Tuesday, 16 January 2018

தலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க


 யாரும் நம்மளைக் கல்லாலே  அடிக்கமுடியாதபடி தலைப்பு வைக்கணுமின்னு   மூளையை எப்படிக் கசக்கிப் புழிஞ்சாலும்  அப்படி ஒரு தலைப்பு ......ம்ஹூம் .....எதுவுமே சரிவரல .
எனவே தான்  இந்தத் தலைப்பு .

சரி விஷயத்துக்கு வருவோம் .

சாதம் வடிக்க இவ்வளவு பில்டப்பா  என்று நினைக்க வேண்டாம் . (இதைக் கூட தலைப்பாக நினைத்தேன் )

சாதம்எ சமைக்க என்று    எ லக்ட்ரிக் ரைஸ்  குக்கர் மட்டுமே  ஒரு  இருபத்தி அஞ்சு வருஷமாகப் பயன்படுத் தியதால்
வடிச்ச சாதம் சமைக்க ஆரம்பிச்சதிலே இருந்து
எனக்கு என்னவோ  எல்லோரும்  பின்பற்றுகிற பழைய  முறை சரிவரவில்லை .

"சிஸ்டம் சரியில்லை "என்று பல முறை  நினைத்தேன் .

காரணம் ?

முதலில் தண்ணீர்  கொதி வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது .

பிறகு  களைந்த அரிசியைக்  கொதி நீரில் கொட்டும் போது சில சமயம் கைகளில் தெறிக்கிறது .புண்ணாகி விடுகிறது .

அடிக்கடி  கிண்டி விட வேண்டியுள்ளது , சில சமயம் கவனக் குறைவாக இருந்தால் அடிப் பிடித்து விடுகிறது

வெந்துடுச்சா  என்று செக் பண்ணவேண்டியுள்ளது .

பிறகு வடி தட்டு வைத்து வடிக்கும் பொழுது  சமைத்த பாத்திரமும் வடித்தட்டும் மேட்ச் ஆகவில்லை என்றாலும் கையில் கஞ்சி கொட்டிவிடுகிறது.

சில சமயங்களில் கஞ்சியில் கொஞ்சம் சாதம் கொட்டி விடுகிறது .


இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இப்பொழுது நான் பழையபடி
எலக்ட்ரிக் ரைசு குக்கரில்  அரிசி  தண்ணீர் எல்லாம் ஒன்றாக வைத்து  (அளவு  ? அரிசி ஒரு பங்கு+ தண்ணீர் ஏழரைப் பங்கு  )  குக்கர் வெளியிலும் அதிகப்படி தண்ணீர் வைத்து விடுகிறேன் .



நாம்  சும்மா சும்மா என்ன ஆச்சுன்னு  status பாக்க வேண்டியதே இல்லை . ஒரு முக்கால் மணி நேரம் கழித்துப்  பார்த்தால்   சரியான பதத்துடன்  வெந்த சாதம்  நீருடன்  இருக்கும் .


அதை  வெளியில் எடுத்து இது போன்ற வடிகட்டியில் வைத்து வடிகட்டினால்   அப்பாடா !  வடிச்ச சாதம் ரெடி .




இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள் .

அரிசியை  அடுப்பில் வைத்து விட்டு நாம் வேறு எந்த வேலையையும் ஹாய்யாகச்  செய்யலாம் .


  டிஸ்கி : இந்தப் பதிவிற்கு வேறு நல்ல தலைப்பு என்ன வைக்கலாம் சொல்லுங்களேன்

Monday, 8 January 2018

தங்கமே என் தங்கமே


நானும் பல வருடங்களாகப் பார்க்கிறேன் தங்க நகைக்கடைகளில் எப்போதுமே கூட்டம் ஜே ஜே என்றுதான் இருக்கிறது .
  டிவியில் தினம் தினம் எங்கள் கடையில் தங்கம் வாங்குங்க என்று பல நகைக்கடைகள் ஏகப்பட்ட காரணங்கள் கூறுகிறார்கள் . அதே போல் எங்களிடம் தங்கம் விற்றால் உங்களுக்கு லாபம் என்றும் சில நிறுவனங்கள் சொல்கிறார்கள் . பொதுவாகவே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒரு நல்ல தெரிவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது . நிச்சயமாகத் துணி மணிகளில்  பாத்திரம் பண்டம் வேண்டாத சாமான்களில் செய்யும்  செலவை விட உத்தமம் தான் ,மறுக்கவில்லை . இந்த ஐந்து வருடங்களில் தங்கத்தின் குறைந்தபட்ச  விலை   மற்றும்    அதிக பட்ச விலை ,
 . தவிரப்  பல வருடங்களாக தங்கம் விலை எப்படி இருந்துள்ளது என்றும் நெட்டிலிருந்து எடுத்துள்ளேன் .

