எனக்கு ரொம்ப நாளாக பூரி சாப்பிடவேண்டும் என்று ஆசை .
ஆனால் என்னவோ நேரம் வரவில்லை .
சின்னவன் பூரி சாப்பிட மாட்டான் .
எப்பவோ ஒரு நாள் வீட்டுக்கு வருபவனைப் போய் கட்டாயப் படுத்திச் சாப்பிட வைக்க இது ஒன்று வைட்டமின்கள் நிறைந்த பண்டம் அல்ல .
பெரியவனும் இங்கே இல்லாததால் கிட்டத்தட்ட ஒரு மூன்று வருடங்கள் செய்யவே இல்லை .
வெளியில் எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதே இல்லை .
என் ஒரு ஆளுக்குச் செய்வதாக இருந்தால் எண்ணெய் மீந்து விடும் ,
அதில் அப்பளம் பொறித்து வைத்து சாப்பிடலாம் என்றால் நான் ஒரு ஆளே மெனக் கெட்டுச் சாப்பிடணும்
என் கணவருக்கு சர்க்கரை பி பி இதயக் கோளாறு .
பை பாஸ் எல்லாம் ஆகிவிட்டது ,
எனவே இது நாள் வரை செய்யமலே இருந்தேன்.
பிறகு இன்று ஒரு ஐடியா தோணியது . நாம் ஏன் சின்ன சின்ன வட்டமாகச் செய்து பூரி பண்ணைக் கூடாது ? என்று .
உடனே செயலில் இறங்கி விட்டேன் .
சப்பாத்தி செய்து முடித்த பின் நாலு உருண்டை மீதம் இருந்தது .
அதில் சப்பாத்திக்குத் தேய்ப்பது போல தேய்த்து சின்ன மூடி கொண்டு கட் பண்ணி மூணே மூணு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பொறித்து எடுத்தேன் . வாவ் !மினி பூரி ரெடி !
சூப்பராக வந்தது .படத்தில் வந்த பூரிகளை ப் பொறித்து எடுத்த பின்னும் எண்ணெய் மிஞ்சியது . வத்தலைப் பொடித்துப் பொறித்து எடுத்தேன் .
கற்ற எகனாமிக்ஸ் படி நிற்க அதற்குத் தக என்பது போல் எண்ணையும் மிச்சம் பண்ணியாச்சு ! ஆசையையும் நிறைவேத்திக் கிட்டாச்சு !
மினி பூரி என்றதும் டையட்டுக்காக இப்படி பண்ணினீங்களோ என நினைத்தேன்
ReplyDeleteஅது என்ன பூரி சம்பத்தப் பட்ட பதிவு என்றதும் முதல் ஆளாக காமெண்ட் ....பிரிக்க முடியாதது எதுவோ ? பூரியும் .........
Deleteஎண்ணெய் வேஸ்ட் ஆகிவிடும் என்பதால் மூன்ரு வருஷம் சாப்பிடாமல் இருந்தீங்களா அட போங்கம்மா வாழ்க்கையை எவ்வளவு வீணாக்க்கிட்டீங்க...
ReplyDeleteஎண்ணெய் வேஸ்டாகமல் இருக்க உங்களுக்கு ஒரு ஐடியா.... நிறைய பூரி சுட்டு நீங்க ரெண்டு சாப்பிட்டுட்டு பக்கத்துவீட்டுல இருக்கிறவங்களுக்கு கொடுத்துடுங்க
இதுக்கெல்லாம் ஓவரா ஃ பீல் பண்ணைக் கூடாது. பூரி சாப்பிட்டிருந்தா மட்டும் என்ன பெரிய அவார்ட்டா கொடுத்திருக்கப் போறாங்க
Deleteஆஹா ஒரே எண்ணையிலே ரெண்டு பண்டம் ஸூப்பர் ஐடியா.
ReplyDeleteஇதே மாதிரி ஒரு 3 1 ஸ்வீட் கூட செய்வேன் ஒரு பதிவு நாளை போடுகிறேன்
Deleteநல்ல ஐடியா!
ReplyDelete