சீன மற்றும் ஜப்பானிய சோதிடத்தில்
ஒவ்வோரு வருடமும் ஒவ்வொரு விலங்கின் ஆண்டாக கருதப்படுகிறது.
டிராகன்
தவிர மற்ற
மிருகங்கள் அனைத்தும் பூமியில் உயிர் வாழ்வன. .
டிராகன் ஒன்று
மட்டுமே மாய
விலங்கு.
சீனா ஜப்பான் போன்ற
நாடுகளின் சோடியாக் காலண்டர் படி இந்த வருடம்
சேவல் வருடம் அதாவது FIRE ROOSTER.
சீன மற்றும் ஜப்பானிய
சோதிடம் ஐந்து மூலகங்கள் 12 விலங்குகளை
அடிப்படையாக கொண்டு, கணிக்கப்படுகின்றது.
ஐந்து மூலகங்கள் மரம் நெருப்பு நீர்
உலோகம் பூமி .
12 விலங்குகள்
1. எலி
2. எருது
3. புலி
4. முயல்
5. டிராகன்
6. பாம்பு
7. குதிரை
8. ஆடு
9. குரங்கு
10.சேவல்
11.நாய்
12.பன்றி
இந்த விலங்குகளின்
வரிசையில்
எலி எப்படி
மற்ற மிருகங்களைத்
தள்ளிவிட்டு அது முன்னாடி
நிற்கிறது
என்பதற்கான ஒரு சுவாரசியமான கதை
உண்டு.
இந்தக்
கதை ரொம்பவே
முக்கியமான
ஒரு
கதை .
ஏனெனில் பூனைக்கும் எலிக்கும்தீர்க்கவே
முடியாத ஒரு பங்காளிச் சண்டை
பரம்பரை
பரம்பரையாக
இருப்பதன் காரணமும்
தெள்ளத்
தெளிவாய்ப்
புரியும் .
ஒரு நாள் கடவுள்
எல்லா
விலங்குகளையும்
அழைத்து
நீங்கள்
எல்லோரும் என்
வீட்டுக்கு
ஜனவரி ஒண்ணாந்தேதி வாங்க
நான்
ஒன்று முதல்
பன்னிரண்டு மிருகங்களுக்கு
மட்டுமே
நிற்கும் வரிசைப்
படி ஆளாளுக்கு
ஒரு வேலை
கொடுப்பேன் என்றாராம் .
பூனைக்கு
சரியாகக் காதில்
விழவில்லையாம் .
எலிகிட்டே “சாமி
என்ன சொன்னாரு “ன்னு கேட்டுச்சாம் .
அதுக்கு
எலி “ரெண்டாந்தேதி
வரச்சொல்லி சொல்றாருன்னு” வேணுமின்னே தப்பா சொல்லிடுச்சாம்
.
அப்புறம் ஜனவரி ஒண்ணாந்தேதி
வந்ததும் எல்லா மிருகங்களும் போச்சாம்
.
எருது தான் நம்பர் ஒன்னாக
முன்னாடி
போச்சாம்.
.இந்த எலி
மட்டும்
ரகசியமா
எருதின் முதுகில்
ஏறி
உட்கார்ந்துக்கிச்சாம்.
கடவுள் கிட்டே போனவுடனே எலி
டபக்குன்னு
தாவிக்
குதிச்சு
எருதைத் தாண்டி ப் போய்
முதல் ஆளா
நின்னுகிடுச்சாம்
.
உடனே கடவுள்
சொன்னாராம்
"எலியே எலியே
நீதான் முன்னாடி வந்திருக்கே . “
இந்த வருஷம் பிறக்கிறவங்களை எல்லாம் காப்பாத்த
வேண்டியது
உன்
பொறுப்பு .
அடுத்த
வருஷம் எருது ........
அதுக்கு அடுத்த வருஷம்
புலி ....
இப்படியே வரிசையில்
இருந்த எல்லா மிருகங்களுக்கும் 12 வருஷத்தையும் கொடுக்கிறார் .
12 வருஷம்
முடிந்தபின் திரும்பவும் பொறுப்பு
எலி எருது
... புலி ..... இப்படின்னு சொல்லிட்டாராம் .
பூனை அடுத்த நாள்
போச்சாம் .
கடவுள்
“நோ வேகன்ஸி “அப்படின்னுட்டாராம்.
அதனாலே
தான் பூனை வருஷம்ன்னு ஒன்னு
கிடையவே கிடையாது
தன்னை ஏமாத்திட்டு
முதல்
ஆளாய் போய்
நின்னு
தன்
காரியத்தை
செஞ்சுக்கிட்ட எலி
மேலே பூனைக்கு
அன்னைக்கு வந்த கோபம்
இன்னும் நிக்கலையாம்
.
அதனாலே தான் எலியக் கண்டா பூனை
தொரத்திக்கிட்டே இருக்காம்
ஆங்கில
வருட ஆரம்பமும் சீன வருட ஆரம்பமும்
வித்தியாசப் படும்.
இதுதான் சீன
வருடங்களில் எலி முன்னாடி வந்த
கதை
அருமையான கதை :)
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகதை நல்லாத்தான் இருக்கு
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி
Deleteகதை அருமை...
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
வருகைக்கு நன்றி
Deleteசீன ஜப்பானிய காலண்டர் பற்றி பெயர் தெரியும் என்றாலும் கதையும் தகவழும் புதிது
ReplyDeleteகீதா
வருகைக்கு நன்றி
Deleteநல்ல கதை! :)
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி
Deleteசுவாரஸ்யம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇந்தக் கதைக்கு பாட்டி வடை சுட்ட கதை மாதிரி ஏகப்பட்ட version இருக்கு .
ReplyDeleteஎனக்கு புதிய கதை. மேடத்திற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteதாம்&ஜெர்ரி இதன் பின்னணிதானோ?
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கு நன்றி தங்கள் பதிவில் காமென்ட் போட முடியவில்லை . போட்டால் கூகிள் பிளஸ் என்று வருகிறது
Deleteமனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteசுவாரசியமான கதை. நல்லா இருந்திச்சி..
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete
ReplyDeleteசுவாரஸ்யமான பகிர்வு..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி
Delete