வருடம்
குறைந்தபட்ச  விலை  
அதிக பட்ச விலை

2013
2986.80
3113.20
2014
2838.80
2983.30
2015
2601.27
2819.90
2016
2491.00
3233.62
2017
2744.50
3042.82
2018
2907.00
2926.00

64
Rs. 63.25
1991
Rs. 3,466.00
1965
Rs. 71.75
1992
Rs. 4,334.00
1966
Rs. 83.75
1993
Rs. 4,140.00
1967
Rs. 102.50
1994
Rs. 4,598.00
1968
Rs. 162.00
1995
Rs. 4,680.00
1969
Rs. 176.00
1996
Rs. 5,160.00
1970
Rs. 184.00
1997
Rs. 4,725.00
1971
Rs. 193.00
1998
Rs. 4,045.00
1972
Rs. 202.00
1999
Rs. 4,234.00
1973
Rs. 278.50
2000
Rs. 4,400.00
1974
Rs. 506.00
2001
Rs. 4,300.00
1975
Rs. 540.00
2002
Rs. 4,990.00
1976
Rs. 432.00
2003
Rs. 5,600.00
1977
Rs. 486.00
2004
Rs. 5,850.00
1978
Rs. 685.00
2005
Rs. 7,000.00
1979
Rs. 937.00
2006
Rs. 8,400.00
1980
Rs. 1,330.00
2007
Rs. 10,800.00
1981
Rs. 1,800.00
2008
Rs. 12,500.00
1982
Rs. 1,645.00
2009
Rs. 14,500.00





1983
Rs. 1,800.00
2010
Rs. 18,500.00
1984
Rs. 1,970.00
2011
Rs. 26,400.00
1985
Rs. 2,130.00
2012
Rs. 31,050.00
1986
Rs. 2,140.00
2013
Rs. 29,600.00
1987
Rs. 2,570.00
2014
Rs.28,006.50
1988
Rs. 3,130.00
2015
Rs.26,343.50
1989
Rs. 3,140.00
2016
Rs.28,623.50
1990
Rs. 3,200.00




 Source :https://www.bankbazaar.com/gold-rate/gold-rate-trend-in-india.html




தங்கத்தில் முதலீடு என்பது சராசரியாக 8 முதல் 10  சதவிகிதம் வருட வருமானம்  தருவதாக இருக்கிறது .


ஆனால் வாங்கும்போது போடும் செய்கூலி ,சேதாரம் ,வரி, மற்றும் விற்கும்போது போடும் செய்கூலி சேதாரம் வரி இவைகளைக் கணக்கில் கொண்டு போட்டால் சராசரியாக ஒரு 7 சதவிகித வருமானம் மட்டுமே எட்டும் ..ஆனால் என்ன நகையை வைத்துக் கொண்டு பணம் புரட்டுவது என்பது நிலம் ,வீடு இவைகளுடன் ஒப்பிட்டால் ஈஸியான ஒன்று . தவிர சிறிய அளவு முதலீடும் செய்ய முடியும். எனவேதான்   மக்களிடையே தங்கத்திலான முதலீடு பிரபலமாக உள்ளது போலே.

Sunday, 7 January 2018

பழையன கழிதலும் மறுபடியும் அதே பழையன புகுதலும


  எல்லோரும்  மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது ,

மாற்றம்   ஒன்றே நிரந்தரம் ,

.மாறாதது என்று கூவிக்கொண்டு இருக்கையில்

 நான் இப்போது பழையனவற்றைப்   புகுத்தவே  இந்தப் பதிவு   எழுதுகிறேன்.

 இதைப்  பழையனவற்றுக்கான ஒரு  "மான் கி பாத் "பதிவு என்று கூடச் சொல்லலாம்.

 நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது எல்லா பத்திரிகைகள்   ரேடியோ

 போன்றவற்றில் குக்கரில் சாதம் வடிப்பது தான் நல்லது .

 சத்தெல்லாம் கஞ்சியில் போய் விடுகிறது ,

 நாமெல்லாம் வெறும் சக்கையை மட்டும் தான் சாப்பிடுகிறோம் ,

 எரி பொருள் மிச்சம் ,

சமையல் நேரம் பாதியாகக் குறையும்

என்று ஓவராக சவுண்டு கொடுக்க,

 நான் சத்தே இல்லாத சாதம் சாப்பிடுவதால் தான் ஒல்லியாக இருப்பதாக வீட்டில் ஓயாத  பிரசங்கமே பண்ணினேன் .

 நம் வாழ்க்கை முறையை மாத்தணும் என்றெல்லாம் டயலாக்  அடித்தேன் .

கிட்டத்தட்ட  நான் எங்கள் வீட்டில்  உள்ளிருப்புப்
 போராட்டம் நடத்திக்  குக்கரை வாங்க வைத்தேன் .

