Friday, 10 July 2015

வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்க

  நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதும் பதிவு .
 முதுகு வலி வந்தபின் என் மகன் ஒரு ஐ பேட் வாங்கிக்கொடுத்தான் .அதே நேரம் என் லேப்-டாப்பும் கொஞ்சம் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டதால் பதிவு எழுதவில்லை.ஐ பேட் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை .அதில் காப்பி பேஸ்ட்பண்ண வரவில்லை.வேகமாக  ஆங்கிலமே டைப்  செய்ய இன்னும் வரவில்லை . காப்பி பேஸ்ட் அதில் ஏடாகூடமாக வருகிறது.

அதனாலேயே காப்பி பேஸ்ட்பண்ணி காமெண்டு கூட போட முடிய வில்லை .
டீச்சிங் தவிர வேறு வேலையும் எடுக்க வில்லை . எனவே ஒரே ஒரு லெவல் மட்டும் மிச்சம் வைத்துள்ள ஜப்பானிய மொழிப் பரீட்சை யாவது எழுதலாமே என்று எண்ணி வெகு சிரத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.


பரீட்சைக்கு ஒரு 10 நாள் முன்னே இருக்கும் .
திடீரென்று ஒரு நாள் பதிவர் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன் என்றார் .

 அவருடன் தொலைபேசியில் தொடர்புடன் இருந்தேன் . பிறகு  எப்படியோ நின்றுவிட்டது (ஏதோ  வேலை அது இது என்றெல்லாம் புருடா விட இது என்ன ஆபீஸ் லீவு அப்ளை பண்ணுகிறோமா என்ன ).  ஆஹா நம்மளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இந்த உலகில் ஒருவர் இருக்கிறாரே என்று  மனசு ரொம்பவே  மானாட மயிலாட ஆடியதென்னவோ உண்மை .

பரீட்சை எழுதும்  ஸ்கூலில் தான் முதல் முதலில் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்களையும் அவர் மனைவியையும் (  மனைவியும் ஜப்பானிய மொழி கற்கிறார் ) சந்தித்தேன்.


படிப்பிலேயே முழு கவனமும் இருந்ததால் வீடு குப்பை போல மற்றவர் கண்களுக்குத் தெரிந்தாலும் எனக்கு என்னவோ ஒரு ஒரு குப்பையும் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தின் மௌன சாட்சிகளாய்த்தான் தென்பட்டது. ( குப்பையையும் கலைக்கண்ணோடு பார்க்கும் ...... ஹா ....ஹா. நிறுத்திக்கிறேன்).
திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  பேசியபின் லேப் டாப்பையும் சரிபண்ணிவிட்டு
  வீட்டையும்  ஒழுங்காக வைத்துவிட்டு எழுத ஆரம்பிக்கிறேன். 

10 comments:

  1. வாருங்கள் தொடருங்கள்

    ReplyDelete
  2. Waku Waku வகுப்பு நடக்கும்போது நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் தான் நீங்கள் என்று தெரியாது பரீட்சை நாளன்று உங்களை நேரில் சந்திக்காத வரையில்.... :)

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி.என்னைப் பார்த்தால் பிரபல (பிரபல ?)பதிவராகவும் தெரியவில்லை பிரபல (பிரபல ?) டீச்சராகவும் தெரியவில்லையா?

    ReplyDelete
  4. அட! நீங்கள் ஜப்பான் மொழி என்றதுமே ஸ்கூல் பையன் சரவணன் தான் நினைவுக்கு வந்தார். எங்களுக்கு நல்ல நண்பர் ......---துளசிதரன்

    கீதா: அப்போ சென்னைதானா நானும் சென்னை தான்....சந்திப்போம்....

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி .சென்னையில்தான் வசிக்கிறேன் நிச்சயம் சந்திப்போம்.திருகார்த்திக் சரவணன் ( ஸ்கூல் பையன் )மூலமாக

    ReplyDelete