பச்சை காய்கறிகள் சாப்பிடுகிறேன் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஜப்பானில் மீனை பச்சையாக சமைக்காமல் சாப்பிடுவார்கள் .அதனால் அவர்கள் சருமம் பள பள என்று இருக்கும்
ஆனால் எனக்கோ கறிகாய் பச்சையாகச் சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் கிடையாது .அதனால் எனக்கு தெரிந்த வழியில் நானும் கெத்து காட்டவேண்டும் என்று நினைத்தேன்.சரி .
இது ரொம்பவே ஈஸியான
ஒரு சிற்றுண்டி.
தேவையான
பொருட்கள்:
கடலை பருப்பு 100 கிராம்
சிகப்பு மிளகாய்
தேவைக்கேற்ப
உப்பு சிறிதளவு
பெருங்காயம்
சிறிதளவு
இஞ்சி
இவை மட்டுமே
வேறு ஏதாவது சேர்த்துக்
கொள்ள வேண்டும் என்றால் அது உங்கள் இஷ்டம்.
கடலைப்பருப்பு உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்
இப்பொழுது நான் ஒரு ஆளுக்கான அளவாக
ஒரு 100 கிராம் கடலைப்பருப்பு எடுத்து ஊற வைத்தேன்.
பிறகு இரண்டு மணி நேரம் ஆன
பிறகு காய்ந்த மிளகாய் ஒன்று கொஞ்சம் உப்பு பெருங்காயம் இஞ்சி இவற்றைச் சேர்த்து
தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் அரைக்க
வேண்டும் .
அரைத்த பின் அந்தக் கலவையை சிறிய டம்ளர்களில் இதுபோன்று கொஞ்சம் எண்ணெய் தடவி ஊற்றி வைக்கவும்.
ஊற்றி நீராவியில் வேக வைக்கவும் .வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு தட்டில் கொட்டிக் கவிழ்த்தால் இதுபோன்று தொட்டி வடிவில் உங்களுக்கு ஒரு ஸ்நாக் கிடைக்கும் .பிறகு அதில் நடுவே டூத் பிக் கொண்டு சிறிய துவாரம் செய்யவும் .
அந்த துவாரத்தில் கொத்தமல்லி தழை எடுத்து செருகி வைக்கவும் ரெடியாகிவிட்டது. நமது Bonzaai ஸ்நாக்ஸ்.
எப்படி இருக்கிறது எனது ஐடியா
Super cute bonsai!😍 Very innovative Sensei!💐Must be yummy😋 too.
ReplyDeleteஉசிலி செய்யும்போது து.ப க.ப அப்படியேவோ, வாணலியில் பிரட்டியோ சாப்பிடுவதுண்டு. இது சற்று மாறுதலாய் இருக்கிறது. செய்துடலாம் ஒருமுறை.
ReplyDeleteSuper snacks..Pesarattu idli type
ReplyDeleteசெய்முறை பயங்கர கஷ்டமாக இருக்கும் போலயே...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஆஹா... வித்தியாசமான உணவு! செய்து பார்க்க ஆவல்!
ReplyDelete