நேற்று சென்னைப் புத்தகக்
கண்காட்சி வளாகத்துக்குச் சென்றிருந்தேன் .
சென்ற வருடம் மழையால் நடத்தப் படவில்லை
.
அதற்கு
முந்திய வருடம் நடந்த போது
சென்றிருந்தேன் .
அதைப் பற்றிய பதிவு கூட
போட்ட ஞாபகம் .
இந்த வருடம் ரொம்ப தூரம் நடக்க
விடாத படி ஆட்டோ வில்
கண்காட்சி
நடை
பெறும் இடத்திற்கு வெகு அருகிலேயே செல்லும்
வகையில்
அமைத்திருந்தார்கள் .
நான் பன்னிரெண்டு மணி அளவில் சென்றதால்
கூட்டம் அவ்வளவாக
இல்லை .கீழே உள்ள படங்கள் வெளிப்புறக் காட்சி .
கடைக்காரர்கள்
கூட இந்த வருடம் இதுவரை கூட்டம் கொஞ்சமாகத்தான்
இருக்கிறது என்கிறார்கள் .
நான் அந்த இடத்தை
விட்டு ஒரு நாலரை மணிக்கெல்லாம்
வந்து விட்டேன் ,
புத்தகங்கள்
எல்லாம் வழமை போல் தான்.
ஆனால் இந்த
வருடம்
அவ்வளவாக
வடக்கிந்தியப் புத்தகக்
கடைகள் இல்லை
.
கேரளாக் கடை ஒன்று இருந்தது .
நடக்கும்
தரைத் தளம்
மேடு
பள்ளமாக இல்லாமல்
கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சம
தளமாகவே இருந்தன .
முந்திய
வருடங்களில் இருந்ததை
விட நன்றாகவே
இருந்தது பாராட்டத்தக்கது .
அங்கங்கே உட்கார்ந்து
கொள்ள நாற்காலிகள்
இருந்தன
.
தவிர கடைகள்(ஸ்டால்) இல்லாத
இடங்களிலும்
பலர்
உட்கார்ந்து கொண்டிருந்தனர் .
சகல விதமான புத்தகங்களும் கிடைத்தன
.
ப்ரதிலிபி கூட
ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள் .
டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் முன்பு
திரு
உதயகுமார் ( கூடங்குளம் )அவர்கள்
ஜல்லிக் கட்டு பற்றி
பேசிக்
கொண்டிருந்தார். நிறைய
ஊடகங்கள்
வேறு
அவரைச் சுற்றி
காமிராக்
களுடன் நின்றிருந்தனர் .
தவிர
பொதுமக்களும் அவரைச் சுற்றி
நின்று கொண்டிருந்தனர் .
நான் போட்டோ எதுவும்
அங்கே எடுக்கவில்லை .
தேவை இல்லாமல்
யாராவது எதையாவது
கேட்பார்கள்
என்று
சும்மா
பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன்
.
பக்கத்தில் இருக்கும்
ஆஞ்சநேயர்
கோவிலில்
மேற்பார்வை செய்யும்
ஒருவரைச் சந்த்தித்தேன்.
அவர் ஜைக்கோ
பப்லிஷ்ர்
கடையில்
பணிபுரிபவராம்
.
அவரைத்
தவிர்த்த தெரிந்த
முகங்கள் எதுவும்
தென்படவில்லை
.
குழந்தைகளுக்கான படம்
வரையும் போட்டியா
அல்லது
பங்கு பெற வைக்கும் முயற்சியா தெரியவில்லை ஒரு இடத்தில்
நிறையக்
குழந்தைகள் ஃ
பிரீ யாகக் கொடுத்த
கிரேயான்களில்
படம்
வரைந்து
கொண்டிருந்தனர் . பார்க்க மன
நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நானும்
ஒரு 1200 ரூபாய்க்கு புத்தகங்கள்
வாங்கினேன்
.எனக்கு
அல்சர் பிரச்னை
இருப்பதால் எண்ணெய் பண்டங்கள்
வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது
வழக்கம்
. நேற்றும் அப்படித்தான் .
ஆவின் ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டேன் .
ஐஸ்கிரீம் கொழுப்பு இல்லையா என்ற குறுக்குக் கேள்விகளுக்கு எல்லாம்
“தடா “.
ஒரு ராஜஸ்தானி ஊறுகாய்க் கடை ரொம்பவே என்னை டெம்ப்ட்
பண்ணியது .
பிடித்தால்
, மட்டுமே வாங்குவேன்
என்று கண்டிஷன்
போட்டுவிட்டு
ஆசைக்கு சாம்பிள்
மட்டும்
சாப்பிட்டு
விட்டு ஜூட் .
பிடிக்கவில்லயே !
வீட்டில் மற்றவர்கள் சாப்பிட மாட்டார்கள் .
பிறகு நான்தான் எல்லாவற்றையும் சாப்பிட்டு வயிற்று வலியில்
அவஸ்தைப்
பட ணும். தேவையா ?
“சாப்பிட
வாங்க “கடை இருந்தது .
ஆனால் சாப்பிடப் போகவில்லை ஃ போட்டோ மட்டும்
எடுத்தேன்
டாக்ஸி
புக் பண்ணலாமென்றால் நெட் கனெக்டிவிட்டி சரியாக இல்லை
.
திரும்ப
வரும்போது
ஆட்டோ நியாயமான
கட்டணத்தில்
வந்ததுதான்
ரொம்பவே ஆச்சரியம்
.
தலைநகரிலும் புத்தகக் கண்காட்சி நடக்கிறது - ஆனால் தமிழகத்திலிருந்து நியூ சென்சுரி பதிப்பகம் மட்டுமே வந்திருக்கிறார்கள். போக நினைத்திருந்தேன் ஆனால் இன்று போக இயலவில்லை. அடுத்த வாரம் முடிந்தால் போக வேண்டும். என்ன புத்தகம் வாங்கினீர்கள் என்றும் சொல்லி இருக்கலாம்! :)
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteதகவல் நன்று
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஒருமுறையேனும் சென்னைப் புத்தகக் கண்காட்சியினை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது சகோதரியாரே
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete// அங்கங்கே உட்கார்ந்து கொள்ள நாற்காலிகள் இருந்தன //
ReplyDeleteஒரு நல்ல விஷயத்தை கூர்மையாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள். இதே போல ஒவ்வொரு கண்காட்சியிலும் ஆங்காங்கே நாற்காலிகள் இருந்தால், சற்று உட்கார்ந்து விட்டு செல்லலாம். சுருக்கமான பதிவு என்றாலும், படங்கள் அதிக விவரங்களைச் சொல்லுகின்றன.
நல்ல விவரிப்பு,வாழ்த்துக்கள்,,,/
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteசென்ற வருடம் புத்தகக் கண்காட்சி நடந்தது. ஜூன் மாதத்தில் நடந்தது. பிளாக்கர்ஸ் ஒரு ஸ்டால் வைத்திருப்பதாகக் கேவிப்பட்டேன். பிறமொழிப் புத்தகங்கள் சில ஸ்டால்கள் வைத்திருப்பதாக செய்தித்தாளில் படித்தேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇந்த பதிவு வீட்டுக்கு வந்தபிறகு எழுதினிங்களா.. படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. இதுவரை எந்த ஒரு புத்தக கண்காட்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில்ல...
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநினைவுகள் - சென்னைப் புத்தகக் கண்காட்சி 2017 - படங்களுடன் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அபயாஅருணா
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteவருகைக்கு நன்றி
ReplyDelete