யாருக்குமே அந்த சமையல் பிடிக்கவில்லை என்னையும் சேர்த்துத் தான் .

.ஆனாலும் உடம்புக்கு நல்ல விஷயமெல்லாம்   அப்படித்தான் ருசியில்லாம இருக்கும் என்று பொழிப்புரை பதவுரை எல்லாம் சொன்னேன் .

பிறகு என் அம்மாவிற்கு வயிற்றில்  தாங்க  முடியாத வலி வர  மண் பானையில் சாதம் மட்டும் சமைக்க ஆரம்பித்தோம்  .

 வலி கொஞ்சம் குறைந்ததது .

அப்போது கூட குக்கர் சாதம் தான் காரணம் என்று யாருக்கும்  தோன்றவில்லை .

ஆனாலும் என் அக்காவுக்குக்  கல்யாணம் பேச வருபவர்கள் மண் பானையில் சமைத்தால் நம்மளை மதிக்க மாட்டார்கள் என்று சிலர் சொல்ல மறுபடியும் " குக்கர்" ராணி மாதிரி வந்து அடுப்பிலே  ஏறி உக்காந்துக்கிச்சு.


எனக்கும் வயிற்றில் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது . ஆனால் சின்ன வயது என்பதால் அதன் தாக்கம் தாங்கிக் கொள்ளும் படி இருந்தது .

நான் எப்பொழுதுமே  மிகவும்  குறைவாகத்தான் சாப்பிடுவேன்  எனவே வயிறு வலிக்கான காரணம் அதுதான் என்றும்
பிறகு என் தாய் இறந்த பின் அம்மா மாதிரியே எனக்கும் வலி என்று முடிவு கட்டிவிட்டு   வலி வரும்போது சோடா சாப்பிடுவேன் .

 பிறகு  எலக்ட்ரிக்  அரிசி குக்கர் சாதம் சாப்பிட்ட பின்னும் வலி குறையவில்லை .ஆனாலும் தாங்குகிற வலிதான்.

தாங்க முடியாத வயிற்று வலி என்பது கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே 2003ம்  வருடத்திலிருந்து வந்தது .

பல டாக்டர்கள்  ஆயுர் வேதம் அல்லோபதி எல்லாமே .....
பெரிய டாக்டர்கள் ....
பல ஸ்கென்கள்....

லிவர் மட்டும் கொஞ்சம்  ஆம் கொஞ்சமே பெரிதாக உள்ளது ..
மாத்திரைகள் .....

மற்றபடி எல்லாமே நார்மல் .....

எந்த மருந்துக்கும்  பலனில்லை .

சாப்பிட்ட வுடன் ஒரு அரை மணி முதல்  சில நாட்களில் இரண்டரை மணி நேரம் வரை கூட  நீடிக்கும் .எந்த வேலையையும் செய்ய முடியாது.

பாடம் நடத்த புத்தகம் தூக்குவது கூட முடியாது  .

எனவே அந்த கிளாஸுக்கான பாடத்தை ஜெராக்ஸ்  எடுத்துக் கொள்வேன்.

ஒரு நாள்  நான் என் தோழியுடன் தமிழ் நாடு டூரிஸமில்  
கோயில்களுக்குப் போன போது இந்த மாதிரி சாப்பிட்டதும் வலி வந்தது .

 கூட இருந்த  ஒருவர்  நீங்க கஞ்சி வடிச்சு சாப்பிடுங்க என்று சொன்னார் .

ஆனால் சாதம் வடிப்பது என்பது வடித்தட்டு  வைத்தும் லேசில் சரி வர செட் ஆகலை .
பிறகு கறிகாய் வடிகட்டி கொண்டு வடித்து  இப்போது செட்   ஆகி சாதம்  வடிக்க வந்துவிட்டது .

கிட்டத்தட்ட  ஒரு மாதமாக வடித்த சாதம்தான் .

ஒரே நாளில் குறையவில்லை .

படிப்படியாகத்தான்  குறைந்தது.

 அவ்வளவாக வயிற்று வலி வருவதில்லை .

 பழைய  சமையல் முறை மறுபடியும் வருவேன் என்று வீர வசனம் பேசிக்கொண்டு வந்து விட்டது.
நானும் நிறைய பேரிடம்  குக்கர் சாதம் இல்லாமல் வடித்த சாதமே ரெகமண்டு  பண்ணுகிறேன்.



டிஸ்கி :  வயிற்றில்  பிரச்னை இருப்பவர்கள் முடிந்தவரை வடித்த சாதம் சாப்பிடுவதை வாழ்க்கை முறையாக மாற்றவும் .

Monday, 1 January 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள் .


அனைவருக்கும்  மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!