எல்லாத்திலேயும் மாற்றம் இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும் .
ஆனாலும் வேலை தேடும் முறையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அதை
இன்றைய முதிய தலை முறையினர் அவ்வளவாக உணரவில்லை என்றே
தோன்றுகிறது .
எனக்குத் தெரிந்த ஒரு வங்கி நண்பரை நான் வங்கியில் சந்தித்தேன் .
என்ன பண்ணுகிறீர்கள் என்கிறார் சொன்னேன் .
பிறகு தனக்கும் ஏதாவது ஒரு வகையில் வேலைக்கு உதவும் படி கேட்டார் .
தெரிந்தது தமிழும் ஆங்கிலமும் மட்டுமே என்றார்.
இத்தனை வயசுக்குப் பிறகு எம்பிளாய்மென்ட்
எக்ஸ்சேஞ்சில் எவன் என்னைப் பதிவு செய்வான் ?
அப்படியே செய்தாலும் வேலை எந்தக் காலத்தில் கிடைக்கும் ?
எங்காவது கணக்கு எழுதலாம் ஆனால் வயது ஒத்து வராது என்றார் .
சரி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வருமா , வீட்டிலிருந்தே
செய்யலாம் என்றேன் . சரி என்றார் .
ஒரு சில லிங்கு கள் தந்தேன் .
தனது மகளின் உதவியுடன்
அவற்றைப் பார்த்து விட்டு ஆஹா ஓஹோ என்றார் .
ஏகப்பட்ட வேலைகள் குவிந்து கிடக்கிறது என்றார் .
ஒரே சந்தோஷம்.
பிறகு எதையாவது எடுத்துப் பண்ணினாரா என்று தெரியவில்லை .
இன்னும் பழைய காலப் படி "இண்டு "வில் wanted பகுதி ஒன்று மட்டுமே
வேலை தரும் என்ற நினைப்பிலேயே இருந்திருக்கிறார் . பிறகு சொன்னேன் .
அந்த "இண்டு " பேப்பர் காரங்களே இப்போ ஷைன் .காம் என்று ஆரம்பித்து
விட்டாங்க .
காலம் மாறி விட்டது .
காலம் மாறி விட்டது..... உண்மை தான்.
ReplyDeleteகாலம் மட்டுமல்ல, வேலை வாய்ப்புகளின் வகைகளும் நன்றாகவே மாறி விட்டன. எல்லாம் இணையத்தின் வழியாகவே நடத்திக் கொள்ளும் வசதியும் வந்தாயிற்று.
ReplyDelete:))
உண்மைதான், வயோதிகத்தில் அறியாமையின் காரணமாக பயமும் சேர்ந்து கொள்கிறது. இன்னும் சிலருக்குக் கணிப்பொறியைக் கண்டாலே பயம் வந்துவிடுகிறது. அருகிலிருப்பவர்களும் நண்பர்களும் உதவினால் வேலை தேடுவதிலிருக்கும் சிரமங்கள் குறையும்.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் சரி
இப்போது வேலைகளுக்கும் பஞ்சமில்லை....அதுவும் வீட்டிலிருந்தபடியே என்று. இணையத்திலும் சரி ரயில்கள், பேருந்துகள், நிலையங்கள் என்று எல்லா இடத்திலும் சுவரொட்டிகள் கூட வந்துவிட்டன. காலம் வெகுவாகவே மாறிவிட்டது. தமிழ்நாட்டிலாவது இந்த அளவிற்காவது இருக்கிறது ஆனால் கேரளத்தில் இன்னும் இப்படி பிரபலமாகவில்லை.
ReplyDelete