நாம் வாழும் சமுதாயத்தில் ,உலகில் உள்ள முரண்பாடுகள் பற்றி சீரியஸாக ஏதோ சொல்லப்போகிறேன் என்று நினைக்கவேண்டாம் .
விளம்பரங்கள் எனும் அலை அல்ல சுனாமியால் இழுத்துச்செல்லப்பட்டு கன்னா பின்னா என்று சாமான்களை வாங்கிக் குவிக்கிறோம் .
உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கறிகாய்கள் அத்தனையையும் கூட வெறும் ஐந்தே நிமிடத்தில் கட் செய்யும் திறமை மிக்க வெஜிட்டபிள் கட்டர், அதுவும் சிரித்துக் கொண்டேகட் செய்யலாம் . (இதில் காமெடி என்ன வென்றால் கட் பண்ணுவது சில சமயம் ஆணாகக் கூட இருக்கின்றனர் ).
அதை வாங்கி வந்து வீட்டில் கட் பண்ணும் ஆணோ பெண்ணோ விளம்பர நாயகன் /நாயகி மாதிரி சிரிக்காமல் எப்போதும் போல உர்........ மூஞ்சி தான் .
அரை மணியில் சமைக்ககூடிய சமையல் உபகரணங்கள்
ஏகப்பட்ட தினுசில் ...........
,சமைத்து அப்படியே பரிமாறலாம் மாதிரியான பாத்திரங்கள் , அதுவும் சில வகை வெள்ளை செராமிக் பாத்திரங்கள் கழுவக்கூட வேண்டாமாம் .
லேசாக ஒரு துணி கொண்டு துடைத்தால் போதுமாம் .
சானல்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு வேப்பிலை அடிக்கிறார்கள் .
ஒரு நடிகரோ நடிகையோ சொன்னால் போதும் ...........
அவ்வளவுதான்
நாமும் அதாவது படித்த நாமும் அவற்றை வாங்கிக்
குவிக்கிறோம்.
நமக்கு நேரம் முக்கியம் என்பதால் பணத்தைப் பார்ப்பதில்லை .
அந்த gadgets எல்லாம் அரை மணியில் சமைக்கும் என்றால் ஏன் வீட்டில் சமைக்காமல் வெளியில் இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ?
எல்லா ஹோட்டல்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றதே ஏன்?
வீட்டில் சமையல் செய்வது அந்தளவு ருசி அல்லது பணம் ஈடுவதே ருசி...!
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteநீங்கள் எப்படி எப்பொழுதுமே பதிவு இட்டபின் முதல் ஆளாக காமெண்ட் போடுகிறீர்கள்?
மற்ற முக்கிய வேலைகளுக்கு இடையே monetary benefit இல்லாத இந்த வேலை செய்யும் நீங்கள் நிஜமாகவே கிரேட் .
//ஏன் வீட்டில் சமைக்காமல் வெளியில் இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ?//
ReplyDeleteவீட்டுல வாய்க்கு ருசியாக சமைச்சா ஏன் வெளியே சாப்பிடுகிறார்கள் நான் பெண்களுக்கு நன்றாக சமைக்க தெரியலைன்னு குற்றம் சொல்லவில்லை(அப்பாடா பூரிக்கட்டையில் இருந்து தப்பியாச்சு) அவர்களுக்கு சீரியல் பார்க்கவே டைம் இல்லை அப்பறம் எப்படி புருஷன்னுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடுவது
என்றாவது ஒருநாள் ஹோட்டலில் சாப்பிடலாம் சில குடும்பங்களில் தினமும் சாப்பிடுபவர்களும் இருக்கின்ரார்கள்
ReplyDeleteவீட்டுல சமைக்கறதுதான் நல்லாருக்கும்...நாங்கள் எப்போதும் எங்கு சென்றாலும் பெரும்பாலும் வெளி உணவைத் தவிர்க்க முனைவோம். தவிர்க்க முடியாத தருணங்களைத் தவிர...ஆனால் சில உணவுகளை நல்ல உணவகங்களில் சுவைக்கவும் ஆசைப்படுவதுண்டு
ReplyDelete