Sunday, 15 January 2017

வட்ட அப்பம்


 ஒரு   புத்தகத்தைப்   படித்து   முடித்த    பின்னர்தான்   பதிவுப் பக்கம் 

வரவேண்டும்    என்று   எனக்கு நானே  தீர்மானம் 

   நிறைவேற்றிக்கொண்டதால்    பிளாக்    பக்கம்   வரவே இல்லை

அது ஒரு ஜப்பானிய பாடப் புத்தகம் .

மற்றபடி    செய்தித்தாள் கூட   ஒதுக்கப் பட்டது

டிவியும் தடா போட்டுக் கொண்டேன் .

முடிச்சாச்சு .

அதனால் தான்   மற்றவர்கள்   பிளாக்கிற்கு    காமெண்ட் கூடப் போடவில்லை 

. கொஞ்சம்     இந்தப்    பக்கம்   வந்தால் கவனம்    சிதறி விடுகிறது.

  இந்த    வட்ட அப்பம்   திரு ஸ்ரீராம்   அவர்களால்(தித்திப்பு தோசை

இன்ஸ்பயர்   செய்யப்பட்டு   செய்து   பார்த்த   ஒரு   பலகாரம் .

இது குழிப்பணியார மாவேதான் .
பச்சரிசி 100  கிராம்
புழுங்கரிசி 100  கிராம்
வெந்தயம் ஒரு சின்ன ஸ்பூன்
உளுந்து 50  கிராம்

 என்னிடம் தராசு உள்ளது

மற்றவர்கள் பச்சரிசி 4 :புழுங்கரிசி 4 :உளுந்து 1

என்கிற விகிதத்தில் ப் போடவும் .

 பிறகு   ஒரு    நான்கு    மணி    நேரம் கழித்து அரைத்து   எடுத்து   


சிறிதளவே   ஆப்ப சோடா ,   உப்பு     எல்லாம்    போட்டுக்    

கலக்கி    வைக்கவும்

ஒரு     நான்கு     அல்லது    ஆறு    மணி    நேரத்திற்குப்    பிறகு 

 இந்தக் கலவையுடன்  வடித்த    வெல்லப் பாகைக்  கலக்கவும் .

 முடிந்தால்   வாழைப்பழமும்   சேர்க்கலாம் .   

நான் சேர்க்கவில்லை.

ஏலக்காய்  தூள் பண்ணிப் போடவும் .

 பிறகு    இந்த மாவை க்  குக்கர்  பாத்திரத்தில்   நெய்  தடவியபின்  

 ஊற்றி  இட்லி    வேகவைக்கிற   மாதிரி   வேக வைக்கணும் .


வெந்து    ஆறிய   பின்    ஒரு சின்ன     வட்ட   வடிவ   எவர்சில்வர்    டப்பா   

 கொண்டு    வட்ட வட்ட மாக வெட்டி எடுத்தல்  வட்ட அப்பம்   ரெடி .

இது ரொம்பவே  ஈஸி..

,ஏனெனில்

1 .'ஆவியில் வேகிறது. ,நான் டயமர் வைத்துவிட்டேன் . நிற்க வேண்டிய அவசியமில்லை .
ஆனால்     குழிப் பணியாரத்திற்கு நின்றுகொண்டு  செய்யவேண்டும் .


2 . மாவு நீர்த்துப் போச்சோ கெட்டியா இருக்கோ  கவலையே வேண்டாம் .
எந்தப் பதமாக இருந்தாலும் வெந்துக்கும் .

3.நமக்குத் பிடித்தமான வடிவங்களில் கூக்கி கட்டர் கொண்டு கூட வெட்டலாம் .

4 . எண்ணைக் கொழுப்பு தவிர்க்கலாம்

Sunday, 8 January 2017

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2017

 நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்துக்குச் சென்றிருந்தேன் .

சென்ற வருடம் மழையால்  நடத்தப்  படவில்லை .

அதற்கு முந்திய வருடம் நடந்த போது சென்றிருந்தேன் .

