நாமெல்லாம் சின்ன வயசில் புத்தகத்தின் நடுவில் ,மயில் தோகையில் ஒரே ஒரு ஈர்க்கு வைத்து விட்டுக் கொஞ்ச நாள் கழித்துப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் மயில் குட்டி போட்டுடுச்சுன்னு குதூகலமாகக் குதிப்போமில்லையா ..
அது மாதிரி இன்னைக்குச் சப்பாத்தி பண்ணி தட்டுல வச்சிட்டு மத்த வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்து பாத்தா ஒரு மூணு குட்டி போட்டிருந்திச்சு .
சொன்ன யாரும் நம்ப மாட்டாங்கன்னு தான் ஃ போட்டோ போட்டிருக்கேன். அதெல்லாம் நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம் .
இந்த மாதிரி நிறையக் கதைகள் என் பெரிய பையன் குழந்தையாக இருந்தபோது அடிச்சு விட்டிருக்கேன் . அவன் சாப்பிடுவதற்கு எங்களைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை . வீட்டை விட்டு வெளியில் கூட்டிக்கொண்டு போனால் தான் சாப்பிடுவான் . ஒருஆறு வயது வரை பயங்கரப் படுத்தல் .
நாங்கள்அவனைச் சாப்பிட
வைக்க ஒரு டப்பாவில் சாப்பாட்டை
எடுத்துப்போட்டுக் கொண்டு அவனைக் கீழே
அழைத்துக் கொண்டு போய் அபார்ட்மெண்டை சுத்திச் சுத்தி
வருவோம்.
சாதம் இட்லி இவைகளை எடுத்துக்கொண்டால் கையெல்லாம் பிசு பிசுப்பாகிவிடும் .
ஸ்பூனால் கொடுப்பது வாகாக இல்லை .எனவே சப்பாத்தி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம் . இப்படித் தற்சயலாகத் தான் அவனுக்கு சப்பாத்தி பிடிக்கிறது என்பதைக் கண்டு பிடித்தோம்
இதைப் புரிந்து கொள்ளவே எங்களுக்கு அவ்வளவு நாளாச்சு . பிறகு சப்பாத்தி அதன் கூட விதவிதமான வட இந்திய சைடு டிஷு இருந்தால் பிரச்னை இல்லை .
தயிர் அறவே பிடிக்காது.
ஹைதராபாத்தில் குளிர் நாட்களிலும் மழை நாட்களிலும் வெளியே போக முடியாத போது வீட்டுக்குள்ளயே அவனைச் சாப்பிட வைக்க
நாங்க செய்த ஐடியா தான் இந்த டிசைனர் சப்பாத்தி.
சாம்பார் ரசம் இட்லி இவைகள் என்ன பண்ணினாலும் சாப்பிட மாட்டான் . இது மாதிரி டிசைன் டிசைனாகச் சப்பாத்தி செய்து கொடுத்தால் கொஞ்சம் சாப்பிடுவான் .
பிரெட்டில் வித விதமான சான்டவிச் அல்லது வித வித டிசைனில் உதாரணமாக வீடு , யானை, பூனை மரம் இது மாதிரி.
சப்பாத்தியில் வாத்து குருவி தவிர முக்கோணம் சதுரம் இவைகளைக் கொண்டு அந்த நேரத்தில் என்ன தோணுகிறதோ அது மாதிரியெல்லாம் பண்ணிச் சாப்பிட வைப்போம் .
இப்போது என் பேரன் சரிவர சாப்பிட மாட்டேன் என்கிறான் என்று என் பையன் வருத்தப் படுகிறான் .
லாக் டவுனால் நாங்களும் அங்கே போய் உதவி செய்யமுடியாது .
அவனும் இங்கே வரமுடியாத நிலை .
சரி என்று எனக்குத் தெரிந்த டிசைனில் ஃ போட்டோ அனுப்புகிறேன் .
ஒண்ணரை வயது என்பதால் 15 நாட்களே
அங்கு இருந்த எங்களை மறந்துவிட்டான் . எனவே என்னால் முடிந்தது இது மாதிரியான
டிசைனர் சப்பாத்திதான்
The kutty chapathis are very cute. Looks like your drawings.Lot of efforts to prepare them. used to have rabbit and bird dosas This article reminds me of those days.😄
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteகுட்டி சப்பாத்திகள் அருமை.... பேசாமல் குட்டி சாப்பாத்தி பிஸினஸை குட்டி குழந்தைகளுக்காக ஆரம்பித்துவிடுங்களேன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஆமா இதை பேஸ் பண்ணி இனிமே யாராவது 14 சப்பாத்தி என்று புதுசா ஒரு மெனு கொண்டு வரலாம்
அழகாக இருக்கிறதே நல்ல யோசனைதான்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteவித்தியாச வடிவங்களில் சப்பாத்தி! நல்ல யோசனையாக இருக்கிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
DeleteDesigner Chappathi Awesome Mam
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteகுட்டி போட்ட சப்பாத்தி, பல்வேறு வடிவங்களில் சப்பாத்தி எல்லாம் மிக அருமை. உங்கள் மலரும் நினைவுகளும், இப்போது பேரனுக்கு கொடுக்க செய்து காட்டியதும் அருமை.
ReplyDeleteதோசையில் பல வடிவங்கள் செய்து கொடுத்து இருக்கிறேன் குழந்தைகளுக்கு பேரன்களுக்கு , பேத்திக்கு, சப்பாத்தி உருட்டும் சின்ன உருளை சப்பத்தி தட்டு வாங்கி அதில் குழந்தைகளையே உருட்டச்சொல்லி பின் அதை அவர்களுக்கு "நீயே செய்த சப்பாத்தி ருசியே இருக்கே" என்று நாங்கள் சாப்பிட்டு பின் அவர்களுக்கு கொடுக்கும் போது மகிழ்ந்து சாப்பிடுவார்கள்.
வருகைக்கு நன்றி .ஆம் இது கிட்டத்தட்ட எல்லா அம்மாவும் பண்ணியிருப்பார்கள் . பழையனவற்றை நினைத்துப் பார்ப்பதில் ஒரு அலாதியான இன்பம்
ReplyDeleteமகனுக்குச் செய்து கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்திருச்சு அருணா...எல்லா அமமக்களின் அனுபவமாக இருக்குமோ!!
ReplyDeleteகீதா
வருகைக்கு நன்றி . எல்லா அம்மாக்களும் இது மாதிரிதான் செஞ்சு பசங்களைச் சாப்பிட வச்சிருக்கோம் . நிலாவெல்லாம் காட்டி சோறு ஊட்டியது நமக்கு முன்னாடி ஜெனரேஷன்
Deleteநல்ல trick , சப்பாத்தி குட்டிகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteகடவுள் அருளில் என் குழந்தைகள் சாப்பிட படுத்தியதில்லை. இருந்தாலும், தோசையில் இப்படி டிசைன்கள் செய்திருக்கிறேன். சப்பாத்தி எப்படி குட்டி போட்டது? மண்டை வடித்து விடும் போலிருக்கிறதே.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்
ReplyDelete