Sunday 1 December 2013

கொட்டிக்கிடக்குது காமெடி ! அள்ளுங்க! அள்ளுங்க!

கடந்த இரண்டு வாரங்களாக வேலைப் பளு..
 ( எல்லோரும் சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி நம்மளும் சொன்னாதானே ஒரு கெத்து ).
என்னை நிறையப் பேர் கேட்கும் கேள்வி
உனக்கு மட்டும்  எப்படி காமெடி இவ்வளவு நடக்குது என்று .

ஐய்யயோ ! எனக்கும் ஆயிரம் சோக நிகழ்வுகள் நடக்குது .
ஆனா அதை நீங்கள் எல்லாம் அழுதுகிட்டே விவரமா சொல்றீங்க
 .நான் அதை சிரிச்சுகிட்டே சொல்றேன் .
அங்க தான் நான் ...............
.
நம்மை சுத்தி எல்லோருமே காமெடி  காமெடிமட்டும்  தான் பண்றாங்க .
(உருப்படியா ஒன்னும் செஞ்சு கிழிக்கிறதில்லே!.

விவாதங்கள்
 
.ஏன்னா அப்படி ஏதாவது உருப்படியா  செய்திருந்தால்  இந்தியா எங்கியொல்ல போயிருக்கும் )
நாம தான் அந்த காமெடியை ரசிக்கறது இல்லே !

என் மகன் ஞாயிற்றுக்கிழமை  (நேத்து ) காலை      மெரீனா கடற்கரைக்கு நண்பர்களுடன் வாக்கிங்  போனபோது பிச்சைக்காரர்கள்  பிச்சை கேட்டிருக்கிறார்கள் .
ஒரு ரெண்டு மூணு பேர் வரைக்கும்  "ம்ஹூம் .. கிடையாது என்று சொல்லிவிட்டான்.
பிறகு அவனுக்கு போர் அடித்து நாலாவது பிச்சைக்காரர் பிச்சை  கேட்ட போது பதிலே சொல்லாமல்  போயிருக்கிறான்.
அவர் கோபம் கொண்டு
 "அவனவன்  ஏ.சி இருக்கிற  ஏ.டி எம் லே பூந்து  காசை அடிச்சுப் புடுங்கறான்.
நம்ப பீச்சோரமா உக்காந்து மழை  வருமோ வருமோன்னு பயந்துகிட்டே பவ்யமா சாமீ பிச்சை போடுன்னு பிச்சை கேட்டா   முடியும் முடியாதுன்னு சொல்ல  கூட இந்த வாலிபப் பசங்களுக்கு வாய் வலிக்கிதாக்கும் .கலிகாலம்டா சாமி ."
பாத்தீங்களா? எப்படி வெவெரமா காமெடி பண்றாங்கோ !
 (கடுப்பேத்தறாங்க)?

15 comments:

  1. தொடர்க.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ///கடந்த இரண்டு வாரங்களாக வேலைப் பளு.///

    ஓ......கடந்த இரண்டு வாரம் மட்டும்தான் உண்மையாய் வேலை செஞ்சீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பாக்கிறவங்க யாருமே என்னை ரொம்ப வேலை செஞ்சு தான் ஒல்லியா இருக்கேன் அப்படின்னு சொல்ற மாதிரி ஒரு பர்சனாலிட்டி இமேஜு maintain பண்றேன்

      Delete
  3. ///உனக்கு மட்டும் எப்படி காமெடி இவ்வளவு நடக்குது என்று//
    காமெடி பீஸை சுற்றிதானே காமெடி நடக்கும்

    ReplyDelete
  4. /// எனக்கும் ஆயிரம் சோக நிகழ்வுகள் நடக்குது .
    ஆனா அதை நீங்கள் எல்லாம் அழுதுகிட்டே விவரமா சொல்றீங்க/////

    ReplyDelete
  5. ஆஹா நீங்களும் நம்ம கட்சியா? நான் பூரிக்கட்டையால் அடி வாங்கினாலும் அதை சிரிச்சுகிட்டேதான் அதைப்பற்றி பதிவு போடுறேன். இப்ப எல்லாம் அடி வாங்கலைன்னா தூக்கமே வர மாட்டேங்குதுங்க

    ReplyDelete
  6. ///ஐய்யயோ ! எனக்கும் ஆயிரம் சோக நிகழ்வுகள் நடக்குது .///

    நம்ம எல்லாம் உள்ளே அழுகுறோம் வெளியே சிரிக்கிறோம் நல்ல வேஷம்தான் இருந்தும் வெளுத்து வாங்குறோம்

    ReplyDelete
    Replies
    1. என் பாலிசி "எந்த சோகத்துக்கும் மூணு நிமிஷ துக்கம் மட்டுமே அனுஷ்டிப்பது :
      ஊரிலெ , நாட்டுலே வேலை வெட்டி இல்லாதவங்க கடுப்பேத்தறதுக்கு எல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தா இந்தியாவை அப்புறம் யார் முன்னேத்தறது?சரிதானே?

      Delete
  7. அழுபவனால்தான் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும்

    ReplyDelete
  8. நல்லவேளை ஐந்தாவது பிச்சைகாரன் உங்க புள்ளைய பார்க்கல பார்த்து இருந்தா தம்பி நானும் பார்த்து கிட்டே இருக்கேன் யாருக்கும் நீ பிச்சை போடல அதனால் நீயும் பேசாம என் பக்கத்துல உட்கார்ந்து இரு என்று சொல்லி இருப்பான்

    ReplyDelete
  9. ஹிஹி.. அவர்களும் மனிதர்கள் தானே, அவர்கள் எதிர்பார்ப்பது பணம் இல்லை, உண்டு இல்லை என்ற confirmation மட்டுமே...

    இருந்தாலும் உங்க மகன் வாங்கியது செம nosecut...

    ReplyDelete
  10. காமெடி என்ன அரிசியா பருப்பா அள்ளறதுக்கு....நாங்களும் காமெடி பண்ணுவோம்ல...!!!

    ReplyDelete
  11. :))) நல்ல வெவரமாத் தான் இருக்காங்க...

    ReplyDelete