காலை ஒரு பிச்சைக்காரரை சாய் பாபா என்று நினத்துக் கொண்டு மக்கள்
வழிபட்ட செய்தி ஒன்று வந்தது .
இதைப் படித்ததும் எனக்குப் பழைய ஞாபகம் வந்தது.
நானும் ஏன் அக்காவும் விருத்தாசலத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் .
நான் ஆறாம் வகுப்பு என் அக்கா பத்தாவது.
எனக்கு வயது கூடப் போட்டு சீக்கிரமாகவே சேர்த்து விட்டபடியால் என் அக்கா
சொல்வதை கேட்டு நட என்பார்கள் .
அதனால் அந்த வயதில் என் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டுதான்
நடக்கணும்.
ஸ்கூல் முடிந்ததும் எங்களுக்கு ரயில் வண்டி 5.30 அல்லது 6 மணிக்குத்தான்.
( தாழ நல்லூர் என்னும் ஸ்டேஷனுக்கு . இப்போது அந்த ரயில்வே ஸ்டேஷன் கிடையாது )
ஸ்கூல் முடிந்து வரும்போது விருத்தகிரீஸ்வரர் கோயில் வழியாகத்தான்
( அந்தக் கோயில் உள்ளே நுழைந்து )வருவோம்.
காரணம் பக்தி அல்ல .
ரோட்டில் வண்டிகள் போகும் .
என் அக்காவுக்கு என்னைக் கூட்டிக் கொள்ளும் பொறுப்பு இருந்ததாலும் இது
பாதுகாப்பான வழி .என்பதாலும் .
அங்கே ஆழத்துப் பிள்ளையார் என்ற கோயில் ஒன்றும் உண்டு .
தரை லெவலை விடவும் மிகவும் கீழே பிள்ளையார் இருப்பார் .
குறைந்தது ஒரு 10 படியாகவும் இருக்கலாம் அல்லது கூடவும் இருக்கலாம் .
(40 வருடம் ஆகிவிட்டது ஞாபகமில்லை )
அப்போதெல்லாம் அம்புலி மாமா கதை புக் தான் அந்த ஊரில் கிடைக்கும் .
இங்கிலீஷ் காமிக்ஸ் எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை .
சாயந்திரம்அதில் வரும் கதைகளைப் படித்திருந்தால் நானும் என் அக்காவும்
படித்த கதைகளை எல்லாம் பற்றி பேசிக்கொண்டிருப்போம் .அதில் சில
கதைகளில் கடவுள் சில பக்தர்களுக்கு அசிரீரி மாதிரி கோயிலில் சில
விஷயங்கள் சொல்வார் .
அதனால் என் அந்த வயதில்( ஒரு ஒன்பது வயது இருக்கும் ) என் வரையில்
நான் புரிந்து கொண்ட படி கோயிலில் சாமி எல்லாத்தையும் தெரிந்து வைத்துக்
கொண்டிருப்பார் . உண்மையான பக்தர்களுக்கு நல்ல மெசேஜு தருவார்
,கெட்டவங்களுக்கு அவங்க கோயிலுக்கு வரும்போது பயமுறுத்துவார் ,
என்பதே.
அந்தக் காலத்தில் வெள்ளி செவ்வாய் மாசி மகம் தவிர அவ்வளவாகக்
கூட்டம் இருக்காது.பெரும்பாலும் வெறிச்சோடி இருக்கும் .
காலையில் ஸ்கூல் பசங்க அங்கே படித்துக் கொண்டிருப்பார்கள் .
( வீட்டில் படிக்க வசதி குறைவு )
வழக்கம் போல நாங்கள் இருவரும் ஆழத்துப் பிள்ளையார் கோயிலுக்கு
உள்ளே படி இறங்கிப் போய்க் கொண்டிருந்தோம் .
ஒரு ஏழு படி இறங்கி இருப்போம்.
சாமி விக்கிரகம் பின்னாடி உள்ள பிரகாரச் சுற்றுச் சுவரில் இருந்து
ஓ .... என்ற ஆண் குரல் .
பிரகாரம் பெரியது என்பதால் எதிரொலி வேறு
அழுகையா அல்லது நாங்கள் செய்த தப்பிற்கு மிரட்டவா
என்று புரியாத படி ஹை டெசிபலில் சத்தம் .
என்ன எது என்று தீர்மானிக்கும் வயதும் இல்லை .......
எங்க ரெண்டு பேருக்கும் அது அசரீரி என்று ஒரே பயம் .
நாங்களும் கத்திக் கொண்டே ......
கீழே இறங்காமல் மேலே ஏற நினைக்கிறேன் .
டக்கென்று கால்கள் ஓடவில்லை
என் அக்கா என் கையைப் பிடித்துக் கொண்டு தர தர என்று இழுக்க
........இருவருமாக ஓடி வருகிறோம் .
அது மிகவும் பெரிய கோயில் .
மக்கள் நடமாட்ட முள்ள பகுதி வரை கிட்டத்தட்ட ஒரு ஐந்து நிமிடம் ஒடி
வந்து மெயின் கோபுர வாசலுக்கு வந்த பின் தான் ஓட்டத்தை நிறுத்தினோம் .
பிறகு இருவரும் எதோ பூத கணங்கள் அல்லது கடவுளே நம்ம கிட்டே எதோ
சொல்லவந்தார் , நம்மளை மிரட்டினார் என்ற பல கோணங்களில் அது
என்னவாக இருக்கும் என்றே வழியெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தோம் .
அதன் பிறகு அந்த கோயிலுக்கு அப்பா அம்மா கூட வந்தால் ஒழிய நாங்கள்
போவதில்லை .
பிறகு அடுத்த வருடம் திருச்சி மாற்றல் ஆனபின் பல முறை சென்றுள்ளேன்
ஆம் அப்பா அம்மாவுடன் தான்.
முதலில் அப்பாவும் அம்மாவும் கீழே இறங்கிய பின் தான் இறங்குவேன் .
இன்று வரை அது என்ன சப்தம் என்று தெரியாது .
நான் நினைக்கிறேன் யாரோ ஒருவர் தன் கஷ்டங்களை நினைத்து
அழுதுகொண்டே பிள்ளையாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்திருக்கணும் .
எனக்கும் அங்கு ஒரு முறை சென்று வர ஆசை.
நல்ல அனுபவம்! :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
Deleteதிகில் அனுபவம்தான்! அப்புறமும் போய் செக் செய்துகொள்ளத் தோன்றவில்லையா?
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
Deleteஅப்போதெல்லாம் சின்ன வயது தனியாக அனுப்ப மாட்டார்கள் . வளர்ந்தபின் இன்னும் போக முடியவில்லை . யாராவது கூட வந்தால் தான் போகணும் .அது நாயன்மார்களால் பாடல் பெற்ற ஸ்தலம்
நல்ல அனுபவம்தான்! நீங்கள் இறுதியில் சொல்லியிருப்பதாகத்தான் இருக்கும் அவர் கத்தியதற்குக் காரணம்....இருந்தாலும் அந்த வயதில் உங்களுக்கு அப்படித்தான் தோன்றியிருக்கும்..
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
Delete