Saturday, 16 April 2016

ஜப்பானீஸ் பிளாக்


   ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் நிறையவே மெனக் கேட்டு படித்தேன் .
 படித்தது என்றால் வெறும் பரீட்சையைக் குறிக்கோளாக மட்டுமே வைத்துப் படிக்க வில்லை .  கொஞ்சம் பரீட்சை கொஞ்சம் ஃ பன், கொஞ்சம் ஆராய்ச்சி என்ற முறையில் தான் படித்தேன் .
அதன் விளைவாக  அட இது தமிழ் மாதிரியே  இருக்கே ! இதை இப்படியெல்லாம் புரிஞ்சுக்கலாமே . அட! இவ்வளவுதானா விஷயம்  என்றெல்லாம் நிறைய எனக்குத் தோணியது .
 எனக்குத்  தோணிய  விஷயம் எல்லா வற்றையும்  நோட்ஸ் எடுத்து வைத்திருந்தேன் .
விளைவு வீட்டில் குப்பை சேர்ந்து விட்டது.
 ஆயிரம் சதுர அடி அபார்ட்மெண்டை  வெறும்   ஒத்தை அடிப் பாதையாக மாற்றிய சாமர்த்தியம்  உலகத்தில் உன் ஒரு ஆளுக்கு மட்டுமே உண்டு என்று என் இரண்டாவது மகன் சர்டிபிகேட் பிரிண்ட் பண்ணிக் கையில் கொடுக்காத குறை .
  சரி எல்லாவற்றையும் டாகுமெண்ட் பண்ணி மற்றவர்க்கும் உபயோகமாக இருக்கும் படிச் செய்யலாம் என்று ஒரு தனி பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன் .
 படித்துப்பார்க்கவும். ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம் .
 லிங்க்
http://abayaarunajp.blogspot.in/

1 comment:

  1. ஓ சூப்பர் அபயா அருணா. நிச்சயமாகப் படித்துப் பார்க்கிறோம்...பகிர்வுக்கு நன்றி...

    அருணா என் மொபைல் டிஸ்ப்ளே போயிருச்சு. உங்க நம்பர் கொஞ்சம் மெசெஜ் பண்ண முடியுமா? வேறு ஒரு பொபைல்ல சிம் போட்டுருக்கேன் ஆனா நம்பர்ஸ் எல்லாம் சிம்ல இல்லாம ஃபோன் மெமரில போயிருச்சு. ட்ரான்ஸ்ஃபர் பண்ணதுல வரவே இல்லை ஸோ..உங்க நம்பர் ப்ளீஸ்

    கீதா

    ReplyDelete