Sunday 5 July 2020

பாருக்குள்ளே நல்ல ஆப் இந்த வாட்ஸப் ஆப்


ஆண்டராய்ட்  போன் வந்தாலும் வந்தது இந்த வாட்ஸப் ஆப் தொல்லை தாங்கமுடியலை .சில விஷயங்களுக்கு ரொம்பவே  வசதியாக இருக்கு வெளி நாட்டில்  இருப்பவர்களுடன் அதிக செலவின்றிப் பேசமுடிகிறது. செய்திகள் அனுப்ப முடிகிறது . உடனுக்குடன்  செய்திகள் போட்டோக்கள்  அனுப்ப பெற்றிட எல்லாம் முடிகிறது .  ஃ  போனில்   நேரடியாகப் பேசமுடியாத  நிலையில் ( மீட்டிங்கில் இருந்தால் கூட ) ரகசியமாக மெசேஜு அனுப்பமுடிகிறது.

 ஆனால் அதே நேரம் எக்கச்சக்க விஷயங்கள்  போட்டோக்கள் அவசியமின்றி நமது போனில் அடைக்கப் படுகின்றன.. அதுவும் தீபாவளி பொங்கல் வருடப்பிறப்பு நாட்களில் போட்டோ மெசேஜுகள் ஏராளம் வந்து விடுகின்றன

ஜோக்குகள் பல நல்லாதான் இருக்கு . இல்லை என்று  சொல்லவில்லை . ஒரே ஜோக்கையே கிட்டத்தட்ட பத்து பேர் அனுப்பிச்சுடறாங்க . நம்மளை சந்தோஷமா வைக்கறதில அவ்வளவு வெறியா இருக்காங்களாம் .சில சமயம் வெறுத்துப்போய்    சந்தோஷமடையறதுக்கு பதிலா எரிச்சலாயிடறோம் .

 அதுவும் காலையில் எழுந்து  வாட்ஸாப்   பார்த்தால் கருத்தா சொல்லி நம்பளைக் கதறவிடறாங்க . நாம்ப என்னவோ பொறுப்பில்லாத இருக்கிற மாதிரியும் இவங்க கருத்தைக் கேட்டு நடந்து நாம உடனே எதோ நோபல் பரிசு வாங்கிடப் போறமாதிரி ரேஞ்சுக்கு எழுதறாங்க அவங்க சொல்றதை அவங்களே கடைப் பிடிக்கமாட்டாங்க.,இத்தனை வருஷம் நாம்ப எழுந்தவுடன் கனகாரியமாக இந்த மாதிரிக் கருத்தை எல்லாம்  காலையிலே   படிச்சப்புறம்தான் அந்த நாளையே ஆரம்பிச்சோமா என்ன ?

 கடவுள் ஃபோட்டோக்களும்  ஏகப்பட்டது  வந்து குவிந்து விடுகின்றன . என்னமோ நம்மை உய்விக்காமால் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரே கடவுள் போட்டோவையே  பல  பேர் அனுப்பி விடுகிறார்கள்அவை எல்லாம் கூகிளில் இருக்கின்றன . யு டியூபில் இருக்கின்றன .சில சமயம் அவற்றை அழிப்பதற்கே நேரம் செலவிட வேண்டியுள்ளது  இதெல்லாம் அழிக்கறதுக்கே நாம இவ்வளவு நாழி எடுத்துக்கிட்டா அப்புறம் எப்படி அவங்க அனுப்பிச்ச சாமியைக் கும்பிடமுடியும்சில பேரிடம் சொன்னாலும் விடப்படியா அனுப்பிகிட்டே இருக்காங்கநிறைய நாள் பழகியவங்களா இருக்கிறதால பிளாக் பண்ணவும் மனசில்லை .நான் நிறைய  மெசேஜு படிப்பதே இல்லை  . பல போட்டோக்களை திறப்பதே இல்லை . அப்படியே அழித்து விடுகிறேன் .

