Sunday, 14 August 2016

பைரோகி மேக்கர்



திரும்பவும் பிசி ஆகிவிட்டபடியால் அவ்வளவாக பிளாக் பக்கம் வர

இயலவில்லை .

செல் போனில் படிப்பதோடு சரி .

அதில் காமெண்ட் போடுவது என்பது லாப் டாப் மாதிரி  சுளுவான காரியம்

இல்லை என் போன்ற slow coach மனிதர்களுக்கு.

எனக்கு புதிய சமையல் உபகரணங்கள் இவற்றை ஒரு லுக் விடுவது பிடிக்கும் .

 ஆனால் வாங்குவதில்லை .

பைரோகி மேக்கர் ஒன்று பார்த்தேன் .

இது பேருதான் பெத்த பேரே தவிர இது வேறே ஒண்ணுமில்லே நம்ப

கொழுக்கட்டை செய்யும் உபகரணம் .

ஆனால் அரிசி மாவுக்கொழுக்கட்டை வருமா என்பது தெரிய வில்லை .

சீனாக்காரங்க பண்ணும் டம்பிளிங் அல்லது மைதாவில் கொழுக்கட்டை

செய்தால் வரும் என்று நினைக்கிறேன் .ஒரே சமயத்தில் 24 கொழுக்கட்டை

செய்து விடலாம் . எனவே மாவைக் கையில் உருட்டி .... எண்ணெய் தடவி ......

.  ஷேப்பாக செய்து .....

அத விடுங்க ...அப்படியே செய்தாலும் ஒரே  மாதிரி வருவது கடினம் .அந்த

மாதிரி ஜன்ஜட்டுக்கெல்லாம்..... டா டா ..

சீக்கிரம் செய்து விடலாம் போல இருக்கு .

செய்யும் விதம் இந்த மாதிரி தான் .

மாவை இந்த அச்சின்  மீது பரப்பி  பூரிக் கட்டை கொண்டு தேய்க்க வேண்டும்

பிறகு கொழுக்கட்டை ஷேப் வந்துவிடுகிறது பிறகு வேக வைக்கணும்



 இது மோதகம் செய்ய உதவும் என நினைக்கிறேன்

 வாங்க ஆசை தான் .

தவிர வாங்கினால் நாம தான் இந்திய வரலாற்றிலேயே

முதன்  முதலில்வாங்கினோம் என்று பெருமை அடித்துக் கொண்டு மத்தவங்க

வயத்தெரிச்சலையும் வாங்கி கட்டிக்கொள்ளலாம்தான்.

ஆனாலும் வாங்க வில்லை ,

ஏன்னாக்க  தினமுமா கொழுக்கட்டை பண்றோம் ,இல்ல கொழுக்கட்டை கடை

 வைக்கப் போறோமா என்ன ?


தவிர இடத்தை அடைத்துக் கொள்ளும் .

 மிக மிக முக்கியமான காரணம்

அந்த மாதிரி குண்டும் குழியுமா இருக்கிற உபகரணங்களைக்

கழுவுவதை விட கையைக் கழுவுவது ஈஸி

8 comments:

  1. //குண்டும் குழியுமா இருக்கிற உபகரணங்களைக் கழுவுவதை விட கையைக் கழுவுவது ஈஸி//

    ஹாஹா... நல்ல முடிவு!

    வித்தியாசமான உபகரணம் தான்...

    ReplyDelete
  2. வெறும் மாவு மட்டுமா? பூரணம் வைத்து மூட வேண்டாமோ? இதே போல வடை செய்யும் மெஷின் ஒன்று இரண்டு மூன்று வருடங்களுக்குமுன் பிரபலமானது!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . பண்ணும் விதம் பற்றி புதிய பதிவு போட்டுள்ளேன்

      Delete

  3. அந்த மாதிரி குண்டும் குழியுமா இருக்கிற உபகரணங்களைக்

    கழுவுவதை விட கையைக் கழுவுவது ஈஸி//
    அதச் சொல்லுங்க


    இது கொஞ்சம் கரச்சிக்காய், சமோசா, சோமாசி என்று சொல்லப்படுவது பண்ணுவதற்கு என்று ஒரு கட்டர் ஷேப் செய்ய என்று (ஒத்தையாக) கிடைக்கிறதே அது போலத்தான் இல்லையா......

    உங்கள் பாயின்ட் ரைட் தான்...


    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. இது வீடுகளுக்கு லாயக்கில்லை. யாரு 40 மோதகம் பண்ணப்போறா. அப்படியே பண்ணினாலும் வருடத்துக்கு ஒரு அல்லது இரு முறைதான். அப்புறம் இதை எங்கு வைப்பது? ஒரு கால் உடைந்தாலும் தூரப்போடவேண்டியதுதான். ஆனால் கடைகளுக்கு மிகவும் உபயோகம். மோதகத்துக்குப் பண்ணும் அரிசிமாவுல கொஞ்சம் eatable கோந்தைக் கலந்தால் தெரியவா போகிறது.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி.
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி . வீட்டிற்கு லாயக்குப் படாது என்றே தோணுகிறது

    ReplyDelete