நானும் பல வருடங்களாகப்
பார்க்கிறேன் தங்க நகைக்கடைகளில் எப்போதுமே கூட்டம் ஜே ஜே என்றுதான் இருக்கிறது .
டிவியில் தினம் தினம் எங்கள் கடையில் தங்கம் வாங்குங்க
என்று பல நகைக்கடைகள் ஏகப்பட்ட காரணங்கள் கூறுகிறார்கள் . அதே போல் எங்களிடம் தங்கம்
விற்றால் உங்களுக்கு லாபம் என்றும் சில நிறுவனங்கள் சொல்கிறார்கள் . பொதுவாகவே தங்கத்தில்
முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒரு நல்ல தெரிவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது
. நிச்சயமாகத் துணி மணிகளில் பாத்திரம் பண்டம்
வேண்டாத சாமான்களில் செய்யும் செலவை விட உத்தமம்
தான் ,மறுக்கவில்லை . இந்த ஐந்து
வருடங்களில் தங்கத்தின் குறைந்தபட்ச விலை மற்றும் அதிக
பட்ச விலை ,
. தவிரப் பல வருடங்களாக தங்கம் விலை எப்படி இருந்துள்ளது என்றும்
நெட்டிலிருந்து எடுத்துள்ளேன் .
வருடம்
|
குறைந்தபட்ச விலை
|
அதிக பட்ச விலை
|
2013
|
2986.80
|
3113.20
|
2014
|
2838.80
|
2983.30
|
2015
|
2601.27
|
2819.90
|
2016
|
2491.00
|
3233.62
|
2017
|
2744.50
|
3042.82
|
2018
|
2907.00
|
2926.00
|
64
|
Rs. 63.25
|
1991
|
Rs. 3,466.00
|
1965
|
Rs. 71.75
|
1992
|
Rs. 4,334.00
|
1966
|
Rs. 83.75
|
1993
|
Rs. 4,140.00
|
1967
|
Rs. 102.50
|
1994
|
Rs. 4,598.00
|
1968
|
Rs. 162.00
|
1995
|
Rs. 4,680.00
|
1969
|
Rs. 176.00
|
1996
|
Rs. 5,160.00
|
1970
|
Rs. 184.00
|
1997
|
Rs. 4,725.00
|
1971
|
Rs. 193.00
|
1998
|
Rs. 4,045.00
|
1972
|
Rs. 202.00
|
1999
|
Rs. 4,234.00
|
1973
|
Rs. 278.50
|
2000
|
Rs. 4,400.00
|
1974
|
Rs. 506.00
|
2001
|
Rs. 4,300.00
|
1975
|
Rs. 540.00
|
2002
|
Rs. 4,990.00
|
1976
|
Rs. 432.00
|
2003
|
Rs. 5,600.00
|
1977
|
Rs. 486.00
|
2004
|
Rs. 5,850.00
|
1978
|
Rs. 685.00
|
2005
|
Rs. 7,000.00
|
1979
|
Rs. 937.00
|
2006
|
Rs. 8,400.00
|
1980
|
Rs. 1,330.00
|
2007
|
Rs. 10,800.00
|
1981
|
Rs. 1,800.00
|
2008
|
Rs. 12,500.00
|
1982
|
Rs. 1,645.00
|
2009
|
Rs. 14,500.00
|
|
|
|
|
1983
|
Rs. 1,800.00
|
2010
|
Rs. 18,500.00
|
1984
|
Rs. 1,970.00
|
2011
|
Rs. 26,400.00
|
1985
|
Rs. 2,130.00
|
2012
|
Rs. 31,050.00
|
1986
|
Rs. 2,140.00
|
2013
|
Rs. 29,600.00
|
1987
|
Rs. 2,570.00
|
2014
|
Rs.28,006.50
|
1988
|
Rs. 3,130.00
|
2015
|
Rs.26,343.50
|
1989
|
Rs. 3,140.00
|
2016
|
Rs.28,623.50
|
1990
|
Rs. 3,200.00
|
|
|
Source :https://www.bankbazaar.com/gold-rate/gold-rate-trend-in-india.html
தங்கத்தில் முதலீடு
என்பது சராசரியாக 8 முதல் 10 சதவிகிதம்
வருட வருமானம் தருவதாக இருக்கிறது .
ஆனால் வாங்கும்போது
போடும் செய்கூலி ,சேதாரம் ,வரி, மற்றும் விற்கும்போது போடும் செய்கூலி சேதாரம் வரி இவைகளைக்
கணக்கில் கொண்டு போட்டால் சராசரியாக ஒரு 7 சதவிகித வருமானம்
மட்டுமே எட்டும் ..ஆனால் என்ன நகையை வைத்துக் கொண்டு பணம் புரட்டுவது என்பது நிலம் ,வீடு இவைகளுடன் ஒப்பிட்டால் ஈஸியான
ஒன்று . தவிர சிறிய அளவு முதலீடும் செய்ய முடியும். எனவேதான் மக்களிடையே தங்கத்திலான முதலீடு
பிரபலமாக உள்ளது போலே.
