வகுப்புகள் +வீட்டு
வேலைகள்:
தவிர வீட்டுக்கு ஒரு புது நபர் வந்து மூன்று மாதம்
ஆகிறது . இதனால் தான் வலைப்பக்கம் வர இயலவில்லை .
புது நபர் பேரன்
.
வலை உலகில் இரு பிரபலமான
பதிவர்களின் சந்திப்பு பற்றித்தான் இப்போது எழுதப் போகிறேன் .
அந்த இரு வலைப் பதிவர்களும்
ஒரே கல்லூரியில் படித்தவர்களாம்
இருவருமே திருச்சியில்
வளர்ந்தவர்களாம் .
இருவருமே 40 வயதைக் கடந்தவர்கள்
இருவருமே உலக விஷயங்கள்
நாட்டு நடப்புக்குகளில் ரொம்பவே அப்டேட் ஆக
இருப்பவர்கள் .
இருவருமே பல நாட்களாக
சந்திக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தாலும் எதோ காரணங்களால் சந்திப்பு நிகழமுடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே
இருந்தது .
கடைசியாக இருவரும் புதன்கிழமை அன்று 27
.2 .2019 அன்று சந்தித்துக் கொண்டனர் .
வயதிற்கேற்ப திருச்சி
யில் படித்த காலத்தில் நடந்த வற்றை அசை போட்டு மகிழ்ந்தனர் .
கிட்டத்தட்ட ஒன்னரை மணி
நேரம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை
.
மணியும் எட்டுக்கு மேலே ஆகிவிட்டபடியால்
பேச்சை முடிக்க மனமின்றி முடித்து அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
ஹி..ஹி ..
சந்தித்தவர்கள் நானும் பானுமதி தம்பட்டம்
அவர்களும்தான்.
பேரில் தான் தம்பட்டம் தவிர நிஜத்தில் எதிர் மறை
.
எதோ பல நாள் பழகியவரைப் போன்று மிக சகஜமாகப் பேசினார்
. கன்னடம் பேசிக் கற்றுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் ஓகே .அது normal
ஆனாலும் கன்னடம் எழுதப் படிக்க
அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு ரொம்பவே inspiring ஆக இருந்தது.
அதற்காக அவர் எடுக்கும் முயற்சி பிரமிப்பாக இருந்தது
நான் நேரில் சந்தித்த
கீதா ஒரு வகையில் inspiring ஆக இருந்தார் என்றால் இவர் வேறு வகையில் .
நெடு நாள் கழித்து திருச்சி சம்பவங்களை நினைவு கூர்ந்தது
மன நிறைவாக இருந்தது
தொடர்க...
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஅருமை..எழுதிய விதமும்
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteசூப்பர் எனக்கு நீங்க ரெண்டு பேரும் சந்திச்சங்கன்னு ஒரு பட்சி வந்து சொல்லிட்டுப் போச்சு!!! ஹா ஹா ஹா ஹா..
ReplyDeleteசூப்பர்! பானுக்கா செம ஜாலியா நிறைய விஷயங்கள் பேசுவாங்க. பாத்தீங்கனா இந்த மேகசீன்ல எல்லாம் அங்கங்க கட்டம் போட்டு டிட்பிட்ஸ் கொடுப்பாங்களே அந்த மாதிரி அக்கா நிறைய தகவல் வைச்சுருப்பாங்க...தகவல் களஞ்சியம்...கதை ரொம்ப அழகா எழுதுவாங்க...எல்லாமே ஷார்ட் அண்ட் ஸ்வீட்ட உங்கள மாதிரி தான் எழுதுவாங்க...நிறைய கத்துக்கலாம அவங்ககிட்ட.. (நீங்களும் சுருக்கமா அழகா எழுதுவீங்க என்னை மாதிரி நீயீயீயீயீயீயீயீயீயீயீயீய்ட்டி முழக்கி எழுதாம!! ஹா ஹ அஹா)
நீங்க சந்திச்சதுல சந்தோஷம்..அதுவும் ஒரே ஊர் கல்லுர்ரி அப்ப கேட்கனுமா...
நான் எந்த விதத்தில இன்ஸ்பைரிங்க்??? அப்படினு இல்லாத மூளைய தேடிக் கசக்கிக்கிட்டிருக்கேன்...! ஹா ஹா..எனிவே நன்றி உமா..
கீதா
உங்களை பற்றி ஒரு மகளிர் தினத்தன்று தனி பதிவே போட்டேனே
Deleteபிரமாண்டமான, பிரபலமான பதிவர்களின் சந்திப்பை அறிந்திட தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதொடரட்டும் சந்திப்புகள்.
வருகைக்கு நன்றி
Deleteஹாஹாஹா! இந்த குறும்பு தான் கில்லர்ஜி.
Deleteஹாஹாஹா! இந்த குறும்பு தான் கில்லர்ஜி.
Deleteநம் சந்திப்பை பதிவாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் சந்தோஷம். நன்றி!
ReplyDeleteநட்புகள் என்றும் வாழ்க. இருவரையுமே நானும் நேரில் சந்தித்துள்ளேன். இருவரைப் பற்றியும் நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
ReplyDeleteஆம் .. இருவரையும் சந்தித்தாலோ பேசினாலோ உற்சாகம் நம்மிடம் தொத்திக் கொள்கிறது
Deleteஇருவருமே பெரும் பதிவர்கள்தான்
ReplyDeleteசந்திப்புகள் தொடரட்டும்
வாழ்த்துகள் சகோதரியாரே
ஆம் .. இருவரையும் சந்தித்தாலோ பேசினாலோ உற்சாகம் நம்மிடம் தொத்திக் கொள்கிறது
Deleteஉண்மை நண்பர்கள் நீண்ட காலம் கழித்து சந்தித்தால், நேரம் போவதே தெரியாது தான்.
ReplyDeleteஆகா இனிமை!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete