Sunday 15 December 2013

நான் செய்த சுஷி



 லேடீஸ்  எல்லாரும் சமையலில் பொளந்து கட்டும்போது
நம்ம மட்டும் எப்படி சும்மா இருக்கறது?

ஆனா அதுக்குன்னு அப்படியே எல்லாரையும் மாதிரி இல்லாம புது தினுசு சமையல் ஐட்டம் போடனுமின்னு தோணுச்சு.

அதுதான் இந்த சுஷி

இது நான் இப்போ செய்யலை .
2012ல் செய்ததின்.போட்டோ .

பாக்க ஜப்பானிய சுஷி  ஒரிஜினல் மாதிரியே லுக் என்னவோ  அழகாக இருக்கு.

உள்ளே சாதத்துடன்  பீன்ஸ் காரெட் போன்றவைகளை வைத்தேன்.
ஒரிஜினல் சுஷியில் நான் வெஜ்  ஃ பிஷ் போன்றவை வைப்பார்கள்

ஆனால் என் மகனுக்கும்  அவன் ஃ பிரண்டுக்கும்   அவ்வளவாக பிடிக்கவில்லை.
காரணம் அந்த நோரி ஷீட் (வைத்து ரோல் பண்ணிய ஷீட் )டில் மீன் வாசம் வந்ததுதான் காரணம் .


12 comments:


  1. என்ன இந்த மாமி மார்டன் மாமியாக இருக்கிறங்களே சுஷி எல்லாம் பண்ணுறாங்களே என்று ஆச்சிரியப்பட்டு போயிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சுஷி ஜப்பான்காரங்க மட்டுதான் செய்வாங்களா என்ன நம்மளும் செய்வோமில்லே!

      Delete
  2. இது வெஜ் சுஷி என்று நீங்கள் சொல்லி இருக்காவிட்டால் நானும் இதை சுஷி என்றுதான் நம்பி இருப்பேன். படம் பிரமாதம்

    ReplyDelete
  3. சுஷி பற்றியெல்லாம் தெரியாது..அழகாக இருக்கிறது..சாப்பிடக் கொடுத்தால்தான் சுவையாக இருக்கிறது என்று சொல்லுவோம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி .பதில் மொத்தமாக கீழே !

      Delete
  4. 2012 பிறகு செய்யவேயில்லையா...?

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

    விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி .பதில் மொத்தமாக கீழே !

      Delete
  5. சுசி தெரியும் அதென்ன சுஷி.... என்னவோ போங்க.. அடுப்படியெல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் காமெண்ட் ரசிக்கும் படியாக இருக்கு

      Delete
  6. சுஷி பேர் நல்லா இருக்கே... செய்முறை என்ன?

    ReplyDelete
    Replies
    1. சுஷி என்பது ஜப்பானிய சாதத்தில் (வடித்த
      சாதம் அதன் வடிவம் தெரியும் விதமாக தனித் தனியாக் இருந்தாலும் அதன் ஓட்டும் தன்மை ஜாஸ்தி இருப்பதால் பிடிக்க நன்றாக வரும் ).செய்யும் ரெசிபி .
      நம்மூர் சாதத்தில் வருமா தெரியவில்லை.
      என் ஜப்பானிய தோழி எனக்கு அரிசியும் நோரி சீட்டும் தந்தார்.சாதம் வடித்த பின் அதை ஒரு பெரிய கர்ச்சீப் சைஸில் உள்ள ஒரு மினி பாயின் மீது நோரி ஷீட்டைப் பரப்பி நோரி ஷீட்டின் மீது சாதத்தைப் பரப்பவும் .பின் நடுவே ஒரு இடத்தில் நான் நீளமாக வெட்டியா காரட்டையும் பீன்ஸையும் வைத்து பாயோடு சுருட்டி பின் பாயை எடுத்து விட்டு ரோல் போல உள்ள சாதா ரோலை நடு நடுவே கட் பண்ணினால் சுஷி ரெடி .
      ஜப்பானில் சுசியின் நடுவே நான் வெஜ் வைப்பார்கள் . நோரி ஷீட் என்பது கடல் புற்களால் செய்யப்படும் ஒரு பிரௌண் கலர் ஷீட். அது வெஜிடேரியன் தான் .
      ஆனாலும் கடல் நீரில் நீண்ட நாட்கள் இருப்பதால் ஒரு வித வாசம் வருகிறது. முழு விவரம் வேண்டுவோர் யூ டியூபில் பார்க்கவும்..
      யாருக்கும் பிடிக்காததால் நான் 2012க்குப் பின் செய்யவில்லை .
      சென்னையிலும் இப்போது நோரி ஷீட்கள்
      (சில சூப்பர் மார்க்கெட்களில் )மற்றும் சுஷி ரோல்கள் ஹோட்டல்களில் கிடைக்கின்றன.

      Delete
  7. ஓ! தெரிந்து கொண்டேன்.. நன்றி..

    ReplyDelete