அதைப்  பற்றிய பதிவு கூட போட்ட ஞாபகம் .

இந்த வருடம் ரொம்ப      தூரம்   நடக்க விடாத படி ஆட்டோ வில் கண்காட்சி  

நடை பெறும் இடத்திற்கு வெகு அருகிலேயே செல்லும் வகையில் 

அமைத்திருந்தார்கள் .

நான் பன்னிரெண்டு மணி அளவில் சென்றதால் கூட்டம் அவ்வளவாக 

இல்லை .கீழே உள்ள  படங்கள் வெளிப்புறக்   காட்சி .

கடைக்காரர்கள் கூட இந்த வருடம் இதுவரை   கூட்டம்     கொஞ்சமாகத்தான் இருக்கிறது என்கிறார்கள்

நான் அந்த இடத்தை விட்டு ஒரு நாலரை மணிக்கெல்லாம் வந்து விட்டேன் ,

புத்தகங்கள் எல்லாம் வழமை போல் தான்.

ஆனால்   இந்த   வருடம்   அவ்வளவாக   வடக்கிந்தியப்   புத்தகக் கடைகள்  இல்லை .
 கேரளாக் கடை  ஒன்று இருந்தது .

நடக்கும்   தரைத்  தளம்    மேடு பள்ளமாக    இல்லாமல்   கிட்டத்தட்ட  எல்லா இடங்களிலும்  சம தளமாகவே இருந்தன .

முந்திய   வருடங்களில்  இருந்ததை   விட    நன்றாகவே இருந்தது   பாராட்டத்தக்கது .
அங்கங்கே   உட்கார்ந்து   கொள்ள  நாற்காலிகள்   இருந்தன .
தவிர   கடைகள்(ஸ்டால்)    இல்லாத   இடங்களிலும்   பலர் உட்கார்ந்து கொண்டிருந்தனர் .



சகல விதமான புத்தகங்களும் கிடைத்தன .
ப்ரதிலிபி  கூட ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள் .

டிஸ்கவரி  புக் பேலஸ்    ஸ்டால்   முன்பு   
திரு உதயகுமார் ( கூடங்குளம்   )அவர்கள் ஜல்லிக் கட்டு   பற்றி பேசிக்

கொண்டிருந்தார்.   நிறைய  ஊடகங்கள்  வேறு அவரைச்   சுற்றி   காமிராக்

களுடன் நின்றிருந்தனர் .  

தவிர பொதுமக்களும் அவரைச்  சுற்றி   நின்று  கொண்டிருந்தனர் .

நான்   போட்டோ  எதுவும் அங்கே எடுக்கவில்லை .

தேவை  இல்லாமல் யாராவது   எதையாவது   கேட்பார்கள்   என்று   சும்மா பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன் .

பக்கத்தில்  இருக்கும்  ஆஞ்சநேயர்  கோவிலில்   மேற்பார்வை   செய்யும் ஒருவரைச்   சந்த்தித்தேன்.

அவர்   ஜைக்கோ   பப்லிஷ்ர்    கடையில்    பணிபுரிபவராம் .

அவரைத்   தவிர்த்த    தெரிந்த   முகங்கள்   எதுவும்   தென்படவில்லை .

 குழந்தைகளுக்கான   படம்   வரையும்   போட்டியா   அல்லது பங்கு பெற வைக்கும்   முயற்சியா   தெரியவில்லை   ஒரு  இடத்தில் நிறையக்
 குழந்தைகள்    பிரீ யாகக்   கொடுத்த   கிரேயான்களில்   படம்   வரைந்து கொண்டிருந்தனர் . பார்க்க    மன நிறைவாகவும்    மகிழ்ச்சியாகவும் இருந்தது.

 நானும்   ஒரு 1200 ரூபாய்க்கு  புத்தகங்கள் வாங்கினேன்
.எனக்கு   அல்சர்   பிரச்னை   இருப்பதால்    எண்ணெய்  பண்டங்கள்   வெளியில் சாப்பிடுவதைத்    தவிர்ப்பது    வழக்கம் . நேற்றும் அப்படித்தான்

ஆவின் ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டேன் .

