கிட்டத்தட்ட எல்லா
நாட்டுப் புராணக்கதைகளிலும் கல்வி மற்றும் அறிவுக்கென்று தனிக் கடவுள்கள் உள்ளனர் .ஹிந்து
மதத்தில் எப்படி சரஸ்வதிதேவியை வணங்குகிறார்களோ அது போலவே ஜப்பானிலும் BENZAITEN என்ற
கடவுளை மக்கள் வணங்குகிறார்கள் .இவர் ஷிண்டோ புத்தமதக் கடவுளாக வணங்கப் படுகிறார்.இவர்
முக்கிய 7 அதிருஷ்ட கடவுள்களில் ஒருவராகவும் கருதப் படுகிறார்.
இந்த தெய்வமும்
அடுக்குத் தாமரையில் அமர்ந்திருக்கிறார்.. சரஸ்வதிதேவி கையில் வீணையோடு இருப்பது போலவே BENZAITEN தேவியும் கையில் பிவா ( BIWA) அல்லது ஜப்பானிய மாண்டலின் போன்ற இசைக் கருவி கிட்டத்தட்ட வீணை போன்ற (வடிவில் மாறுபட்ட)இசைக்
கருவியை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
இவரை வழிபட்டால்
அறிவு ,வாக்கு வன்மை ,இசை,மொழி மற்றும் பல
கலைகளில் வல்லவராக முடியும் என்று நம்பப்படுகிறது.சில இடங்களில் மழை மற்றும் விவசாய
வளத்திற்காகவும் இவரை வணங்குகிறார்கள் .
இவருடைய உதவியாளர்களாக டிராகன் களும் பாம்புகளும் மட்டுமே ( முக்கியமாக
வெள்ளை நிறம் கொண்ட )
ரிக் வேதத்தில்
விரித்திரன் என்கிற பாம்பு வடிவ அசுரனை சரஸ்வதி அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது., ஜப்பானில்
BENZAITEN தேவியும் பாம்புகள் மற்றும் டிராகன்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார்
இங்கே BENZAITEN தேவிக்கான முக்கிய கோயில், டோக்கியோ நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில்
எனோஷிமா தீவில் உள்ளது
இந்தக் கடவுளின்
கோயில்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஆறு அல்லது ஆறு சார்ந்த இடங்களில் உள்ளது .இவர் FLOW " பணஓட்டம் " அதாவது பணப் புழக்கம் இவரை
வணங்கினால் வளமுறும் என்று நம்பப்படுகிறது.
காமகுரா பகுதியில்
உள்ள கோயிலில் மக்கள் தங்களின் பணப் புழக்கம் அதிகரிக்க நாணயங்கள் அதாவது காசை அந்த கோயிலில் உள்ள புனித நீரில் கழுவுகிறார்கள்.பணம் இரட்டிப்பாக ஆகும் என்று நம்புகிறார்கள்
(ஒரு சிறிய தொட்டி மாதிரி உள்ள நீர் நிலையில் காசு கழுவப்படுகிறது
இது ZENI ARAI என்று கூறப் படுகிறது ZENIஎன்றால் காசு
;ARAI என்றால் கழுவுவது என்று பொருள்)
கடலோரமாக உள்ள தீவுகளில் இந்தBENZAITEN தெய்வம் குழந்தைகளைக்
காக்கும் தெய்வமாகப் பெரிதும் வணங்கப் படுகிறார்.
இவரைத் தகுந்த துணையோடு சேர்த்து வைக்கும் தேவி எனவும்
வணங்குபவர் பலர்.
ஒரு சுவாரசியமான
கதை ஒன்று உண்டு .
ஹனாகக்கி பஷு என்று
ஒரு இளைஞன் இருந்தான் .
அவன் ஒரு BENZAITENகோயிலின்
திருவிழா விற்குப் போயிருந்த போது தண்ணீர் குடிக்க நீர் ஊற்று எதுவும் இருக்குமா என்று
தேடிப்போனால் நீர் ஊற்று எதுவும் இல்லை அதற்குப் பதிலாக ஒரு சுனை மட்டுமே இருந்தது
.அங்கே ஒரு காகிதம் அவன் காலடியில் காற்றில் இருந்து பறந்து வந்தது . என்னவென்று பார்த்தால்
அதில் ஒரு பெண்ணால் கையெழுத்து போடப்பட்ட கவிதை எழுதப் பட்டிருந்தது .கவிதை அவனை வெகுவாகக்
கவர ,அதை எழுதிய பெண்ணையே மணந்துகொள்ள வேண்டும்
என்பதில் வெகு தீவிரமாக ஆகிவிட்டான்.
