Saturday 14 December 2013

வாக்கிங் வன்முறைகள்


முதுகு வலியும் வேலைகளும் சேர்ந்து ஜோடியாக வந்ததால் மடிக்கணினியை அவ்வளவாக தொடவில்லை.
பதிவிற்குப் பட்டினி.
சரி எதோ எழுதி பக்கத்தை  பதிவைத் தேத்துவோம் என்ற பதிவு தான் இது.
 நம்மளும் இருக்கோம்ன்னு காமிச்சுக்க த்தான் இந்த பதிவு.

எனக்கும் உடல் எடை இந்த 14 வருடங்களில் 9 கிலோ ஏறிவிட்டது.
  கிட்டத்தட்ட  20 வருடம்   43 கிலோவில்மெயிண்டெயின்  பண்ணிக்கொண்டிருந்தேன்
 43 கிலோவில்  இருந்து இப்போது 52 கிலோவைத் தொட்டுவிட்டது.
முன் போல் வேகமாக நடக்க முடியவில்லை . (வயதும் ஒரு காரணம்).
நம்மளும் பந்தா காமிக்கணுமில்லையா ?

வாக்கிங் போனேன்.
போனால்  அறிவு சாதுர்யத்தில்  நம்மையும் தூக்கி சாப்பிட ஒரு ஆள் இருக்குங்கிற
மாதிரி ஒருத்தங்களைப்  பாத்தேன்.
நொந்து பத்து நாள் பழையது மாதிரி ஆயிட்டேன்.

காலையில் ஒரு ஆறு மணி இருக்கும் .
பக்கத்தில் ஒரு பார்க்கில் வாக்கிங் போனேன்.

ஒரு  இருபத்தி ஐந்து வயது முதல் முப்பது வயதிற்குள் இருக்கும் ஒரு பெண்மணியை அவரது கணவன் ஸ்கூட்டரில்  வாக்கிங் போக கொண்டு வந்து விட்டார் .
கணவன் ஒல்லி என்றே சொல்லலாம்

 மனைவியின்  எடை நிச்சயம் ஒரு நூறைத்   தாண்டியிருக்கும்.
 ஒரு ரெண்டு ரவுண்டு கணவர் உருவம் மறையும் வரை ஸ்பீடுன்னா  என் ஸ்பீடு  உன் ஸ்பீடு இல்லை செம  ஸ்பீடில்  வாக்கிங்  போனார் .
சரியா ரெண்டே ரவுண்டுதான்

பிறகு ஆசுவாசமாக  அந்த பெண்மணி  ஒரு பெஞ்சில் உட்கார்ந்து செல்      போனில்   அம்மா அப்பா மற்றும்  உறவினருடன் விடாமல் புகுந்த வீட்டு வம்பு அடுத்த வீட்டு வம்பு எல்லாவற்றையும்  விலாவாரியாக ஒரு  முக்கால் மணி நேரம்  பேசினார்.

என்ன மாதிரியான பூஸ்டர் பேக்கேஜ்  என்று தெரியவில்லை

 வீட்டில் கூட மாமியார் இருப்பார்கள் போலே .
ஆசை தீரப் பேசி முடித்த பின்  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தார்.

பிறகு கணவருக்கு போன் செய்து வரச் சொன்னார் போலும்..
போன் செய்து மறுபடியும்  சின்சியராக  வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

அந்த அப்பாவி மனுஷன் ஸ்கூட்டரில்  குழந்தையுடன்  வந்து  நின்றார்.

பிறகு கணவனிடம் நான் பாப்பாவை வெச்சுக்கிறேன் .
நீங்க ஒரு 15 நிமிஷமாவது வாக் போங்க உடம்புக்கு நல்லது  என அன்பொழுகச் சொன்னார்.

ஒல்லிப்பிச்சு கணவன் அகமகிழ்ந்து "  நீ தான் பாவம் முக்கால் மணி நேரம் வேகமா நடந்துட்டே . ரெஸ்ட் எடுத்துக்கோ "என்று சொல்லிவிட்டு
குழந்தையையும் ஓடச்சொல்லி இவன் வாக் போனான்.

ஒரு வயதான பெரியவர் "இதுதாங்க நெஜமாவே வன்முறை "என்றார்.