ஐஸ்கிரீம்  கொழுப்பு இல்லையா என்ற   குறுக்குக் கேள்விகளுக்கு  எல்லாம்  “தடா  “.

ஒரு   ராஜஸ்தானி   ஊறுகாய்க்   கடை ரொம்பவே   என்னை   டெம்ப்ட் பண்ணியது
பிடித்தால் , மட்டுமே     வாங்குவேன்    என்று   கண்டிஷன்   போட்டுவிட்டு ஆசைக்கு    சாம்பிள்   மட்டும்    சாப்பிட்டு விட்டு ஜூட் .

 பிடிக்கவில்லயே !

வீட்டில் மற்றவர்கள் சாப்பிட மாட்டார்கள் . 

பிறகு நான்தான் எல்லாவற்றையும் சாப்பிட்டு வயிற்று வலியில்
அவஸ்தைப் பட ணும்.  தேவையா ?

“சாப்பிட வாங்ககடை இருந்தது .

ஆனால் சாப்பிடப் போகவில்லை போட்டோ மட்டும் எடுத்தேன்


டாக்ஸி புக் பண்ணலாமென்றால் நெட் கனெக்டிவிட்டி  சரியாக இல்லை .
திரும்ப   வரும்போது    ஆட்டோ     நியாயமான    கட்டணத்தில்    வந்ததுதான் ரொம்பவே   ஆச்சரியம் .



Friday, 6 January 2017

பூனை மொழி அறிந்த புதுமைப் பெண் .


  

 பூனை மொழி   எங்கே   சொல்லிக்   கொடுக்கிறார்கள்   என்றெல்லாம் கேட்கவேண்டாம் .

படித்துப்   பார்த்தால்   நீங்களே    ஒத்துக் கொள்வீர்கள்    எனக்குப்  பூனை மொழி   தெரியு ம்  என்று.

 எங்க   வீட்டில்   பூனைக்கு ப்   பிரசவம்   என்று எங்கேயோ      பூனை மொழியில்  எழுதி   வைத்திருக்கிறோம்   போல . எங்க   வீட்டு   பால்கனியில்   உள்ள அலமாரியில்தான்    பூனைகள்   குட்டி போடுகின்றன.


 ஆனாலும்   அவைகள்   ஒரு ராணுவக்    கட்டுப் பாட்டுடன் தான்   இருக்கும் .

பால்கனியைத் தாண்டி இது வரை வீட்டு உள்ளே வந்ததில்லை .

நானும்   கதவுகளைச்    சாத்தியே   வைத்திருப்பேன் .

 நேற்று   நான்   வேலை  முடிந்து   வந்த   பின்   பெட் ரூமில்  நுழைந்தால்
 பூனைமியாவ் " என்றது .

பத்துக்குப் பத்து   பெட் ரூமில் 89    சதுர அடிக்குச்    சாமான்கள் உள்ளபடியால்  பூனை    எங்கிருந்து கத்துகிறது   என்று கண்டு பிடிக்க  முடியவில்லை .

எனக்கும்   பயமாக   இருந்தது.

 கதவைச்   சார்த்திவிட்டு   வந்து விட்டேன்.

என்   கணவருக்குப்   போன் பண்ணினேன் .

உடனே   அவர்   பூனை  ” எத்தனை மணிக்கு வந்தது ?”

எப்படி வந்தது ?

எதுக்காக வந்தது ?

ரூமில் என்ன வைத்திருந்தாய்?

ரூமில் பூனை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது

 (சமையலா பண்ணும்? )
என்றெல்லாம்   கேள்வி   மேல்   கேள்வி   கேட்டதும்
 நான்   வெறுத்துப்   போய்
எனக்கு   ஜப்பானிய  மொழி தான் தெரியும்  பூனை
மொழியெல்லாம் தெரியாது
என்று சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணினேன்.