இந்த பதிவு பணக்கார வர்க்கத்திற்காக எழுதிய பதிவு...ஆனால் படிப்பதென்னவோ எங்களை போல ஏழைகள்தான் ஹும் இந்த பதிவை படித்து கருத்து போடுபவர்களுக்கு ஒரு சவரன் தங்கம் பரிசாக தரலாமே
ReplyDeleteயாரங்கே ...மதுரைத் தமிழனுக்கு ஒரு கிலோ தங்கம் பா .......ர்சல்.....
Deleteஅருணா, பதிவு நல்லா இருக்கு. நான் தங்கம் வாங்கியதில்லை.நகைகள் அணியும் பழக்கமும் இல்லாததால்...அதில் ஆர்வமும் இல்லாததால்... எனவே உங்கள் பதிவின்மூலம் தான் அறிகிறேன். சிலர் இவெஸ்ட் செய்கிறார்கள் ஆனால் லாபம் இருப்பதாகத் தெரியலை...அதுக்குத்தான் இப்ப நகைகளாக வாங்காமல் வெர்ச்சுவல் கோல்ட் அண்ட் சில்வர் ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் இருக்கே...அதிலும் கூட இன்வெஸ்ட் செய்கிறார்கள்.
ReplyDeleteஆனால் நகையை விற்றால் அந்தச் சமயம் பயன்படலாம் ஆனால் லாபம் இருக்காது. ஏழைகள் பலரும் இன்வெஸ்ட் செய்வது அதற்குத்தான்...கடனும் வாங்குவார்கள்...
கீதா
தங்கம் என்பது ஒரு தங்க நகையை வைத்து அடகு வைத்து மீட்டு மறுபடியும் அடகு வைத்து .... எனப் பலமுறை ரொட்டேட் செய்யலாம் என்கிற எண்ணம் மக்களிடையே ஆழமாகப் பதிந்துவிட்டது .
Deleteமிக சிறப்பான அலசல்...
ReplyDeleteஎன்னைப் பொறுத்த வரை தங்கத்தில் முதலீடு நல்ல முதலீடு ஆனால் என்பது மக்கள் நினைப்பது போல அவ்வளவு லாபகரமானது அல்ல
Delete1964-லியே எங்க தாத்தா பத்து கிலோ வாங்கி போட்டிருந்தால் நான் இன்றைக்கு.......
ReplyDeleteபரவாயில்லை நீங்களாவது ஒரு பத்து கிலோ தங்கம் வாங்கி உங்கள் பேரக்குழந்தைகளுக்கு வைக்கலாமே?
Deleteஅந்த காலத்துல வாங்கி இருந்தா.... :) இப்படி யோசிக்கத்தான் வேண்டும்.
ReplyDeleteநான் புரிந்து கொண்ட வரை தங்கத்தில் முதலீடு என்பது மக்கள் நினைப்பது போலச் சிறந்த முதலீடு அல்ல என்பதே .
Deleteஉதாரணமாக ஒரு 10000 ரூபாய்க்குத் தங்கம் வாங்கினால் அதில்
வரி சேதாரம் செய்கூலி எல்லாம் போகஅதன் மதிப்பு 8000 . மட்டுமே .அந்த நகையை உடனே அடுத்த வாரம் விற்றாலும் மறுபடியும் வரி சேதாரம் செய்கூலி எல்லாம் போக அதன் மதிப்பு 6000 . ஆனால் அதே பத்தாயிரத்தை நீங்கள் வங்கியில்அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்ற வற்றில் முதலீடு செய்தால் போட்டால் சராசரியாக 8 சதவிகிதம் ( இப்போது குறைந்து விட்டது ), தருகிறார்கள் . 9 வருடங்களில் அது இரட்டிப்பாகும் .ஆனால் தங்கத்தில் முதலீடு அவ்வளவு சீக்கிரம் இரட்டிப்பாகாது . 6000 மதிப்பான தங்கம் இரட்டிப்பாக இன்னும் கூடுதல் வருடங்கள் பிடிக்கும் . இது என் தனிப்பட்ட எண்ணம்
இந்த செய்கூலி சேதாரத்துக்கு எல்லாம் அளவு சொல்லி பில் கொடு என்று ஒருவர் கேட்டதாகவும், அவர்கள் அசந்துபோய் அவருக்கு அதெல்லாம் இல்லாமல் செய்து தந்ததாகவும் சில வாட்சாப் முன்னேற்றங்கள் முன்னர் படித்திருக்கிறேன்! பாதி கதையாய்த்தான் இருக்கும்!
ReplyDeleteவிளம்பரங்களில் ஒருவர் சொல்கிறார் மற்றவர்கள் ஏமாற்றுகின்றனர் என்று. மற்றவர்களில் இன்னொருவர் வந்து எங்கள் ரசீதை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு போய் மற்ற கடைகளுடன் ஒப்பீடு செய்துபார்க்கச் சொல்கிறார். இன்னொருவரோ, காசு அதிகம் என்பதால்தான் தரம் எங்களுடையது என்கிறோம் என்கிறார்! விளம்பரங்கள்!