சில  பேர்  அவங்களுக்குப் பிடித்த பெரிய பெரிய வீடியோ வேறே அனுப்பிச்சுடறாங்க .. நமக்கு அதிலே எல்லாம் இன்டரஸ்ட் இல்லைன்னு சொன்னாலும் நீங்க பாருங்க  அப்புறம் உங்களுக்கே அதிலே ஒரு ஈடுபாடு வந்திடும் என்று ஸ்ட்ராங் ரெக்கமண்டேஷன் வேறே .அந்த வீடியோவைப் பார்த்தீங்கன்னா உங்களை வேறே ஒரு லெவலுக்கு அழைச்சுட்டுப் போகும்  என்கிற  டயலாக் வேறே அடிப்பார்கள்

நாட்டிலே உள்ளவங்க ஒவ்வொருத்தரும் இந்த மாதிரி ஒரு மணி நேரம் வாட்சாப்புக்கு செலவழிச்சா நாட்டு அளவில்  எத்தனை கோடி மணி நேரம் வேஸ்ட் ஆகுது யோசிச்சுப் பார்த்தால் தலையே சுத்தும்

 ம் ..ம்   என்னதான்    ஊன்னு குத்தம்  சொன்னாலும் கடைசியிலே காம்பிரமைஸு  பண்ணி வாட்சாப் கூட வாழப் பழகிகிட்டு இருக்கேன்

 


16 comments:

  1. WhatsApp குழுமத்தில் இருந்தால், Group Info >> Media visibility >> No >> OK

    சற்று கைப்பேசி தப்பிக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . நீங்கள் சொன்னபடி செய்து பார்க்கணும்

      Delete
    2. True. Naanum idhaiye anupalamnu nenaichen.

      Delete
  2. ஹா... ஹா... ஹா... ஸேம் பிஞ்ச்!!

    "தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க", உடனே பத்து பேருக்கு அனுப்பினா வியாழக்கிழமை அன்று நல்லது நடக்கும்". இதெல்லாம் வேற இருக்கு.

    நானும் 99% மெஸேஜ் படிக்கறதில்லை, வீடியோ பார்க்கறதில்லை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி
      நானும் இவ்வளவு நேரம்தான் இதற்கு என்று வரையறை வைத்திருக்கிறேன்

      Delete
    2. உடனே பத்து பேருக்கு அனுப்பினா வியாழக்கிழமை அன்று நல்லது நடக்கும்". இதெல்லாம் வேற இருக்கு.//

      ஹா ஹா ஹா ஸ்ரீராம் இது எனக்கும் வந்து கொண்டிருந்தது. நான் என் தோழியிடம் சொல்லி ப்ளீஸ் இப்படியானவற்றை அனுப்பாதே என்று சொல்லிவிட்டேன்!!!

      கீதா

      Delete
  3. ஹாஹா... உண்மை தான். பலர் இரவு சரியாக 12.00 மணிக்கு Good Morning செய்தி அனுப்புகிறார்கள்! இதே வேலையாக இருப்பவர்களை என்ன சொல்லித் திருத்துவது? காணொளி, படங்கள், கருத்துகள் என பல விஷயங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. அதுவும் பல முறை சுற்றி வருவதைக் கண்டாலே எரிச்சல் தான்! நானும் பலரிடமிருந்து வரும் தகவல்களை குறிப்பாக காணொளிகளையும் படங்களையும் பார்ப்பதே இல்லை. :) அப்படியே Clear Chat தான்!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    அப்படி தாட்சண்யம் பார்க்காமல் அழிக்காவிட்டால் இந்தப் பிறவி எடுத்ததே வாட்சப் பார்க்க மட்டும்தானோ என்று ஆகிவிடும்

