Wednesday 21 October 2015

வேஷ்டிக்கும் வாழ்வு வரும்


 லெகிங்க்ஸ் பற்றி யார் கொளுத்திப்போட்டது என்று தெரியாது ஆனால் கொஞ்ச நாளைக்கு அந்த டாபிக்கை வைத்து நிறைய  ட்விட்ட ர்கள்  பதிவுகள் டி.வியில் பேச்சு என்றெல்லாம் வந்தன .
லெகிங்க்ஸ் பற்றி   மாஞ்சு மாஞ்சு கவலைப்பட்ட  இந்தத் தமிழ்  கூறும் நல்லுலகம்   வேஷ்டியை மறந்தது ஏனோ?

.அது ஏனென்று தெரியவில்லை பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம்  விளம்பரம் அவ்வளவாகத் தேவைப்படாமலே விவாதிக்கப் படுகின்றன.
ஆண்கள் சம்பந்தப்பட்ட உடை ஹேர் ஸ்டைல்  போன்ற  விஷயங்களெல்லாம்  விளம்பரம் கொடுத்தாலும் அவ்வளவாக   விவாதிக்கப்   படுவதில்லை .

மக்கள் திலகம்  எம்ஜிஆர் கட்டினார் , நடிகர்   திலகம் சிவாஜி கணேசன்
கட்டினார்  அறிஞர் அண்ணா  , பெருந்தலைவர் காமராஜ் கட்டினார்
 என்றெல்லாம் டி.வியில்சொல்லி தமிழ்ப் பாரம்பரியத்தை உணர்த்தி

 வேஷ்டியைக்      கட்டச்சொல்கிறார்கள்  .இன்னும் பல பிரபலங்களும் வேஷ்டிக்கான பல பிராண்டு   விளம்பரங்களில்   நடிக்கிறார்கள்
 ( அதைக்கட்டினால் உனக்கும்  கம்பீரம் வரும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் ).விளம்பரப்படுத்தும் அளவுக்கு  மாநகரங்களில்  வேஷ்டி கட்டும் மக்களின் எண்ணிக்கை  கூடியதாகத் தெரியவில்லை

ரொம்ப நாள் முன்னடி நீயா நானா வில் இந்த  டாபிக்கை வைத்து ஒரு

ரஞ்சகமான  நிகழ்ச்சி   நடத்தினார்கள்(  பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் ,

 வேஷ்டியில் -- கோபிநாத் உள்பட )
 .முடிவில் வேஷ்டி"நிலைத்து நிற்கும் பெருமை உடைத்து   " என்று முடித்தார்கள் .

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் என்ன     தான் விளம்பரம் கொடுத்தாலும்
வேஷ்டி விற்பனை அதிகரித்தாலும்  வேஷ்டிகட்டிய மனிதர்களை
ஏன்   பெரிய மால்களிலும் ஷாப்பிங்  ஏரியாவில் அல்லது  அலுவலகத்திலும்

 அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை .?

நான் திருச்சியில் படித்துக் கொண்டிருந்த  போது  நேஷனல் காலேஜில்

 மட்டும்  வேஷ்டி கட்டிய மாணவர்கள்  வருவார்கள் .

நான்  TCSஇல் வேலை செய்தபோது  ஒரு வெள்ளிக்கிழமை ஒரு புராஜெக்டில்  வேலை செய்பவர்கள் அனைவரும்    வேஷ்டி மற்றும் புடவை  கட்டிக்கொண்டு   வந்தனர் .
அரசியல் பிரமுகர்கள்    சில பொது நிகழ்ச்சிகளில்  பங்கேற்போர்  மற்றும் கல்யாணத்தின் போது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வேஷ்டி உடையில் வருகிறார்கள்

 இப்பொழுது பாக்கெட் வைத்த வேஷ்டி கூட வந்துவிட்டது.

