Monday, 27 March 2017

எண்ணெய் இல்லாக் கீரை பஜ்ஜி தோசை


     
கை நிறையக்         கீரை போட்டு லேசாக பஜ்ஜி மாவில்

முக்கி எண்ணையில் பொரித்த  மொறு மொறு  பஜ்ஜி  

சாப்பிட யாருக்குத்தான் ஆசை இல்லை

ஆனால் அதில் உள்ள எண்ணெய் பலரையும் பயமுறுத்துகிறது .

 நான் எண்ணெய் பலகாரங்கள் என்றாலே கொஞ்சம் 

தள்ளித்தான் காதலிப்பது வழக்கம் .

புத்தர் கொள்கைகள் பிடித்தாலும் பஜ்ஜி

ஆசையை அறவே விட்டொழிக்க முடியவில்லை .

 மூளையைக் கசக்கிக் கொஞ்சம் ஐடியா பண்ணி செய்த பலகாரம் .

  பஜ்ஜி    டேஸ்ட் உள்ள   தோசை .

 எண்ணெய் கொஞ்சமே போதும் .

கடலை மாவும் அரிசி மாவும் 4  :1 என்ற விகிதத்தில்

 ,உப்பு தேவையான அளவு

சோடா மாவு கொஞ்சம்

கீரை பொடிப் பொடியாக நறுக்கியது    ( மாவை விட நிறையவே )

பச்சை மிளகாய் ஜூஸ் உங்கள் காரத்திற்குத் தேவையானது 

( நாலு அஞ்சு பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து ஜூஸ் பண்ணி வைத்துக் கொள்வேன்  எப்பொழுது ம் )

 பச்சை மிளகாய்த் துண்டுகளை விட ஜூஸ் எல்லா

இடத்திலும் சமமாகப் பரவும்

.வாயில் மாட்டி  கடிபட்டு  இம்சை பண்ணாது .

 எல்லாத்தையும்  ஒண்ணாக்  கலந்து தோசைக் கல்லில் மெலிதாக 

வார்த்து எடுத்தால் பஜ்ஜி  டேஸ்ட் உள்ள தோசை ,


தோசைக் கல்லில் ஒட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தால் 

  ( இரும்பு தோசைக் கல் தான் நான் உபயோகிக்கிறேன் )

ஒரு பெரிய வெங்காயத்தை எண்ணையில் தொட்டு முக்கி, 

கல்லில்  பரவலாகத் தடவிய பின்  தோசை செய்யவும்

ஒட்டாமல் அழகாக வரும் .

  மிக மிகக்  குறைவான எண்ணெய் விட்டால் போதும் .

கீரைக்குப் பதிலாக நான் கேரட் கத்தரிக்காய்  குடை மிளகாய் , முட்டைக் 

கோஸ்  ( கத்தரிப்பூ கலர் கோசில் பார்க்க அழகாக இருக்கும் )

கொத்தமல்லி எனவும் பல விதமாக க் கலந்து கட்டியும் செய்வேன்

நான் வடையைக் கூட இதே மாதிரி   தோசை  வடிவில் செய்து சாப்பிடுவேன் .



23 comments:

  1. அட! அருணா இதே தான் செய்வேன். சேம் சேம்!!! வெஜிட்டபிள் போட்டும், வெங்காயம் போட்டும்....இரும்பு தோசைக்கல்லில் நன்றாக வருமே!! மிக டேஸ்டியாக இருக்கும். நான் இதை ஆம்லெட் என்பேன். இதை இப்படிச் செய்து விட்டு, ப்ரெட் ஆம்லெட் (முட்டை ஆம்லெட் பதிலாக) செய்தும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். கீரை போட்டு அல்லது கொத்தமல்லி போட்டு, புதினா போட்டு, முருங்கைக் கீரை போட்டு...என்று நம் இஷ்டத்திற்கு இதில் விளையாடலாம்...

    இதனுடன் கொஞ்சம் ரவை சேர்த்துப் பாருங்கள் அதுவும் கொஞ்சம் கிரிஸ்பாக வரும்
    அதே போன்று நீங்கள் சொல்லியிருப்பது வடை ஆம்லெட் என்று நான் சொல்லுவேன் வீட்டில். அதைத் தேய்க்காமல் குண்டாக அப்படியே கல்லில் போட்டு சிம்மில் மூடி போட்டு வைத்து, திருப்பிப் போட்டு..... அதையும் ப்ரெட் ஆம்லெட் அல்லது பர்கர் போல் இப்படி நம் கற்பனைக்கு ஏற்ப...

