Sunday, 28 August 2016

விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார் கோயில் அனுபவம் .





காலை ஒரு பிச்சைக்காரரை சாய் பாபா என்று    நினத்துக் கொண்டு மக்கள்

வழிபட்ட  செய்தி ஒன்று  வந்தது .


 இதைப் படித்ததும் எனக்குப் பழைய ஞாபகம் வந்தது.


  நானும் ஏன் அக்காவும் விருத்தாசலத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் .

நான் ஆறாம் வகுப்பு என் அக்கா பத்தாவது.

எனக்கு வயது கூடப் போட்டு சீக்கிரமாகவே சேர்த்து விட்டபடியால் என் அக்கா

சொல்வதை கேட்டு நட என்பார்கள் .

அதனால் அந்த வயதில் என் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டுதான்
 நடக்கணும்.

 ஸ்கூல் முடிந்ததும் எங்களுக்கு  ரயில் வண்டி 5.30 அல்லது 6 மணிக்குத்தான்.

( தாழ நல்லூர் என்னும் ஸ்டேஷனுக்கு . இப்போது அந்த ரயில்வே ஸ்டேஷன் கிடையாது )

  ஸ்கூல் முடிந்து வரும்போது விருத்தகிரீஸ்வரர் கோயில் வழியாகத்தான்

( அந்தக் கோயில் உள்ளே நுழைந்து )வருவோம்.

காரணம் பக்தி அல்ல .

 ரோட்டில் வண்டிகள்  போகும்  .

என் அக்காவுக்கு என்னைக் கூட்டிக் கொள்ளும் பொறுப்பு இருந்ததாலும்  இது

பாதுகாப்பான வழி .என்பதாலும் .

அங்கே ஆழத்துப் பிள்ளையார் என்ற கோயில் ஒன்றும் உண்டு .

 தரை லெவலை விடவும்     மிகவும்  கீழே பிள்ளையார் இருப்பார் .

குறைந்தது ஒரு 10 படியாகவும் இருக்கலாம் அல்லது கூடவும் இருக்கலாம் .

 (40 வருடம் ஆகிவிட்டது  ஞாபகமில்லை )

  அப்போதெல்லாம் அம்புலி மாமா கதை புக் தான் அந்த ஊரில் கிடைக்கும் .

இங்கிலீஷ் காமிக்ஸ் எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை .

 சாயந்திரம்அதில் வரும் கதைகளைப் படித்திருந்தால் நானும் என் அக்காவும்

 படித்த கதைகளை எல்லாம் பற்றி பேசிக்கொண்டிருப்போம் .அதில் சில

கதைகளில் கடவுள் சில பக்தர்களுக்கு     அசிரீரி   மாதிரி கோயிலில் சில

விஷயங்கள் சொல்வார் .


அதனால் என் அந்த வயதில்( ஒரு ஒன்பது வயது இருக்கும் ) என் வரையில்

நான் புரிந்து கொண்ட படி கோயிலில் சாமி எல்லாத்தையும் தெரிந்து வைத்துக்

கொண்டிருப்பார் . உண்மையான பக்தர்களுக்கு நல்ல மெசேஜு தருவார்

,கெட்டவங்களுக்கு அவங்க கோயிலுக்கு வரும்போது பயமுறுத்துவார் ,

என்பதே.

 அந்தக் காலத்தில் வெள்ளி செவ்வாய் மாசி மகம் தவிர அவ்வளவாகக்

கூட்டம் இருக்காது.பெரும்பாலும் வெறிச்சோடி இருக்கும் .

 காலையில் ஸ்கூல் பசங்க அங்கே  படித்துக் கொண்டிருப்பார்கள் .

 ( வீட்டில் படிக்க வசதி குறைவு )

வழக்கம் போல நாங்கள் இருவரும் ஆழத்துப் பிள்ளையார் கோயிலுக்கு

உள்ளே படி  இறங்கிப்  போய்க்  கொண்டிருந்தோம் .


ஒரு ஏழு படி இறங்கி இருப்போம்.

 சாமி  விக்கிரகம் பின்னாடி  உள்ள பிரகாரச் சுற்றுச் சுவரில் இருந்து

 ஓ .... என்ற ஆண்  குரல் .

 பிரகாரம் பெரியது என்பதால் எதிரொலி வேறு

 அழுகையா அல்லது   நாங்கள் செய்த தப்பிற்கு மிரட்டவா

 என்று புரியாத படி ஹை டெசிபலில் சத்தம் .

என்ன எது என்று  தீர்மானிக்கும்  வயதும் இல்லை  .......