கலைக்கடவுளை தன்னை
அவளுடன் சேர்த்து வைக்குமாறு வணங்கினான்..ஏழு நாட்கள் கோயிலில் இரவு பகல் என்றெல்லாம்
பாராது தவமிருந்தான்.பிறகு ஏழாம் நாள் முடிவில் அவனுக்கு ஒரு கோயில் சார்ந்த பெரியவர்
வந்து “:உம் பக்தியை வெகுவாக மெச்சினோம் பாதி
முகம் மட்டுமே காட்டிய பெண்ணை அவனுக்குக் காட்டி
.நீ நினைத்த பெண்ணை அடைவாய் என்று கூறி விட்டு மறைந்தார் .பிறகு வெளியில் வந்தால்
அந்தப் பெண்ணே அங்கு நிற்க அவளைக் கண்டு மறுபடியும் மயங்கி அவளிடம் கடவுளே உன்னை என்னிடம்
சேர்த்து வைத்தார் என்று முழு விவரமும் சொல்ல அவளும் ஒகே சொல்ல அவளின் குலம் கோத்திரம்
எதுவும் விசாரிக்காமல்( கடவுளே நேரில் வந்து சேர்த்து வைத்த காரணத்தால் ) அவளை மணந்து குடித்தனம் நடத்தினான் .ஆனால் அவள் அவன் கண்ணுக்கு
மட்டுமே தெரியப் பட்டவளாக இருந்தாள். இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நாள் பக்கத்து
ஊருக்கு வேலை விஷயமாக சென்றபோது ஒரு வீட்டின்
வேலைக்காரன் தன் எஜமானன் அழைப்பதாகச் சொல்ல இவன் போனான் .கடவுளின் அறிவுரைப் படி தான்
நான் உன்னை அழைத்தது .என்று சொன்னான் .தன் மகள் தனக்கு நல்ல துணை வேண்டி BENZAITEN
தேவி யிடம் இறைஞ்சி
க்யோதொவில் உள்ள கோயில்களில் தான் எழுதிய கவிதையை அனுப்பியதாகவும் சொன்னான்.பிறகு
கடவுள் உனக்கான துணை கிடைத்துவிட்டது என்றும் கடவுள் தன்னிடம் தன் மகளுக்கான மணமகனின்
அங்க அடையாளங்கள் பற்றிச்
சொன்னதாகவும் கடவுள் சொன்ன மாதிரியே
அவனின் அங்க அடையாளங்கள் இருந்தது
என்றும் அந்தப் பெண்ணின் அப்பா சொல்ல இவன் " இல்லை இல்லை எனக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது
என்று சொல்லி முடிக்கு முன்னரே அந்த அப்பா தன் மகளைக் கூட்டி வந்து காண்பித்தால் என்ன
ஆச்சரியம் !இவன் மனைவியே தான் அது.
அதாவது இத்தனை
நாளும் அவளின் ஆத்மாவுடன் இவன் வாழ்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறான். அதனால் தான்
அவளை மற்றவர்கள் பார்க்க முடியவில்லை என்று புரிந்து கொண்டான் . பிறகென்ன ஜப்பானிய
டும் டும் ...ஜாம் ஜாம் ...வாழ்க்கை
ஜப்பான் சரஸ்வதி க்கு ஏதேனும் சிறப்பு கொண்டாடும் நாட்கள் , நமது சரஸ்வதி பூஜை,போன்றவை உண்டா ?
ReplyDeleteஅங்கும் பாடல்கள் சரஸ்வதியைப் போற்றி பாடப்படுகின்றனவா?
நீங்கள் ஒரு பாடல் எழுதியிருந்தால் ( ஜப்பானிய மொழியில்) அதையும் நான் பாடியிருப்பேன்.
சுப்பு தாத்தா.
அறியாத செய்தி அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வருகைக்கு நன்றி
Deleteஉங்களின் ஆர்வம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது
ReplyDeleteநானும் என்னுடன் 2 வருடம் முன்பு வேலை செய்த ஜப்பானியத் தோழியிடம் இது பற்றிக் கேட்டேன் . அவள் ஷிண்டோ மதமாக இருந்தாலும் அந்த அளவுக்குத் தீவிர பக்தி அல்ல. இருப்பினும் ஒரு லிங்க் தருகிறேன் .
弁財天SUNA 祈りのバラード シニアライブvol 1 ட்45
என்ற யூ டியூபில் உள்ளது BENZAITENகடவுளின் பிரார்த்தனை .இதில் உள்ள வார்த்தைகள் எனக்கும் புரியவில்லை .
BENZAITEN கடவுளுக்கான ஒரு பிரார்த்தனை உள்ளது .ஆனால் அது பெரியதாக உள்ளது. நான் சுருக்கி சின்னதாக எழுதித். தருகிறேன் . இன்று நான் வகுப்பு எடுக்க வேண்டி உள்ளதால் பிறகு அதன் தமிழ் வடிவம் தருகிறேன்.கூடவே(ஜப்பானிய மொழியுடன் -ஜப்பானிய மொழியிலேயே , சில வரிகளை நீக்கிவிட்டு )
புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteதிரு சுப்புத் தாத்தா அவர்களுக்காக ஜப்பானிய மற்றும் நான் மொழி பெயர்த்த ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்துள்ளேன் . பாடல் மிகவும் பெரியது .எனக்கும் வகுப்புகள் இருப்பதால் சுருக்கி உள்ளேன் 汝にお言葉をお伝えいたしまする
ReplyDelete今日のご神業 ありがとうぞんじました
わたくし 弁財天(べんざいてん)なりまする
あの地は 非常に気が弱っておりました 浄化 必要にてござりました
あの地も もはや 自然と人が共存する滝では ござりませんでした
人々の生き方優先の場所でござりました
もう少し もう少し 自然を 神を 大切にしてほしいと望んでおりました
今日のこの日より わたくし この山 この滝 守ってまいりまする
どうぞ、日本に、溢れるほどの祈りの光が 集まりますように…。
I submit these words to thee
We propose thank you today for your supernatural
It will become my Benzaiten (Sarasvati) ie My Saraswathidevi
In that land mind had been weakened
purification of mind was made possible
.
.
.
protecting the the mountains and waterfalls better than today.
.
.
.
Please make the rays of prayers rather well as if flooding .
Thank you
Thanks a lot.very much similar to our way of expressions
Deleteone correction of the last sentence
ReplyDeletePlease make the rays of prayers well (powerful ) as if over-flooding
Very nice to read new information.Thanks for sharing it. After reading about benzaiten god , i like her very much because she satisfies the role of saraswathi ( study), lakshmi (money), shakthi (protection) as single god.
ReplyDelete