Sunday, 16 October 2016

காக்கா பிடித்தல் VS சந்தைப் படுத்தல்


 நேற்று  நான் இந்தப் பதிவைப் போட்டபின் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு என் தோழி ஒருவர் காக்கா பிடிப்பது தப்பு என்று  விவாதம் பண்ணினார் .
கடைசி வரை அவர்  என் கருத்துடன்  ஒத்துக்க கொள்ளவே இல்லை  .

பின்னூட்டாத்திலும் 
திரு கார்த்திக் சரவணன்   தவிர    மற்ற      இருவர்  (திரு அவர்கள் உண்மைகள்  மற்றும் திரு ஸ்ரீராம் ) ஜால்ரா ஓகே என்கிறமாதிரியும் திரு பழனி கந்தசாமி அவர்கள் முயன்று பார்ப்பதாகவும் எழுதி இருந்தார் . அவருக்கு என் வாழ்த்துக்கள் .( கம்பெனி சார்பா சோப்பு டப்பாவெல்லாம் கிடையாது )  .
திரு கில்லர்ஜீ பொத்தம் பொதுவான கமெண்ட் .
 நான் சொல்ல விரும்புவது   “காக்காய் பிடிப்பது ஒரு அருமையான   பயன் தரும் கலை. “
காக்காய் பிடிப்பதற்கும் சந்தைப் படுத்தலுக்கும் ஒரு மயிரிழை வித்தியாசம் ,
அவ்வளவுதான்.


காக்கா        பிடிப்பது தப்பு என்கிறவர்களை நான் கேட்கும் ஒரு கேள்வி ,
கடவுளை வணங்கும் பொழுது
என் கஷ்டம் தீர்ப்பவரே
என் எதிரிகளை அழிப்பவரே
என் உடல் நலம் காப்பவரே
எனக்கு அழிவில்லாத செல்வம் கொடுப்பவரே 
என்றெல்லாம் தானே சொல்கிறோம் ?


கடவுளிடம் போய் 
" எனக்குக் கஷ்டம் கொடுப்பவரே ,
எனக்கு எதிரிகளை உண்டாக்குபவரே ,
எனக்கு வியாதியைக் கொடுப்பவரே
என் செல்வத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு போகின்றவரே என்றெல்லாமா கும்பிடுகிறோம் ?

தவிர வடிவேலு சொல்கிற மாதிரி நம்ம  டிசைன் அப்படியோ  என்று நினைக்கிறேன்.   என்னையும் சேர்த்துத் தான் .

இந்த   விஷயத்தில்   எனக்கு   பஞ்சாபிகளைப்    பிடிக்கும் .

தனக்குக் காரியம் ஆகும் வரை   நமக்கு சோப்பு போடுவார்கள் என்பதை விட அப்பிவிடுவார்கள் என்றே சொல்லலாம்.

நான் டெல்லியில் வேலை பார்த்த போது நடந்த நிகழ்வு .
பல மாநில மக்கள் இருந்த போதும் மத்திய சாப்பிட்டு வேளையில் மொழிவாரியாகத் தான் அமர்ந்து சாப்பிடுவோம் .ஆனால் ஒரு பொது அடுப்பு சுடவைத்துக் கொள்ள இருக்கும்குளிர் நாட்களில் ஜில் என்று ஆறிப்போன உணவைச் சுடவைத்துக் கொள்ள எல்லா    அலுவலகங்களிலும்  எலக்டிரிக் அடுப்பு இருக்கும் .

 அப்போது நான் இட்டலியைச் சுடவைக்கும் போது ஒரு பஞ்சாபி கிளார்க் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாவ் ...  எப்படிச் செய்யறது  என்று கேட்டாள்.

ரொம்ப எல்லாம்  எனக்குத் தெரியாது .எங்க அம்மாவுக்குத் தான்  நல்லாத் தெரியும் என்றதும் என் வீட்டுக்கு  சனியன்று வருவதாகச் சொன்னாள் .

 அது நாள் வரை   நான் ப்ரொபெஷன் பீரியட்டில்    இருந்ததால்   என்னை அவ்வளவாக மதிக்க மாட்டாள் . சாதாரணமாகவே ரொம்ப கர்வம்      பிடித்தவள் .

நான் சரி   என்று சொன்னதும் என் மீதான அவளின் போக்கே  மாறிவிட்டது

 புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது மாதிரி என் மீது பயங்கர ஐஸ் மழை.