 எங்க ரெண்டு பேருக்கும்  அது அசரீரி என்று ஒரே பயம் .

 நாங்களும் கத்திக் கொண்டே ......


கீழே இறங்காமல்  மேலே ஏற நினைக்கிறேன் .


டக்கென்று கால்கள் ஓடவில்லை

என் அக்கா என்  கையைப் பிடித்துக் கொண்டு தர தர என்று இழுக்க

........இருவருமாக  ஓடி வருகிறோம் .

அது மிகவும் பெரிய கோயில் .

மக்கள் நடமாட்ட முள்ள பகுதி வரை கிட்டத்தட்ட ஒரு ஐந்து நிமிடம் ஒடி

வந்து  மெயின் கோபுர வாசலுக்கு  வந்த பின் தான்   ஓட்டத்தை நிறுத்தினோம் .

பிறகு இருவரும்  எதோ பூத கணங்கள் அல்லது கடவுளே நம்ம கிட்டே எதோ

சொல்லவந்தார் , நம்மளை மிரட்டினார் என்ற பல கோணங்களில் அது

என்னவாக இருக்கும் என்றே  வழியெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தோம் .
 அதன் பிறகு அந்த கோயிலுக்கு அப்பா அம்மா  கூட  வந்தால்  ஒழிய  நாங்கள்

போவதில்லை .

 பிறகு அடுத்த வருடம்    திருச்சி மாற்றல் ஆனபின் பல முறை சென்றுள்ளேன்

 ஆம் அப்பா அம்மாவுடன் தான்.

 முதலில்  அப்பாவும் அம்மாவும் கீழே இறங்கிய பின் தான் இறங்குவேன் .


 இன்று வரை அது என்ன சப்தம் என்று தெரியாது .

 நான் நினைக்கிறேன் யாரோ ஒருவர் தன் கஷ்டங்களை நினைத்து

அழுதுகொண்டே  பிள்ளையாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்திருக்கணும் .


 எனக்கும் அங்கு ஒரு முறை சென்று வர ஆசை.

          

Sunday, 14 August 2016

கொழுக்கட்டை செய்யும் முறை

எனக்கும் இரண்டு மூன்று தோழிகள் போன் செய்து செய்முறை


பற்றிக்கேட்டதால் நான் விவரமாகச் சொல்வதை விட வீடியோவில் பார்த்தால்

நன்கு புரியும் என்பதால் வீடியோ கொடுத்துள்ளேன் . நன்றாக வந்தால் ஒரு

கடை வைத்து வரும் லாபத்தில் ஒரு பங்கு எனக்கு அனுப்பவும்


வட்டமான  அச்சில் கொஞ்சம் கையால்  ஷேப் மாற்றி  மோதகம் மாதிரி

செய்யலாம்  என்பது எண்ணம் . இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடலாம் .

வேலை சீக்கிரம் முடியும் .

. கீழே உள்ள வீடியோவில் சோமாசி போன்றவைகள் செய்யலாம் .

 விவரமாகக் காண்பிக்கிறார்கள் .
இவை எல்லாம் ஆன் லைனில் தான் வாங்க முடியும் என்று தோணுகிறது .

Pierogi Maker - How To Make Pierogi In 4 Short Steps

பைரோகி மேக்கர்



திரும்பவும் பிசி ஆகிவிட்டபடியால் அவ்வளவாக பிளாக் பக்கம் வர

இயலவில்லை .

செல் போனில் படிப்பதோடு சரி .

அதில் காமெண்ட் போடுவது என்பது லாப் டாப் மாதிரி  சுளுவான காரியம்

இல்லை என் போன்ற slow coach மனிதர்களுக்கு.

எனக்கு புதிய சமையல் உபகரணங்கள் இவற்றை ஒரு லுக் விடுவது பிடிக்கும் .

 ஆனால் வாங்குவதில்லை .

பைரோகி மேக்கர் ஒன்று பார்த்தேன் .

இது பேருதான் பெத்த பேரே தவிர இது வேறே ஒண்ணுமில்லே நம்ப

கொழுக்கட்டை செய்யும் உபகரணம் .

ஆனால் அரிசி மாவுக்கொழுக்கட்டை வருமா என்பது தெரிய வில்லை .

சீனாக்காரங்க பண்ணும் டம்பிளிங் அல்லது மைதாவில் கொழுக்கட்டை

செய்தால் வரும் என்று நினைக்கிறேன் .ஒரே சமயத்தில் 24 கொழுக்கட்டை

செய்து விடலாம் . எனவே மாவைக் கையில் உருட்டி .... எண்ணெய் தடவி ......