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லி சென்ற விதம் நகைச்சுவையாக இருந்தது. நான் வாட்ஸ்ப்பில் அதிகம் செலவிடுவதில்லை அது போல எனக்கு அதில் தகவல் அனுப்புவர்களுக்கு பார்வோர்ட் பண்ணுக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன் அவ்சியம் என்றால் மட்டும் அதில் கூப்பிடவும் அல்லது தகவல் அனுப்புங்கள் என்று தெளிவாக கூறி இருக்கிறேன் ஒரு தடவை என் மனைவி சில பார்வோர்ட் செய்திகளை அனுப்ப அவளிடமும் சொல்லிவிட்டேன் இனிமேல் நீ இப்படி அனுப்பினால் உன்னையும் அதில் ப்ளாக் செய்துவிடுவேன் என்று அதன் பின் அவளும் நிறுத்திவிட்ட்டாள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி
      இனிமேல் நீ இப்படி அனுப்பினால் உன்னையும் அதில் ப்ளாக் செய்துவிடுவேன் என்று அதன் பின் அவளும் நிறுத்திவிட்ட்டாள்.
      இது கொஞ்சம் terror ஆ ஓவர் ஆ தெரியல

      Delete
  6. "இதை பத்து பேருக்கு அனுப்பினால் நல்லது நடக்கும்"

    இதை மறந்து விட்டீர்களே... எனக்கு வாட்ஸ்ஆப்பை மொத்தமாக அழிப்பதே ஓர் வேலையாக இருக்கிறது.

    நான் 99% படங்களை பார்க்காமலேயே அழித்து விடுவேன்.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி
    இதை பத்து பேருக்கு அனுப்பினால் நல்லது நடக்கும்" எனக்கு இது அவ்வளவாக வருவதில்லை . CLEAR CHAT போய் அழித்துவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நானும் CLEAR CHAT போய்த்தான் வருகிறேன். சில நேரங்களில் நினைப்பேன் மொத்தமாக வாட்ஸ்ஆப் ஆஃப்ஸனையே அழிப்போமா ? என்று...

      சில நேரங்களில் அவசியம் தேவைப்படுகிறதே...

      Delete
  8. அருணா மீக்கும் இதே தான். நான் ஃபார்வேர்ட் செய்வது மிக மிகக் குறைவு. அதே போல வருவதையும் எல்லாவற்றையும் ஓப்பன் செய்வதில்லை. மீடியா ஃபைல்ஸ் வீடியோ தானாட டவுன்லோட் ஆகும் ஆப்ஷனை நோ செய்து இருப்பதால் வேண்டுமென்றால் நாம் க்ளிக் செய்தால்தான் டவுன்லோட் ஆகும்.

    அதே போல் வேண்டாதவற்றை உடனே டெலிட் செய்துவிடுக்றேன். க்ரூப்பில் மீடியா ஃபைல்ஸ் நோ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இல்லை என்றால் என் ஃபோன் ஹேங்க் ஆகும் இப்பவே ரொம்ப ஹேங்க் ஆகுது.

    வெளியே டெலிட் செய்தால் போதாது. ஃபோனில் உள்ளே ஃபோடர் அல்லது ஸ்டோரேஜ் போய் செய்தால் தான் முழுவதும் போகிறது இல்லை என்றால் ஃபோன் ரெட் அலர்ட் காட்டும் ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  9. நான் வாட்சப் வைத்திருந்தாலும் வெகு வெகு குறைவு கான்டாக்ட்ஸ். நேரமும் இருப்பதில்லை. குறிப்பிட்ட நேரம், கொஞ்ச நேரம் தான் பார்க்கிறேன்.

    குறிப்பாகப் பதிவுகளை பேப்பரில் எழுதி, பதில்கள், பிறதளங்களுக்கான கருத்துகள் எழுதி அதை வாட்சப்பில் ஃபோட்டோ எடுத்து அனுப்ப எனக்கு உதவியாக இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர், இங்கிருப்பவர்களுடன் பேச உதவுகிறது. மற்றபடி நான் அதிகம் பயன்படுத்துவதில்லை.

    துளசிதரன்

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி
    எல்லோரும் எதோ ஜிஞ்சின்னாக்கட்டி வேலை பண்றோம் ஆனாலும் தேவையில்லாத மெசேஜு வந்துகிட்டேதான் இருக்கு கடல் அலைகள் ஓய்வதில்லை அது மாதிரிதான் இதுவும்

    ReplyDelete