பாசுரங்கள் பற்றி எண்ணங்கள் எழுத்துக்கள் என்ற பதிவர் எழுதியது என்னைப் பதிவு எழுதுமாறு தூண்டியது .
நான் சென்னையில் தங்கியிருந்த போது கன்னிமாரா நூலகம் அருகே தங்கி இருந்ததால் நிறையப் புத்தகங்கள் படிப்பேன் .
அதில் ஒரு புத்தகத்தில் அண்ணா அவர்களிடம் தமிழில் நல்ல புலமை பெற என்ன செய்ய வேண்டும் என்ற போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் படி என்று சொன்னாராம் . (எந்தப் புத்தகம் என்றெல்லாம் கேட்காதீர்கள் . 35 வருஷம் முந்திப் படித்தது .)
அதைப் படித்ததும் எனக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஒரு ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்தேன் .
ஆனாலும் வேலை விஷயமான புத்தகங்களும் நிறையப் படிக்க வேண்டி இருந்ததால் நான் முழு கவனமும் அதில் செலுத்த முடியவில்லை .
என் தாய் வேறு தமிழ் வித்வான் படித்திருந்தார் . அவர் ஆங்கில மீடியத்தில் படித்ததால் ஆங்கிலமும் நன்றாகத் தெரியும் . இரண்டு மொழிகளின் நல்ல புத்தகங்கள் எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகப் படுத்திய பெருமை அவரையே சாரும் . என் அம்மாவும் என்னை திவ்யப் பிரபந்தம் படிக்குமாறு ஊக்குவித்தார்கள்.படித்ததில் நான் ரசித்த சில பாசுரங்கள் .
குழந்தைகள் தன் கால் கட்டை விரல்களைப் பிடித்து வாயில் தூக்கி வைத்து இருக்கும் காட்சி என்பது ஒரு அழகு .
அதை ஒரு ஸ்டேஜில் தான் குழந்தைகள் செய்யும் .ப்ரீ கேஜி போகும் குழந்தை அவ்வாறு செய்யாது. வடக்கே அது குழந்தையின் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறுகிறார்கள் .அதைத் தடுக்கக் கூடாது என்பார்கள் .
ஒரு சிலர் அப்படிக் காலை வாயில்வைக்கும் நேரம் கிருஷ்ணர் அந்தக் குழந்தையின் உடம்பில் இருக்கிறார் என்கிறார்கள் .
ஆனால் நாம் அந்த அழகை ரசிக்க விரும்பினாலும் ஏதாவது இன்பெக்ஷன் ஆகிவிடுமோ என்று பயந்து வாயிலேருந்து காலை எடு என்போம்
என் குழந்தைகள் அவ்வாறு செய்ததை நான் ரொம்பவே ரசித்தேன் .
அதையே தான் பெரியாழ்வாரும்
சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே
என்கிறார் .
நாம்தான் அந்தக் குழந்தையை சீ ..சீ ...காலை எடு என்போம்
ஆனால் குழந்தைக்கு அது ரொம்ப டேஸ்டா இருக்கும் போல .
ஆனால் நல்லது கெட்டது எனப் பிரித்து அறியத்தெரியாத குழந்தைஅது
( கண்ணன் அப்படிப்பட்ட குழந்தையா என்ன ? )
பெரியாழ்வாரின் தாய்மை நெஞ்சம் அவரைப் பேதைக் குழவி என்று சொல்ல வைக்கிறது.
எச்சில் பட்ட காலைப் போய் கழுவு ஓடு ...ஓடு என்று நாம் விரட்டுவோம் .
ஆனால் பெரியாழ்வார் அந்த ப் பாதங்களை " பாதக் கமலங்கள் " என்கிறார் .
குழந்தையின் எச்சில் பட்ட சாப்பாடு மிச்சம் இருந்தால் அம்மா அய்யய்யோ அது பத்து என்று ஒதுக்குவதில்லையே .
அது மாதிரியான தாய்மை நிலையில் இருக்கிறார் பெரியாழ்வார் .
தாமரை போன்ற அந்தக் கால்களை வந்து பார்க்குமாறு நம்மை அழைக்கிறார் .
