Tuesday, 16 January 2018

தலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க


 யாரும் நம்மளைக் கல்லாலே  அடிக்கமுடியாதபடி தலைப்பு வைக்கணுமின்னு   மூளையை எப்படிக் கசக்கிப் புழிஞ்சாலும்  அப்படி ஒரு தலைப்பு ......ம்ஹூம் .....எதுவுமே சரிவரல .
எனவே தான்  இந்தத் தலைப்பு .

சரி விஷயத்துக்கு வருவோம் .

சாதம் வடிக்க இவ்வளவு பில்டப்பா  என்று நினைக்க வேண்டாம் . (இதைக் கூட தலைப்பாக நினைத்தேன் )

சாதம்எ சமைக்க என்று    எ லக்ட்ரிக் ரைஸ்  குக்கர் மட்டுமே  ஒரு  இருபத்தி அஞ்சு வருஷமாகப் பயன்படுத் தியதால்
வடிச்ச சாதம் சமைக்க ஆரம்பிச்சதிலே இருந்து
எனக்கு என்னவோ  எல்லோரும்  பின்பற்றுகிற பழைய  முறை சரிவரவில்லை .

"சிஸ்டம் சரியில்லை "என்று பல முறை  நினைத்தேன் .

காரணம் ?

முதலில் தண்ணீர்  கொதி வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது .

பிறகு  களைந்த அரிசியைக்  கொதி நீரில் கொட்டும் போது சில சமயம் கைகளில் தெறிக்கிறது .புண்ணாகி விடுகிறது .

அடிக்கடி  கிண்டி விட வேண்டியுள்ளது , சில சமயம் கவனக் குறைவாக இருந்தால் அடிப் பிடித்து விடுகிறது

வெந்துடுச்சா  என்று செக் பண்ணவேண்டியுள்ளது .

பிறகு வடி தட்டு வைத்து வடிக்கும் பொழுது  சமைத்த பாத்திரமும் வடித்தட்டும் மேட்ச் ஆகவில்லை என்றாலும் கையில் கஞ்சி கொட்டிவிடுகிறது.

சில சமயங்களில் கஞ்சியில் கொஞ்சம் சாதம் கொட்டி விடுகிறது .


இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இப்பொழுது நான் பழையபடி
எலக்ட்ரிக் ரைசு குக்கரில்  அரிசி  தண்ணீர் எல்லாம் ஒன்றாக வைத்து  (அளவு  ? அரிசி ஒரு பங்கு+ தண்ணீர் ஏழரைப் பங்கு  )  குக்கர் வெளியிலும் அதிகப்படி தண்ணீர் வைத்து விடுகிறேன் .



நாம்  சும்மா சும்மா என்ன ஆச்சுன்னு  status பாக்க வேண்டியதே இல்லை . ஒரு முக்கால் மணி நேரம் கழித்துப்  பார்த்தால்   சரியான பதத்துடன்  வெந்த சாதம்  நீருடன்  இருக்கும் .


அதை  வெளியில் எடுத்து இது போன்ற வடிகட்டியில் வைத்து வடிகட்டினால்   அப்பாடா !  வடிச்ச சாதம் ரெடி .




இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள் .

அரிசியை  அடுப்பில் வைத்து விட்டு நாம் வேறு எந்த வேலையையும் ஹாய்யாகச்  செய்யலாம் .


  டிஸ்கி : இந்தப் பதிவிற்கு வேறு நல்ல தலைப்பு என்ன வைக்கலாம் சொல்லுங்களேன்

12 comments:

  1. தலைப்பு சிந்திக்க வைத்து அழைத்து வருகிறதே... நல்ல யோசனைதான்.

    ReplyDelete
  2. மாமியின் கிச்சன் ரகளை/அட்டகாசம் என்று தலைப்பு வைக்கலாம்

    ReplyDelete
  3. மாமியாருக்கு சாதம் வடிக்க சொல்லி தந்த மருமகள்

    ReplyDelete
  4. வேண்டுமென்றால் சொல்லுங்க நான் வந்து சாதம் வடிக்க சொல்லி தருகிறேன் 10 வயதில் இருந்து சாதம் வடிக்கும் அனுபவம் உண்டு அம்மியில் அரைக்கும் அனுபவம் உண்டு ஒரு ரவுண்ட் ட்ரிப் டிக்கெட் புக் பண்ணிதாங்கோ நான் நன்றாக கற்று தருகிறேன்

    ReplyDelete
  5. பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  6. எங்கள் வீட்டில் இப்போதும் பழைய முறையிலேதான் பானையைத் துணி சுற்றி தட்டு கொண்டு மூடி ஒரு பாத்திரத்தில் வைத்து வடிப்பது. நானும் பாலக்காட்டில் தனியாக இருப்பதால் அப்படித்தான்...வடிக்கிறேன். பானையில் வடித்துதான்..பழக்கமாகி விட்டது..

    கீதா: நானும் இதே போன்று ஒரு வடிகிண்ணம் வைச்சுருக்கேன். அரிசி களைந்து ஊற வைக்க,காய் கழுவ என்று எல்லாம் பயன்படுமே இதில்தான் நானும் சில சமயம் வடித்து வைத்துவிடுவேன். ரைஸ் குக்கரானாலும்...இதே..

    ReplyDelete
  7. இம்முறை எங்கள் வீட்டில் பொங்கல் இம்முறையில்தான். கொதிக்கும் நேரில் அரிசியைப் போடும்போது கை ஆட்டோமேட்டிக்காக அருகில் சென்று அது தண்ணீருக்குள் விழும் நொடி மேலே விலகி வரும் டெக்நிக் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு நானும் இப்படி சாதம் நடித்திருக்கிறேன்.. என் எட்டு, பத்து வயதுகளில்!

    ReplyDelete
  8. //நடித்திருக்கிறேன்//

    வடித்திருக்கிறேன்!

    எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரில் ஒன்றுக்கு இரண்டு என்று தண்ணீர் அளவு சொல்வார்கள். நாங்கள் மூண்டு ஊற்றுவோம். ஏழரை பங்கா? அதிகம் இல்லையோ?

    ReplyDelete
  9. சிப்பில் தட்டும் சிந்தாத குக்கரும் என்று தலைப்பு வைக்கலாம்!

    ReplyDelete
  10. அட நல்ல உத்தி. செஞ்சு பார்க்கலாமே
    நன்றி.சகோதரி

    ReplyDelete
  11. நீங்க சாதம் செய்ய செமுறை சொன்னீங்களா கஞ்சி வைக்க சென்னீங்களா

    ReplyDelete