வேஷ்டி என்னதான் பாரம்பரிய உடை என்று பெருமையோடு  பேசப்பட்டாலும் , மேலும் சில வசதிகள் மாற்றங்கள் செய்து விற்பனை செய்தாலும் அதைப் பராமரிக்கும் விதம் சற்றே கடினமானது என்ற காரணத்தால் ஜீன்ஸ்    லுங்கி , பேன்ட் போன்ற உடைகளை விடவும் மக்களால்  அணியப்படுகிறது என்றே தோன்றுகிறது  .

 ம்ம்ம் .... பார்ப்போம் ஜீன்ஸுக்கு  ஒரு வாழ்வு வந்தால்   வேஷ்டிக்கும்   ஒரு வாழ்வு வராதா என்ன?


8 comments:

  1. நானும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது வேட்டி கட்டித்தான் போவோம்.
    எங்களது ப்ரொபசர்கள் பலர், கால்குலஸ் ஸ்ரீனிவாசன், சூரியநாராயணன் , சுப்பிரமணியன், வேட்டியில் தான் வந்தார்கள்.
    எனது தந்தை அட்வகேட் அந்தக் காலத்தில் கோர்ட்டுக்கு செல்கையில், வேட்டியை பஞ்சகச்சமாக கட்டி செல்வார்.
    பிற்பாடு, தஞ்சை அலுவலகத்தில் பல வருடங்கள் நான் வேட்டியில் தான் செல்வேன்.
    ஆனால், இப்போதெல்லாம், சென்னையில், வீதிகளில், யாரையும் வேட்டி கட்டி செல்பவரை பார்க்க முடியவில்லை.
    பார்க்குகளில் சிலரை காண முடிகிறது. அதே போல், சேலை கட்டும் சம்பிரதாயத்தை கொலு போது தான் , அல்லது சில முக்கிய வேளைகளில் கோவில்களில் பார்க்க முடிகிறது.

    இதைத் தவறு என்று சொல்ல முடியாது. சமூக பரிணாம மாறுதல் இது. .பார்க்கப்போனால், வேட்டியோ , புடவையோ, 1940 ல், நமது கிராமங்களில் அணிந்தது போல, இன்று, கிராமங்களிலும் , எனது கிராமம் உட்பட, பார்க்க இயலவில்லை.


    எனினும், நமது சட்டசபையிலே எல்லோருமே வேட்டியில் தானே
    வருகிறார்கள். அது ஒன்று தான் வேட்டி சட்டை இன்னமும் இருக்கிறது என்று தெளிவு ஆக்குகிறது.

    பாராட்டவேண்டியது தான்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி. என்னுடைய அப்பாவும் 1933-37 காலங்களில் செயின்ட் ஜோசஃப்
    கல்லூரியில் படித்த போது வேஷ்டி சட்டை தான். என்று சொல்வார்கள் .வேலைக்கு வந்தபோதுதான் பேண்ட் சட்டையாம்
    காலத்தின் மாற்றத்தை நாமும் அனுசரிக்க வேண்டிஉள்ளது

    ReplyDelete
  3. வசதிக்காக வேட்டி போய் பேண்ட் வந்து விட்டது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. உண்மைதான். வேட்டியைவிட லுங்கியின் நிலை இன்னும் மோசம்
    இந்தக் கருத்தைப் போலவே ஒத்த கருத்துடைய
    குலுங்கி அழுது கேட்கிறேன்-"என்னை ஏன் கைவிட்டீர்?" என்ற பதிவை நேரம் இருந்தால் வாசிக்கவும் . விகடன்டாட்காமிலும் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வருகைக்கு நன்றி.தங்கள் பதிவையும் படித்தேன் ஆம் ....நீங்கள் சொல்வது போல .கைலியும் மெல்ல மெல்லத் தேய்பிறை நிலவாக மாறுகிறது

      Delete
  5. தூய பளீர் வெள்ளை வேஷ்டி ஒரு கம்பீரத்தைத் தரும்!

    ReplyDelete