அடுத்து
சிறு குழந்தையின் கால் விரல்கள் ஒன்றோடொன்று நன்றாக ஒட்டிக்கொண்டு ஒரே மாதிரி சேர்ந்தாற்போல் இருக்கும் .அதில் அந்த நகங்கள் Alignment அப்படி ஒரு அழகாக இருக்கும் . விரல்களைப் பிரித்து விட்டாலும் திரும்பப் போய் ஒரு சேர ஒட்டிக்கொண்டு விடும் .என் குழந்தைகளின் அந்த வளரும் நிலையை நான் ரசித்தது மட்டுமல்லாமல் என் இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் பையனும் அதை ரசித்தான்.சின்னவனின் கால் விரல்களைத் தடவித் தடவிப் பார்ப்பான் .
பெரியாழ்வாருக்கு அந்த விரல்களில் முத்து மணி, வைரம் நற்பொன் இவைகளை மாற்றி மாற்றி வைத்துப் பதித்துச் சேர்த்து செய்தாற் போலத் தோணுகின்றதாம் .
எனக்குக் கூட தான் தோணுச்சு..
ஆனால் அதைப் பாட்டா எழுதத் தோணலியே .
அங்கேதான் பெரியாழ்வார் நிற்கிறார்
குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயாக இல்லாவிட்டாலும் அவரின் தாய்மையான மனம் அவரை இப்படிப் பாடவைக்கிறது.
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரேஒண்ணுதலீர் வந்து காணீரே.
என்னிடம் திவ்யப் பிரபந்தம் உள்ளது .
அவ்வப் போது படித்து அடிக் கோடு இட்டுள்ளேன்
. நான் ரசித்தவைகளை எழுதத் தூண்டிய பதிவர் எண்ணங்கள் எழுத்துக்கள் அவர்களுக்கு நன்றி .
அருமை
ReplyDeleteஅருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந்த பாடல்களை மட்டுமே படித்ததுண்டு அல்லாமல் படித்ததில்லை. ஆனால் அழகு தமிழ். குழந்தைகளின் விளையாட்டுகள் எல்லாமே ரசித்ததுண்டு...அதுவும் மிகவும்...உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுத்தது.
ReplyDeleteகீதா: ஆழ்வார்கள் எல்லாருமே மிகவும் ரசித்து ரசித்து அழகிய தமிழில் எழுதியவை. குழந்தையாகப் பாவித்து சிலர், சிலர் குருவாகப் பாவித்து, சிலர் காதலனான காதல் காவியம் படைத்து குறிப்பாக ஆண்டாள்...என்று அருமையான பாடல்கள். அதே போன்று தான் திருமறையும். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரின் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த நல்ல பாடல்கள் எனலாம். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கூட தமிழுக்காக அதை ரசிக்கலாம்.
நான் முதல் ஆயிரம் கற்றுக் கொண்டேன். அது தமிழிற்காகத் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தினால் கற்றுக் கொண்டது. பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கற்றுக் கொண்ட சூழல் பிடிக்காமல் போனதாலோ என்னவோ இப்போது பார்த்தால் நினைவு வரும் அல்லாமல் மனதில் பதியவில்லை...
நானும் பையனின் எல்லா செயல்களையும் மிகவும் ரசித்ததுண்டு. அப்போது கவிதைகளும் எழுதியதுண்டு. கால் விரலை வாயில் வைத்துக் கொள்வது, கை விரல்கள் அனைத்தையும் வாய்க்குள் வைத்துச் சப்புவது, ஜொள்ளு ஒழுகுவது என்று...அவை எல்லாம் எங்கு போயிற்று என்று தெரியவில்லை..மனதில் நினைவுகள் மட்டும்..
ரசித்தேன்...
கீதா
அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந்த பாடல்களை மட்டுமே படித்ததுண்டு அல்லாமல் படித்ததில்லை. ஆனால் அழகு தமிழ். குழந்தைகளின் விளையாட்டுகள் எல்லாமே ரசித்ததுண்டு...அதுவும் மிகவும்...உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுத்தது.

Yes,mam it's good,actually I feel that I am better in English than tamil,even I had the same feeling....when they hold my fingers...
ReplyDeleteYes,mam it's good,actually I feel that I am better in English than tamil,even I had the same feeling....when they hold my fingers...
ReplyDeleteஇலக்கிய இன்பம் தரும் நல்லதொரு பதிவு. கோகுல் சாண்டல் பவுடர் கம்பெனியார், கண்ணன் கால் கட்டைவிரலை சூப்பும் காட்சியை காலண்டர் படமாக போட்டு இருந்த அந்தநாள் நினைவுக்கு வந்தது.
ReplyDelete