Saturday, 11 July 2015

முரண்பாடுகள்


 நாம் வாழும் சமுதாயத்தில் ,உலகில் உள்ள  முரண்பாடுகள் பற்றி சீரியஸாக ஏதோ சொல்லப்போகிறேன் என்று நினைக்கவேண்டாம் .

விளம்பரங்கள் எனும் அலை அல்ல சுனாமியால் இழுத்துச்செல்லப்பட்டு  கன்னா பின்னா என்று சாமான்களை வாங்கிக் குவிக்கிறோம் .
உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கறிகாய்கள் அத்தனையையும் கூட  வெறும் ஐந்தே நிமிடத்தில் கட் செய்யும் திறமை மிக்க  வெஜிட்டபிள் கட்டர், அதுவும் சிரித்துக் கொண்டேகட் செய்யலாம் . (இதில் காமெடி என்ன வென்றால்  கட் பண்ணுவது சில சமயம் ஆணாகக் கூட இருக்கின்றனர்  ).


 அதை வாங்கி வந்து வீட்டில் கட் பண்ணும் ஆணோ பெண்ணோ விளம்பர நாயகன் /நாயகி  மாதிரி  சிரிக்காமல்  எப்போதும் போல உர்........ மூஞ்சி தான் .

  அரை மணியில் சமைக்ககூடிய சமையல் உபகரணங்கள்
ஏகப்பட்ட தினுசில் ...........
,சமைத்து அப்படியே பரிமாறலாம் மாதிரியான பாத்திரங்கள் , அதுவும் சில வகை வெள்ளை செராமிக் பாத்திரங்கள் கழுவக்கூட வேண்டாமாம் .
லேசாக ஒரு துணி கொண்டு துடைத்தால் போதுமாம் .

சானல்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு வேப்பிலை அடிக்கிறார்கள் .
 ஒரு நடிகரோ நடிகையோ சொன்னால் போதும் ...........
 அவ்வளவுதான்
நாமும் அதாவது படித்த நாமும் அவற்றை  வாங்கிக்
குவிக்கிறோம்.
நமக்கு நேரம் முக்கியம் என்பதால் பணத்தைப் பார்ப்பதில்லை .

அந்த gadgets எல்லாம் அரை மணியில் சமைக்கும் என்றால் ஏன் வீட்டில் சமைக்காமல் வெளியில் இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ?
எல்லா ஹோட்டல்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றதே ஏன்?

Gadgets  குத்தமா?  நம்ம குத்தமா?

Friday, 10 July 2015

வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்க

  நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதும் பதிவு .
 முதுகு வலி வந்தபின் என் மகன் ஒரு ஐ பேட் வாங்கிக்கொடுத்தான் .அதே நேரம் என் லேப்-டாப்பும் கொஞ்சம் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டதால் பதிவு எழுதவில்லை.ஐ பேட் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை .அதில் காப்பி பேஸ்ட்பண்ண வரவில்லை.வேகமாக  ஆங்கிலமே டைப்  செய்ய இன்னும் வரவில்லை . காப்பி பேஸ்ட் அதில் ஏடாகூடமாக வருகிறது.

அதனாலேயே காப்பி பேஸ்ட்பண்ணி காமெண்டு கூட போட முடிய வில்லை .
டீச்சிங் தவிர வேறு வேலையும் எடுக்க வில்லை . எனவே ஒரே ஒரு லெவல் மட்டும் மிச்சம் வைத்துள்ள ஜப்பானிய மொழிப் பரீட்சை யாவது எழுதலாமே என்று எண்ணி வெகு சிரத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.


பரீட்சைக்கு ஒரு 10 நாள் முன்னே இருக்கும் .
திடீரென்று ஒரு நாள் பதிவர் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன் என்றார் .

 அவருடன் தொலைபேசியில் தொடர்புடன் இருந்தேன் . பிறகு  எப்படியோ நின்றுவிட்டது (ஏதோ  வேலை அது இது என்றெல்லாம் புருடா விட இது என்ன ஆபீஸ் லீவு அப்ளை பண்ணுகிறோமா என்ன ).  ஆஹா நம்மளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இந்த உலகில் ஒருவர் இருக்கிறாரே என்று  மனசு ரொம்பவே  மானாட மயிலாட ஆடியதென்னவோ உண்மை .

பரீட்சை எழுதும்  ஸ்கூலில் தான் முதல் முதலில் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்களையும் அவர் மனைவியையும் (  மனைவியும் ஜப்பானிய மொழி கற்கிறார் ) சந்தித்தேன்.


படிப்பிலேயே முழு கவனமும் இருந்ததால் வீடு குப்பை போல மற்றவர் கண்களுக்குத் தெரிந்தாலும் எனக்கு என்னவோ ஒரு ஒரு குப்பையும் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தின் மௌன சாட்சிகளாய்த்தான் தென்பட்டது. ( குப்பையையும் கலைக்கண்ணோடு பார்க்கும் ...... ஹா ....ஹா. நிறுத்திக்கிறேன்).
திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  பேசியபின் லேப் டாப்பையும் சரிபண்ணிவிட்டு
  வீட்டையும்  ஒழுங்காக வைத்துவிட்டு எழுத ஆரம்பிக்கிறேன்.