Monday, 12 October 2015

மாறியது நெஞ்சம் !


நானும் ஒரு 15 வருடங்களாக ஜப்பானிய மொழி என்றில்லாமல் எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஆனால்  டிமாண்டு உள்ள பாடங்களை மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் .
 எப்பவுமே மாணவர்களின் மன நிலையைக் கூர்ந்து கவனித்துத்தான் நான் பாடம் நடத்துவேன் ..

அதில் நான் உணர்ந்த ,தெரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்று
 உண்டு  .

சமீப காலங்களில் மாணவர்களின் நடத்தையில் அதாவது பாடம் சொல்லிகொடுக்காமல் ஒரு சிறிய (பிரேக் )இடைவெளி விடும் நேரங்களில் மாணவர்கள் என்ன பண்ணுவார்கள் என்பதில் ஒரு பெரிய மாற்றமே
நிகழ்ந்துள்ளது .

பழைய காலங்களில் சொல்லப்போனால் நான் படித்த காலங்களிலும்  மற்றும் ஒரு 15 வருடம் முன்பு கூட இது போன்ற பிரேக் விடும் நேரங்களில்
 "அப்பாடா !"என்று பக்கத்தில் உள்ளவர்களுடன் பேச ஆரம்பித்து விடுவோம் .வகுப்பே ஒரு சந்தைக்கடை அளவுக்கு கூச்சல் போடும் .

ஆனால் இப்போது ,அப்படி இல்லை .பசங்கள் ரொம்பவே சமத்து .

அடுத்தவனிடம் நொய் நொய் என்று பேசி வம்பு பண்ணுவதில்லை.
முன்பெல்லாம் நான் தயவு செய்து கத்தாதீர்கள் , காது செவிடாகும் போல உள்ளது என்றெல்லாம் நான் அத்தனை பேர் சத்ததிற்கும் மேலே ஹை டெசிபலில் காட்டுக்கத்தல் கத்திய காலமும் உண்டு .
கிளாஸ் நடுவில் கூட பழைய காலம் மாதிரி அவ்வளவாகப் பேசிப் பொழுதைக் கழிப்பதில்லை .
அப்படியானால் மாணவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்கிறீர்களா?
வேறே என்ன ?

பிரேக்கிற்காகவே காத்துக்கிட்டிருந்த மாதிரி ....

 ஹஹ்ஹ...ஹா ....டச் ஸ்கிரீன் உள்ள போனில் விரலால் தடவித் தடவி ...........


7 comments:

  1. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      இன்னும் 2 வருஷத்திலேயே எப்படி மாறுமின்னு எப்படியாப்பட்ட ஜோசியராலேயும் சொல்லமுடியாது

      Delete
  2. நான் கிளாசுக்குப் போயிட்டா போன் சைலன்ட்-ஆகிடும். யாராவது போன் பண்ணியிருந்தாங்கன்னா மட்டும் அவங்ககிட்ட பேசுவேன்... மற்றபடி நோ இணையம்...

    ReplyDelete
    Replies
    1. இன்னமுமா டீச்சர் பேச்சை அப்படியே கேக்கிற ஸ்கூல் பையனா இருக்கீங்க ? Greaaaaaaat!

      Delete
  3. ஆமாம் சகோதரி! இப்பல்லாம் பசங்க ரொம்ப முன்னேறிட்டாங்க????!!! இப்பதான் விரல் நுனி வெர்ச்சுவல் கணினி வந்துருச்சே ஒரு இந்தியர் அமெரிக்காவுல கண்டுபிடிச்சுருக்கறதா காணொளி எல்லாம் கூட எதிர்காலத்துல அப்படித்தான் இருக்குமோ...விரலால் தடவுவது இப்போது அப்போ விரலே காட்சியாக....ம்ம் எங்க போகுதோ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      கரெக்ட் .ஆனாலும் என் கண் முன்னேயே டெக்னாலஜி மாறுவதை ரசிக்கிறேன்

      Delete
  4. கைபேசி அவர்களின் ஓர் அங்கமாகி விட்டது.
    நன்று

    ReplyDelete