.  ஷேப்பாக செய்து .....

அத விடுங்க ...அப்படியே செய்தாலும் ஒரே  மாதிரி வருவது கடினம் .அந்த

மாதிரி ஜன்ஜட்டுக்கெல்லாம்..... டா டா ..

சீக்கிரம் செய்து விடலாம் போல இருக்கு .

செய்யும் விதம் இந்த மாதிரி தான் .

மாவை இந்த அச்சின்  மீது பரப்பி  பூரிக் கட்டை கொண்டு தேய்க்க வேண்டும்

பிறகு கொழுக்கட்டை ஷேப் வந்துவிடுகிறது பிறகு வேக வைக்கணும்



 இது மோதகம் செய்ய உதவும் என நினைக்கிறேன்

 வாங்க ஆசை தான் .

தவிர வாங்கினால் நாம தான் இந்திய வரலாற்றிலேயே

முதன்  முதலில்வாங்கினோம் என்று பெருமை அடித்துக் கொண்டு மத்தவங்க

வயத்தெரிச்சலையும் வாங்கி கட்டிக்கொள்ளலாம்தான்.

ஆனாலும் வாங்க வில்லை ,

ஏன்னாக்க  தினமுமா கொழுக்கட்டை பண்றோம் ,இல்ல கொழுக்கட்டை கடை

 வைக்கப் போறோமா என்ன ?


தவிர இடத்தை அடைத்துக் கொள்ளும் .

 மிக மிக முக்கியமான காரணம்

அந்த மாதிரி குண்டும் குழியுமா இருக்கிற உபகரணங்களைக்

கழுவுவதை விட கையைக் கழுவுவது ஈஸி

Saturday, 13 August 2016

மாறும் வேலை தேடும் முறைகள்


 எல்லாத்திலேயும் மாற்றம் இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும் .

ஆனாலும்  வேலை தேடும் முறையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அதை

 இன்றைய முதிய  தலை முறையினர்  அவ்வளவாக உணரவில்லை என்றே

தோன்றுகிறது .

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி  நண்பரை நான் வங்கியில் சந்தித்தேன் .

என்ன பண்ணுகிறீர்கள் என்கிறார் சொன்னேன் .

பிறகு தனக்கும் ஏதாவது ஒரு வகையில் வேலைக்கு உதவும் படி கேட்டார் .

தெரிந்தது தமிழும் ஆங்கிலமும் மட்டுமே என்றார்.

இத்தனை வயசுக்குப் பிறகு எம்பிளாய்மென்ட்

எக்ஸ்சேஞ்சில் எவன் என்னைப் பதிவு செய்வான் ?

 அப்படியே செய்தாலும் வேலை எந்தக்  காலத்தில் கிடைக்கும் ?

எங்காவது கணக்கு எழுதலாம் ஆனால் வயது ஒத்து வராது என்றார் .

சரி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வருமா , வீட்டிலிருந்தே

செய்யலாம் என்றேன் . சரி என்றார் .


 ஒரு சில லிங்கு கள் தந்தேன் .

தனது மகளின்  உதவியுடன்

 அவற்றைப் பார்த்து விட்டு ஆஹா ஓஹோ  என்றார் .

 ஏகப்பட்ட வேலைகள் குவிந்து கிடக்கிறது என்றார் .

 ஒரே சந்தோஷம்.

 பிறகு எதையாவது எடுத்துப்  பண்ணினாரா என்று தெரியவில்லை .

இன்னும் பழைய காலப் படி "இண்டு "வில் wanted  பகுதி ஒன்று மட்டுமே

வேலை தரும் என்ற நினைப்பிலேயே இருந்திருக்கிறார் . பிறகு சொன்னேன் .

அந்த "இண்டு " பேப்பர் காரங்களே  இப்போ ஷைன் .காம் என்று ஆரம்பித்து

விட்டாங்க .

 காலம் மாறி விட்டது .
  

Friday, 5 August 2016

சுரண்டும் முதலாளித்துவத்தின் ஒரு பரிமாணம் .


கடந்த 15 நாட்களாக வேலைப் பளுவின் காரணமாக பதிவு எதுவும் போட முடியவில்லை .

என் இரண்டாம் மகன் இப்போது இந்தியா வந்துவிட்டதால் வீட்டு  வேலை வேறு .

