Wednesday, 1 August 2018

குறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க


எனது குழிப்பணியாரச் சட்டி சோதனைகளில்  வெற்றிக்கு மேல் வெற்றியே!
 வடை பண்ணலாம் என்றுதான்  நினைத்தேன் .
ஆனால் சாப்பிட ஆள் வேண்டும் என்பதால் அந்த முயற்சியைச் சிறிது தள்ளிவைத்துள்ளேன் .
.
 சரி என்று ஹோதாவில் இறங்கி சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்து பார்த்தேன்.
சும்மா சொல்லக்கூடாது தேவாமிர்தம் 

இன்று வத்தல் குழம்பு (புளிக்  குழம்பு ) +.சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  நல்ல காம்பினேஷன் ஆக இருந்ததது .
அதுவும் தயிர் சாதத்துடன்  சகலவிதமான பொருத்தங்களும் அம்சமாகப் பொருந்தியது . 

தேவையான பொருட்கள்:

 வேகவைத்த சேப்பங்கிழங்கு  14 துண்டுகள் (ஏழு குழி என்பதால் )
 காரப் பொடி  தேவைக்கேற்ப
 உப்பு                  தேவைக்கேற்ப 
எண்ணெய்          மிகக் குறைந்த அளவு

 செய்முறை :

 முதலில் சேப்பங்கிழங்குகளைக் கழுவி விட்டு நன்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .


 பிறகு அதில் காரப் பொடி உப்பு சேர்த்து நன்கு  கலந்து வைக்கவும்.எண்ணெய் தடவ வேண்டாம் .

அதன் சாரம் நன்கு கிழங்கில் சேரும் வரை ஒரு பத்து நிமிடம் ஊறவைக்கவும் .(Marinate )




 பிறகு குழிப்பணியாரச் சட்டியை   அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் ஒவ்வொரு குழியிலும் ஒரு ஒரு சேப்பங்கிழங்கினைப் போடவும் .

ஒரு ஐந்து நிமிடம் ஆனதும் ஃ போர்க் கொண்டு திருப்பி விடவும் .இரண்டே நிமிடத்தில் நன்கு ரோஸ்ட் ஆகிவிடுகிறது .


 முதல் செட் தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது , அடுத்த செட் எல்லாம் சீக்கிரம் ரோஸ்ட் ஆகிறது ,


ஒரு ஒரு கிழங்கும் பர்ஃ பெக்கெட்டாக எல்லாப் பக்கமும் ரோஸ்ட் ஆகி ஒன்றோடொன்று சேர்ந்து குழைந்து போகாமல்  இருந்தது பார்க்க அழகு .எண்ணெய் செலவும் மிக மிகக் குறைவே .என்பது பெரிய பிளஸ் பாய்ண்ட் ።


 சேப்பங்கிழங்கு ரோஸ்டின் அல்டிமேட் என்பதே இது தானோ என்று நினைக்கும் அளவுக்கு டேஸ்ட் ஆக இருந்தது
சூடாகச் சாப்பிடும் போது எனக்கு நானே ஏதாவது ஒரு அவார்டு கொடுத்துக் கொள்ளலாம் போலத் தோணியது.




15 comments:

  1. உங்க ஊர்ல சேப்பங்கிழங்கு மிக சின்னதாக இருக்கும் ஆனால் எங்க ஊர்ல் பெரியதாக இருக்கும் வேண்டுமானால் நாங்கள் சிறிது சிறிதாக கட் பண்ணிதான் போட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எல்லாம் ஓசி பிரியாணி சாப்பிட்டுத்தானே பழக்கம்

      Delete
  2. சாப்பாட்டு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்கள் போல இருக்கே

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி .நீங்கள் பிறந்த நாட்டிலும் பெரியசைசு சேப்பங்கிழங்குதான் , நானும் கட் பண்ணித்தான் போட்டிருக்கிறேனாக்கும்.
    நிறைய நாள் வேறு வேளையில் பிஸியாகஇருந்ததால் ஒரு diversion

    ReplyDelete
  4. அவார்டு நீங்களே கொடுத்துக் கொள்வது இடிக்கிறதே...

    எதற்குமே நடுவர் வேண்டும் எங்களைப் போன்றவர்களிடம் கொடுத்து தின்று பார்த்து சொல்வதே... முறையானது.

    ReplyDelete
  5. நடுவர் எல்லாம் அந்தக் காலம் . இது டிஜிட்டலைஸ்ட் காலமாகும்

    ReplyDelete
  6. ஆஹா... அடுத்த சோதனையா... வெற்றிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

    விதம் விதமான முயற்சிகள் - தொடரட்டும்.

    ReplyDelete
  7. வெற்றிகள் தொடரட்டும் சகோதரி...

    ReplyDelete
  8. சமையலில் இன்னுமொரு மைகல்கல் தொட்டுக்காட்டி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்,,,,,/

    ReplyDelete
  9. அடுத்த முயற்சியா? இதையும் முயற்சித்து விடுவோம். வாணலியில் வைத்து செய்யும்போது நிறைய நேரம் பிடிக்கும். இது சீக்கிரமே முடிந்து விடுவதில் Gas கூட மிச்சம் பிடிக்கலாம்!

    ReplyDelete
  10. பார்க்கவே ஆசை வருது....

    ஈசி யாவும் இருக்கே...செஞ்சுடுவோம்..

    ReplyDelete
  11. குழிப்பணியார சட்டியில இதுவும் பண்ணலாமா..!
    தெரியாம போச்சே...!

    ReplyDelete
  12. அருமையான சமையல்
    தொடருவோம்

    ReplyDelete
  13. எல்லாம் சரிதான். நமக்கு சாப்பிட மட்டும் தானே தெரியும்? வீட்டுக்கரமாவிடம் மனுப் போட்டுப் பார்கிறேன். கிடைத்தால் சரி.

    ReplyDelete