 பிறகு  கொஞ்ச நேரம் கழித்து " கேவலம்    ஒரு   பூனை   நம்   வேலைகளைக்   கெடுக்க  அனுமதிப்பதா ? "என்ற   ஒரு   தன்னம்பிக்கை   வார்த்தையால்   என்னை   நானே   உசுப்பேத்திக் கொண்டு   மீண்டும்
 அந்த ரூமிற்குப் போனேன் .

 "  மியாவ் " என்றேன் .

பூனையும்  "  மியாவ் " என்றது .

 திரும்பவும் நான்  "  மியாவ் ".

பூனையும்  "  மியாவ் "

 இப்படியே   நானும் பூனையும் . முதல் மரியாதை சிவாஜி   ராதா   மாதிரி  எசப்பாட்டு   பாடினோம்   

 நாலஞ்சு    "  மியாவ் " க்கு  அப்புறம்   எனக்கு  பயம்  வந்துடுச்சு .

 பூனை  நம்பளக்   கடிக்க வந்துடுமோன்னுட்டு .

திரும்பக்   கதவை    மூடிட்டு வந்துட்டேன்.

  அரை மணி கழிச்சு ஒரு வேலையாய் ரூமுக்குப் போனேன் ,

நான்   "  மியாவ் "

 பூனை இல்லை போல .

எசப்பாட்டு   மிஸ்ஸிங்

வேலையை முடித்த

 பின் வெளியே வந்து விட்டேன்

 ராத்திரி    ரெண்டு மணிக்கு ரூமுக்குப் போனேன் ,

 என்  "  மியாவ்மொழி கேட்டதும்    பூனையும் ."  மியாவ் "

 வேலைய    முடித்து வந்து விட்டேன் .
கதவை மறக்காமல் சாத்தி விட்டேன் ,


இப்பெல்லாம்  ரூமுக்கு நான் கதவைத் திறந்து  உள்ளே போனதும்  "  மியாவ் " என்கிறேன் .
பூனை ரூமில் இருந்தால்  "  மியாவ் " என்று பதிலளிக்கிறது.
இலை என்றால் நோ  "  மியாவ் "
 என்   பசங்க கூட    நீ என்ன   பண்றேன்னு   கேட்டா   பதில்   சொல்ல மாட்டாங்க .
ஆனால்   பூனை   எனக்கு   ரிப்ளைய்    பண்ணுகிறது   என்றால்
   எனக்குப்  பூனை மொழி   தெரிகிறது   என்று தானே அர்த்தம் .

( வேலைகள் நிறைய இருப்பதால் வார இறுதி மட்டுமே வர முடிகிறது )

 By Abaya  Aruna

 HOD – Department of  CAT Language


Sunday, 1 January 2017

சீன மற்றும் ஜப்பானியக் காலண்டர்


    சீன மற்றும்     ஜப்பானிய          சோதிடத்தில் ஒவ்வோரு வருடமும் ஒவ்வொரு விலங்கின் ஆண்டாக  கருதப்படுகிறது.


டிராகன் தவிர   மற்ற மிருகங்கள் அனைத்தும் பூமியில் உயிர் வாழ்வன.  .


 டிராகன்  ஒன்று மட்டுமே   மாய விலங்கு.

 சீனா ஜப்பான் போன்ற நாடுகளின் சோடியாக் காலண்டர் படி இந்த வருடம் சேவல் வருடம் அதாவது FIRE ROOSTER.

 சீன மற்றும் ஜப்பானிய சோதிடம்   ஐந்து மூலகங்கள்   12 விலங்குகளை அடிப்படையாக கொண்டுகணிக்கப்படுகின்றது.