என் பக்கத்தில் இருந்த ஒரு வயதான லேடி
" இந்த   அம்மா இங்கே செம கூலா ரெஸ்ட் எடுக்குது.
மாமியாரம்மா மகனுக்காக வேண்டி சீக்கிரமே எழுந்து சமையல் செய்யுதோ என்னவோ யார் கண்டா" என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

எது உண்மை என்று தெரியாது.

அந்தப் பெண்மணி கணவனை  ஃ பூல் பண்ணுவது .வன்முறையோ  சாமர்த்தியமோ என்னவோ அதுவும்  தெரியாது.
நான் நீதிபதி ஸ்தானத்தில்  அமர விரும்பவில்லை .

ஆனால்  அந்த கணவன் ஏமாறுவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது என்னவோ உண்மை.

எனக்கும் வாக்கிங் போன அலுப்பு தெரியலை .

உலகத்தில் வன்முறைகளுக்கு  மத்தியில் பல நல்ல  (நல்ல?) விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

20 comments:

  1. நல்லது நடந்தால் சரி தான்...!

    ReplyDelete
  2. நன்றாகச் சிரித்தேன்...

    ReplyDelete

  3. ///எனக்கும் உடல் எடை இந்த 14 வருடங்களில் 9 கிலோ ஏறிவிட்டது. கிட்டத்தட்ட 20 வருடம் 43 கிலோவில்மெயிண்டெயின் பண்ணிக்கொண்டிருந்தேன் 43 கிலோவில் இருந்து இப்போது 52 கிலோவைத் தொட்டுவிட்டது.////

    தங்கம் விலையை போல தங்களின் எடையும் கூடிவிட்டது போல...

    ReplyDelete
    Replies
    1. என் மனசு தங்கம் என்பதால் தானோ என்னவோ
      தங்கம் விலை ஏறினால்
      என் உடல் எடையும் கூடுகிறது

      Delete
  4. ///அந்த பெண்மணி ஒரு பெஞ்சில் உட்கார்ந்து செல் போனில் அம்மா அப்பா மற்றும் உறவினருடன் விடாமல் புகுந்த வீட்டு வம்பு அடுத்த வீட்டு வம்பு எல்லாவற்றையும் விலாவாரியாக ஒரு முக்கால் மணி நேரம் பேசினார்.///

    வாக்கிங்க் செல்வதை விட பேசினால் அதிக உடல் எடை குறைக்கலாம் என்று அவருக்கு யாராவது சொல்லி இருப்பார்கள் அதனால்தான் அந்த பெண்மணி இந்த உடற்பயிற்சியை செய்து இருக்கலாமுங்க

    ReplyDelete
  5. ////அந்த கணவன் ஏமாறுவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது என்னவோ உண்மை.///
    அந்த கணவண் ஒன்றும் ஏமாந்து இருக்கமாட்டான் ஆனால் ஏமாந்துவிட்டதை போல நடித்து கொண்டிருப்பான

    ReplyDelete
    Replies
    1. அனுபவஸ்தர் சொன்னதனால் ஒத்துக்கொள்கிறேன்.

      Delete
  6. இதுதான் உண்மையான தாம்பத்யம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான தாம்பத்தியத்தின் definition மாறி விட்டதா?

      Delete
  7. ஹா..ஹா..ஹா... செம காமெடி தான்...

    உங்களுக்கு நிச்சயமாக அலுப்பே தெரிந்திருக்காது...:)))

    ReplyDelete
  8. ஹ ஹ ஹா...

    ஏங்க அந்தக் கணவன் யதார்த்தமாய் இந்தப் பதிவை படித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.. இதைவிட காமெடியாக இருந்தது..

    ReplyDelete
  9. அந்த கணவன்மட்டும் இதைப் படிச்சாரின்னக்க wife மட்டும் இல்லே ஊரிலெ இருக்கிற யாரெல்லாமோ நம்மளை வெச்சு ஒரு காமெடி பதிவே போடுறாங்கன்னு ஃ பீல் பண்ணுவார்.

    ReplyDelete
  10. நல்ல காமெடி போங்க!

    ReplyDelete