சுரண்டல் என்பதை ஒரு நிலச் சுவான்தார் தன் பண்ணையில் வேலை செய்யும்

கூலி ஆட்களுக்கு வெகு குறைவாகக் கூலி  கொடுப்பது ,மற்றும்

தொழிற்சாலை முதலாளிகள் குறைவாகச் சம்பளம் கொடுப்பது மட்டுமே

என்று பொதுவாக நினைக்கப் படுகிறது .

சிறு கம்பெனிகள் சில சுரண்டல் செய்வதும்  கிட்டத்தட்ட அது மாதிரித் தான்

ஆனால் அது வெளியே தெரிவதில்லை .

 ஏனெனில் சம்பந்தப்   பட்ட ஆட்கள் இருவருமே வெள்ளையும்

சொள்ளையுமாக டிரஸ் செய்து கொண்டுள்ளதாலும்  நுனி நாக்கில் ஆங்கிலம்

பேசுவதாலுமே.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆபீஸ் எனக்குப் போன் பண்ணி இந்த

டாகுமெண்ட் மொழி பெயர்த்துத் தரமுடியுமா என்கிறார்கள் . நானும் சரி

என்றேன்.ஏனெனில்  பத்து வருட அனுபவம் உள்ளதால் மெடிக்கல் தவிர

மற்றவைகளை எடுத்துச் செய்யும் தைரியம் உண்டு . இதுவரை  நக்கீரன்கள்

யாரும் வந்து பேசவில்லை .

சாதாரணமாக pdf  எtன்றால் ரேட் அதிகம் தருவார்கள் . நன்கு படிக்கத்

 தெரிந்தவர்கள் மட்டுமே அதை செய்ய முடியும் . வேர்ட் என்றால் ஒரு அளவு

அறிவு இருந்தால் போதும் .

PDF என்றால் செய்ய நிறைய நேரம் பிடிக்கும் , கண்களுக்கு சில சமயம்

அயர்ச்சி  வேறு .

முன்பு பண்ணிக் கொண்டிருந்தேன் . இப்போது கம்பெனிகளில் வேலை டீச்சிங்

இவைகளில் பிரீ லான்சிங்கு மட்டுமே .


சரி இந்த வாரம் ப்ரீ தானே என்று பண்ண ஆசையாக இருந்தது .தவிர

படித்தவைகளும் மறக்க்காமல் இருக்க ஒரு சான்சு .

ஆனால் அவர்கள் சொன்ன சம்பளம் 12% மட்டுமே .

அந்த அளவு முயற்சிக்கு அந்தப் பணம் ரொம்பக் குறைவு .

பிறகு எதோ சொல்லி 60% அளவுக்குத் தருகிறேன் என்று சொன்னார்கள் .

 மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் .


ஒரு முறை அது போல ஒரு பெரிய ஆட்டோமொபைல் கம்பெனி .

இன்டர்வியூவுவிற்கு    ஒரு பத்து பேர் போனோம் .அதில் பாதிப் பேருக்கு

மேலே பரிச்சயம் ஆனவர்கள்

என்னை மட்டும் செலக்ட் பண்ணிவிட்டு மார்க்கெட் ரேட்டில் 50% சம்பளம் தருகிறேன் . என்று அந்த H .R ஆள் சொன்னார் ,

வேண்டாம் என்று மறுத்தேன் .

பாருங்க மேடம் மத்த யாரையும் செலக்ட் பண்ணலே உங்களை மட்டும் தான் ....என்கிறார்.

சம்பளம் குறைவு  மாட்டேன் என்றேன் .

 பாருங்க  மேடம் மார்க்கெட் ரேட்டு பாக்காதீங்க .... உங்களுக்குப்

பெர்மனெண்ட் வேலை. அதுவும் சிட்டிக்குள்ளே .அதைப்பாருங்க .  மார்க்கெட்

ரேட்டை வச்சே நீங்க எல்லாத்தையும் பாக்கக்கூடாது , அது சரியான

 அளவுகோல்  இல்ல அது இதுன்னு அரை மணி நேரம் பேச்சு.



பொறுக்க முடியாம நான் அது எப்படி மார்க்கெட் ரேட் பாக்காம இருக்க

முடியும் .உங்க வண்டியின் மார்க்கெட் ரேட்டை விட 50% குறைச்சு நான்

வண்டிய விலைக்கு கேட்டா  நீங்க வேண்டி தருவீர்களா என்றதும்  ஆள் கப்சிப் .


சரி நீங்க வேல வேணாம் ன்னு தீர்மானிச்சுட்டீங்க . .. ம்     என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

பிசினஸ் என்று வந்து விட்டால்  முடிந்த வரை  exploit பண்ணப் பார்க்கிறார்கள்