ஐந்து மூலகங்கள் மரம் நெருப்பு நீர் உலோகம் பூமி .
12 விலங்குகள்
 1. எலி
2. எருது
3. புலி
4. முயல்
5. டிராகன்
6. பாம்பு
7. குதிரை
8. ஆடு
9. குரங்கு
10.சேவல்
11.நாய்
12.பன்றி
 இந்த  விலங்குகளின்  வரிசையில்  எலி   எப்படி மற்ற  மிருகங்களைத் தள்ளிவிட்டு  அது  முன்னாடி  நிற்கிறது என்பதற்கான ஒரு சுவாரசியமான கதை உண்டு
இந்தக்   கதை   ரொம்பவே   முக்கியமான    ஒரு கதை .

 ஏனெனில் பூனைக்கும் எலிக்கும்தீர்க்கவே முடியாத ஒரு பங்காளிச்  சண்டை

பரம்பரை   பரம்பரையாக    இருப்பதன்   காரணமும்   தெள்ளத்   தெளிவாய்ப் புரியும் .
ஒரு நாள்  கடவுள்  எல்லா  விலங்குகளையும்  அழைத்து  நீங்கள்  

 எல்லோரும்  என்   வீட்டுக்கு   ஜனவரி    ஒண்ணாந்தேதி   வாங்க   நான்  

  ஒன்று   முதல் பன்னிரண்டு  மிருகங்களுக்கு   மட்டுமே   நிற்கும்   வரிசைப் 

படி  ஆளாளுக்கு ஒரு   வேலை கொடுப்பேன் என்றாராம் .

பூனைக்கு சரியாகக்  காதில் விழவில்லையாம் .

 எலிகிட்டே  “சாமி என்ன சொன்னாரு “ன்னு கேட்டுச்சாம் .

அதுக்கு எலி  “ரெண்டாந்தேதி வரச்சொல்லி சொல்றாருன்னு” வேணுமின்னே தப்பா  சொல்லிடுச்சாம் .

 அப்புறம் ஜனவரி ஒண்ணாந்தேதி  வந்ததும் எல்லா மிருகங்களும் போச்சாம் .

 எருது தான்       நம்பர்     ஒன்னாக    முன்னாடி போச்சாம்.

.இந்த     எலி    மட்டும்     ரகசியமா    எருதின்    முதுகில்   ஏறி உட்கார்ந்துக்கிச்சாம்.

 கடவுள் கிட்டே   போனவுடனே    எலி   டபக்குன்னு    தாவிக்   குதிச்சு எருதைத்   தாண்டி ப்   போய்   முதல்   ஆளா   நின்னுகிடுச்சாம் .

 உடனே    கடவுள் சொன்னாராம்

"எலியே  எலியே நீதான் முன்னாடி வந்திருக்கே . “

இந்த வருஷம்     பிறக்கிறவங்களை    எல்லாம்   காப்பாத்த   வேண்டியது   உன் பொறுப்பு .
அடுத்த வருஷம் எருது ........
 அதுக்கு அடுத்த வருஷம் புலி ....

இப்படியே  வரிசையில் இருந்த எல்லா மிருகங்களுக்கும் 12  வருஷத்தையும் கொடுக்கிறார் .
 12  வருஷம் முடிந்தபின் திரும்பவும்  பொறுப்பு   எலி  எருது ... புலி ..... இப்படின்னு சொல்லிட்டாராம் .

 பூனை அடுத்த நாள் போச்சாம் .

கடவுள்நோ வேகன்ஸிஅப்படின்னுட்டாராம்

அதனாலே தான் பூனை வருஷம்ன்னு ஒன்னு கிடையவே கிடையாது

தன்னை  ஏமாத்திட்டு   முதல் ஆளாய்  போய்  நின்னு  தன்   காரியத்தை 

செஞ்சுக்கிட்ட   எலி   மேலே   பூனைக்கு   அன்னைக்கு   வந்த  கோபம் 

இன்னும்  நிக்கலையாம்

அதனாலே தான் எலியக்   கண்டா   பூனை தொரத்திக்கிட்டே இருக்காம்

ஆங்கில வருட ஆரம்பமும் சீன வருட ஆரம்பமும் வித்தியாசப் படும்.


  இதுதான்  சீன வருடங்களில் எலி முன்னாடி வந்த கதை