 ....நான் சின்னத் தப்பு பண்ணினால் கூட பெரிய  தப்பு என்பது போல அலப்பறை பண்ணும் அவள்  அதன் பின்னர்          டிரையினிங்க் பீரியட்டில் இது போல தப்பு வருவது சகஜம்தானே  என்று பிளேட்டை மாற்ற ஆரம்பித்துவிட்டாள் .

  ஒரு நான்கு  ஐந்து வாரம் ( சில வாரங்கள் விட்டு , தொடர்ச்சி யாக அல்ல )         வந்து என் அம்மாவிடம் தென்னிந்திய உணவுகள் செய் முறை கள்  கற்றுக் கொண்டாள்.

 பிறகு அவள் சனிக் கிழமைகளில் தன் வீட்டிலேயே 
போர்டு மாட்டிவிட்டாள்.அப்போது எங்களுக்கு சனியன்று தான் வார விடுமுறை .

  இங்கு தென்னிந்திய உணவுகள் கற்றுத் தரும் வகுப்புகள்   நடத்தப்படும்.
ஒரு வாரத்திற்கு 10 பேர் மட்டும்
மாதம் ஒரு முறை மட்டுமே ..
வருபவர்களுக்கு   இட்டலி ரெண்டு+ அளவு   சாம்பார் மட்டும்  இலவசம்
 என்று வகுப்புகள் நடத்த ஆரம்பித்து விட்டாள்.

( ஏனெனில்  கனாட் சர்கிளில் உள்ள  மெட்றாஸ் ஹோட்டலில் சாம்பார் அளவில்லாமல் தருவார்கள் .)
அப்போதெல்லாம்   எங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான்   பஞ்சப்படி ஏறும் .
அவளுக்கு  மட்டும் மாதா மாதம் பஞ்சப்படி ஏறியது .

இப்போது சொல்லுங்கள் .காக்கா பிடிப்பது தவறா ?

எனவே காக்கா பிடிக்கும் கலையைக் கற்போம் .

சந்தை பிடிக்கும் கலையை அறிவோம் .


இந்தப்  பதிவின் விளைவாகஇங்கு ஜால்ரா  அடிப்பது எப்படி" என்று அங்கங்கே வகுப்புகள்  நடத்த நினைப்பவர்கள் என்னை அணுகவும் .டிப்ஸ்   தர ரெடியாக உள்ளேன்.

14 comments:

  1. ஆபிஸில் அடிப்பதுமட்டும் ஜால்ரா அல்ல. வலைத்தளத்தில் சில பதிவுகளை அல்லது கதை கவிதைகளை படித்துவிட்டு அது நன்றாக இல்லையென்றாலும் ஆஹா மிக அருமை என்று சொல்லி செல்வதும் ஒரு வகை ஜால்ராதானே


    ஆமாம் நான் ஜால்ராவிற்கு ஆதரவாக கருத்து சொன்ன மாதிரி எழுதி இருக்கிறீர்கள் எனது கருத்தை திரிச்சு இங்கு சொல்லி இருக்கிறீர்கள். அதற்காகவே உங்கள் மீதி அவதூறு அல்லது மான நஷ்ட வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறேன். இன்னும் பத்து நாட்களில் திஹிந்து நாளிதழில் முதல் பக்கத்தில் முழு அளவில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் தரவில்லையென்றால் நீங்கள் கோர்ட் படிகளில் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஏறி இறங்க வேண்டி இருக்கும். இந்திய கோர்ட்களில் லிப்ட் இருக்காது என்பதை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் காமெண்ட் அருமை .....என் கருத்திற்கு ஆதரவு என்று நான் சொல்வது ஜாலராவின் ஒரு சாம்பிள் பீஸ் .
      ஒரு பக்க விளம்பரம் என்னைப் பற்றியா ?உங்களை பற்றியா ?
      ஹி.... ஹி ...என்னைப் பற்றி என்றால் ஒரு பக்கம் போதாதே .. ஒரு complete edition of HINDU வேண்டியிருக்குமே ..... ( இது marketting )
      உங்களை பற்றிய விளம்பரம் என்றால் உங்களுக்கு எதுக்கு விளம்பரம் ? (இது ஜால்றா )

      Delete
    2. மதுரைத்தமிழன்.... சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கறது... அவங்க ஆசைப்பட்டு ஏதோ எழுதியிருக்காங்க... நல்லாருக்குன்னு அவங்களை சந்தோஷப்படுத்தறதுல நமக்கும் ஒரு சந்தோஷம்! இல்லையா?!! ஆமாம்... நீங்க யாரைச் சொல்றீங்க? (ஹிஹிஹிஹி... பொது அறிவை வளர்த்துக்கலாம்னுதான்!)