    சூப்பர் ரெசிப்பி..கலக்குங்க. அருணா எஞ்சாய்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் ரவை சேர்த்தால் மொறு மொறுப்பு கூடும் என நினைக்கிறேன் . செய்து பார்க்கணும்

      Delete

  2. நீங்கள் செய்வது இன்ஸ்டண்ட் அடை தோசை...இதை முறையில்தான் நாங்கள் செய்வோம் ஆனால் என்ன கடலை பருப்பையும் அதோடு சிறிது அரிசியும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத்து அதில் கீரையை பொடிதாக நறுக்கி அளவிற்கு அதிகமாகவே போட்டு சமைப்போம்

    ReplyDelete
  3. எண்ணை இல்லாத பஜ்ஜி சாப்பிட வேண்டுமானால் இப்படி செய்யுங்கள் பஜ்ஜிக்கு மாவு கரைப்பது போல கரைத்து கொஞ்சம் கெட்டியாக அதில் உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை மெல்லிதாக் நறுக்கி பஜ்ஜிமாவில் புரட்டி எடுத்து மைக்ரோ அவனில் வைத்து பேக் பண்ணினால் எண்ணெய் இல்லாத பஜ்ஜி ரெடி

    ReplyDelete
    Replies
    1. மைக்ரோ அவன் இருந்தது யூஸ் பண்ணாமலேயே வேறு ஒரு தனி வீட்டில் ஒரு ரூமில் கொண்டு போட்டுவிட்டோம் பெரிய க்கும் அதே நிலைமை .
      நாங்கள் வசிக்கும் இடம் 1௦௦௦சதுர அடி . அதில் சாமான்கள் 999சதுர அடி . மூவர் நிற்க இருவர் இருக்க ஒருவர் படுக்க நிலைமை ....

      Delete
  4. கீதா மேடம் . நீங்க நல்லாவே செய்யறீங்க ... என் எல்லாத்தயும் சேர்த்து ஒரு புத்தகம் போடலாமே

    ReplyDelete
    Replies
    1. அருணா உங்களுக்கு ஐடியாவே தர தெரியவில்லை.....கீதா இவர்களின் பேச்சை கேட்டு புக் போட வேண்டாம் அதற்கு பதில் எங்களுக்கு பொங்கி போடுங்களேன் ஹீஹிஹீ

      Delete
    2. புக் போட்டா கீதா மேடத்திற்கு நோபெல் பரிசு கிடைக்கலாம் , பொங்கிப் போட்ட யாரு அதெல்லாம் தருவா ?

      Delete
    3. ஐயோ அருணா சும்மா இங்ஙன வந்து போடறதுதான்....அப்படியெல்லாம் இல்லபா...புக் போடற அளவுக்கு உங்கள் மாதிரி அளவெல்லாம் ஒன்னும் தெரியாது ஹிஹி...

      கீதா

      Delete
    4. மதுரை வீட்டுக்கு வாங்க பொங்கிப் போடுறேன்!!!ஹஹ்ஹ் இங்கியா பொங்கிப் போட முடியும்!!

      அருணா நோபலா ரொம்ப ஓவரா கீதே!!! ஹிஹீஹி...

      கீதா

      Delete
    5. என்னை விட நளன்கள் இங்கே ஸ்ரீராம், மதுரை, நெல்லை எல்லாம் இருக்காங்களே அருணா!! அவங்க பொங்கிப் போட்டு நாம் சாப்பிடலாம் ல!!!! இவர்கள் மூவருமே வெரைட்டி சமைப்பதில் கில்லாடிகள்!! உங்களைப் போல வித்தியாசமாகவும் கற்பனை எல்லாம் யூஸ் செஞ்சு சமைப்பாங்க!!!

      கீதா

      Delete
    6. என் நாக்கு கரி நாக்கு பலிக்கும் சமையலுக்கான முதல் நோபல் பரிசு உங்களுக்கே கிடைக்கும் கீதா ... பரிசு வாங்கும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்க (எக்கனாமிக்ஸுக்குப் பின்னாளில் தான் நோபல் பரிசு கொடுக்க ஆரம்பித்தார்கள் , அது போல சமையலுக்கும் வரலாம் )

      Delete
  5. என்னாது தோசை வடையா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . எண்ணெய் உபயோகம் கம்மியாகும்

      Delete
  6. பஜ்ஜியைவிட முன்னோட்டம் அருமை

    ReplyDelete
  7. பஜ்ஜி என்று சொல்ல முடியாவிட்டாலும் இது ஒரு மாதிரி சுவையாகவே இருக்கும். கீதா சொல்வது போல வித விதமான கலவைகளில் செய்வதுண்டு.

    ReplyDelete
  8. கீரை தோசை! அட இது நல்லா இருக்கே.... செய்து பார்த்துடலாம்!

    ReplyDelete
  9. அருமையான படைப்பு
    நாவூறுதே - தங்கள்
    உணவை எண்ணி

    ReplyDelete
  10. நல்ல யோசனை; துணைவியாரிடமும் பதிவைப் படித்துக் காட்டினேன். நீராவியில் வேக வைக்க முடியுமா என்று கேட்டாள்.

    ReplyDelete
  11. வாவ் ! பஜ்ஜி தோசை நல்லா இருக்கே

    ReplyDelete