
பையன்   வீட்டில்  காலித் தட்டைப் பாத்து ஒரு சோக லுக் வுட்டுட்டு
 ஆபீஸ் காண்டீனில்  உணவு ரொம்பிய  தட்டைப் பாத்து
 வீட்டு சோகத்திலும் ஒரு நல்ல சாப்பாடு கெடெக்குதென்னு  சந்தோஷப் பட்டு கிட்டானாம் .

சில சமயம் இவன்கிட்டே மனவியைப்  பேச விடாமல்  தடுக்க அம்மா ஆபீஸிலெருந்து வர வழியிலேயே மடக்கி அங்கே வா இங்கே வான்னு கூட்டிப்  போவாங்களாம்.

மனவியும் அதற்கு  சளச்சவங்க இல்லே ..
சொல்லப் போனா அதுக்கு மேலே. 
சில சமயம் ஆபீஸ் பக்கமாவே  ஒரு இடம் சொல்லி நீங்க அங்கெ வாங்க நான் உங்களுக்காக வெய்ட் பண்ணறேன் . அப்படீம்பாங்களாம் .

 சில ரெண்டு பேருமே  பேச மாட்டங்களாம் ..

அப்பல்லாம் இவனுக்கு  டி .வி .கண்டு புடிச்ச புண்ணியவானுக்கு கால் வலிக்க வலிக்க ஆயிரம் முறை விழுந்து வணங்கலாம் போலத் தோணுமாம்.

இதுக்கெல்லாம்  சிகரம் வெச்சாப் போலே ஒரு நிகழ்வு நடந்ததாம்  ஒரு நாள் .
பிரஷர் குக்கர் அடுப்பில்   ஆன் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாம் . மாமியார் ப்     பண்ணட்டுமேன்னு  மருமகளும் 
 சின்னவ இவ எழுந்து ஆஃப்  பண்ணக் கூட முடியாதா என்ன?
இவளுக்கு என்ன இவ்வளவு கொழுப்பான்னு
 மாமியாரும் கம் என்று இருக்க  குக்கர் "  ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் "என்கிற மாதிரி  சந்தோஷத்தில்  மானாட மயிலாட பாணியில் டான்ஸை  ஆடிடுச்சாம். 
 எப்படியாப் பட்ட ரிப்பேரும் பண்ண முடியாதுன்னு குக்கர் ரிப்பெர்காரன் டயக்னைஸ் பண்ணிட்டதாலே குக்கர் மூடியை  காயலான் கடைக்கு  பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃ பர்  பண்ணிட்டாங்களாம்.
 (குக்கரை அடுப்பில்   முதலில்  யார் வைத்தது என்ற கேள்வியை   வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் யாரும் என்னிடம் கேட்கவேண்டாம் .
என் சர்வேக்கு பையன் ஒரு உண்மையை  சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் என் வேலை .
 வெட்டி கேள்வி கேட்க நான் என்ன  இன்வெஸ்டிகெஷன்  ஏஜன்சியா நடத்துகிறேன்? )
 உச்சுச்சு !.ச்சே! நாடு போகிற போக்கு .......ன்னெல்லாம்  உணர்ச்சி வசப்படவேண்டாம் 

 இப்ப  மறுபடியும் முதல் பாராவுக்குப்  போங்க !
என் தோழியின் கதைக்கு அடுத்த வருட சாகித்ய அகாடமி  பரிசுக்கு 
பரிந்துரை செய்யுங்கள் 

8 comments:

  1. படித்து சிரித்தேன்.

    ReplyDelete
  2. பையனுக்கு பெண் பார்ப்பதற்கு முன்னாள் அவனை ஏதாவது கேட்டரிங்க் காலேஜில் சேர்த்துவிடுங்க....

    ReplyDelete

  3. /// சில சமயம் இவன்கிட்டே மனவியைப் பேச விடாமல் தடுக்க அம்மா ஆபீஸிலெருந்து வர வழியிலேயே மடக்கி அங்கே வா இங்கே வான்னு கூட்டிப் போவாங்களாம்.

    மனவியும் அதற்கு சளச்சவங்க இல்லே ..
    சொல்லப் போனா அதுக்கு மேலே.
    சில சமயம் ஆபீஸ் பக்கமாவே ஒரு இடம் சொல்லி நீங்க அங்கெ வாங்க நான் உங்களுக்காக வெய்ட் பண்ணறேன் . அப்படீம்பாங்களாம் .///
    இதுக்குதான் அவன் அவன் சின்னவீடு பாத்துகுறங்க போலிருக்கு

    ReplyDelete
  4. ஹா... ஹா... இதெல்லாம் நிறைய நடக்கும்... இரண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்ட அந்த ஜீவன் தான் பாவம்! எங்க வீட்லயும் கூட நிறைய சுவாரஸ்யம் உண்டு.......

    ReplyDelete
  5. இரண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்ட அந்த ஜீவன் தான் பாவம்

    ReplyDelete
  6. நல்ல சர்வே...:))

    ReplyDelete