      Delete
    3. ஆஹா, அருமை என்று பின்னூட்டம் இடுபவர்களை சத்தமின்றிக் கடந்து செல்வது மிகவும் நல்லது. இருந்தாலும் பலர் தங்களது வருகையை நம்மிடம்உறுதிப்படுத்திக்
      கொள்வதற்காக அப்படி பின்னூட்டம் இடுகிறார்கள். மற்றபடி பிரச்சனையில்லை... :)

      Delete
  2. ஆஹா, அருமை. பஞ்சாபிகளா, கொக்கா ?

    ReplyDelete
    Replies
    1. அவங்க டிசைன் அப்படி

      Delete
  3. தனது செயல்பாட்டில் நேர்மை இல்லாதவர்கள் குறுக்கு வழிக்காக காக்கா பிடிப்பார்கள் குறிப்பாக அரபு நாட்டில் மலையாளிகள் அரபிகளிடம் இப்படி செய்வார்கள் அதற்கு அரபு மொழியில் மஸ்க்கா என்று சொல்வது குறிப்பாக நான் எந்த அரபியிடமும் மஸ்க்கா அடித்ததில்லை
    அதே நேரம் கடவுளை புகழ்த்தி பாடுகிறோம் இதுவும்கூட ஒருவகை காக்கா பிடித்தல்தான்.

    ReplyDelete
  4. பஞ்சாபிகள் மட்டுமல்ல அருணா, தென்னிந்தியாவிலும் இரு மாநிலக்காரர்களை விட்டுவிட்டீர்களே... பிழைக்கத் தெரிந்தவர்கள். இதெல்லாம் சகஜமப்பா....

    இதைக் கொஞ்சம் வித்தியாசப்படுத்தினால் வின் வின் சிச்சுவேஷன். நமக்கு நம் காரியம் ஆக வேண்டுமென்றால் கோக்குமாக்கா பேசாம அழகாகப் பேசி...அதற்குப் பேசும் கலை தெரிந்திருக்க வேண்டும். உண்ர்ச்சி வேக வார்த்தைகள் பேசாமல் நடத்திக் கொள்வது...நான் உங்கள் பதிவைப் பார்த்ததும் பல கருத்துகள் வர பின்னூட்டம் இட நினைத்துப் பெரிதாக பின்னர் உங்களைக் கோட் செய்து பதிவாக எழுதிடலாம்னு நினைச்சா இப்ப முடியாது போல இருக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னைக் கோட் செய்து ...... ம் ........சில சமயங்களில் நான் நல்லாவே ஜிங்கு சக்கா அடிப்பேன் . சில சமயங்களில் பாரதியார் மாதிரி மீசையை முருக்கறது என் பாணி. தனி பதிவே போடுங்கள் நல்ல டாபிக் மொக்கை அல்ல

      Delete
  5. பிழைக்கத் தெரிந்த பஞ்சாபி! அப்புறம் டிரெய்னிங்க்ல மறுபடி குறை கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாரா?!! ஆனால் கற்றுக்கொண்டதை வீண் செய்யாமல் காசுபார்க்க ஆரம்பிச்சார் பாருங்க... ஸூப்பர்! அதோட நம்ம தமிழ்நாட்டு உணவுகளுக்கும் புகழ் கிடைக்குது பாருங்க!

    ReplyDelete
  6. ஜால்ரா ஒகே தான், ஆனால் அது மனதளவில் தானாக வரவேண்டும் என்பது என் கருத்து. மனதுக்குப் பிடித்தவர்களை சந்தோஷப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் செய்பவை என்று எடுத்துக்கொள்ளுங்களேன். ஆனால், அலுவலகத்தில் சொந்த லாபத்திற்காக காக்கா பிடிப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது. நான் செய்யமாட்டேன். அதிலிருக்கும் போலித்தனம் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் என்னிடம் காரியம் ஆவதற்காக காக்கா பிடிப்பவர்களை வெள்ளந்தியாக நினைத்திருக்கிறேன். ஒருவேளை, இன்னும் வளரணும் போல!!!

    ReplyDelete
  7. சீரியஸா பேசறதை ஒரு பக்கமா வச்சிட்டு யோசிச்சுப் பாருங்க . ஜ வில் ஆரம்பிப்பது எல்லமே நல்லாக இருக்கு +money yielding.
    I Mean Japanese and jalra ஆரம்பிச்சுடுங்க Fast !ஜிங்கு சக்கா

    ReplyDelete