Sunday, 6 April 2014

கடவுள் நம்பிக்கை


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய
விவாதம் காலம் காலமாக நடக்கிறது .

அதிதீவிர நாத்திகர்கள் கடைசியில் தீவிர ஆத்திகர்கள் ஆவதும் ,அதே போல் ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் உண்டு .

இதில் எது சரி எது தப்பு என்ற விவாதத்திற்குள் நான் நுழையப் போவதில்லை

என்னைப் பொறுத்த வரை நான் கடவுளை நான் வேண்டியதைக் கொடுக்கும் ஒரு மேஜிக்  பவராகத் தான் நினைத்து வந்திருக்கிறேன் .

 கேட்டதைக் கொடுத்தால் காணிக்கை போட்டும் நன்றி சொல்லியும் கொடுக்காவிட்டால் கடவுளைத் திட்டவும் செய்யும் சராசரி மனுஷிதான் .நான்

ஆனால் கடவுள் பக்தியில் ஒரு சௌகரியம் இருப்பதை என் அபார்ட்மெண்ட் வேலைக் காரப் பெண்மணி எனக்கு  அறிவுறுத்தினாள்.

அவள் கணவன் ஒரு குடிகாரன் .
குடித்து விட்டு கண்ட மேனிக்கு கலாட்டா செய்யும்
  பெறு மதிப்பிற்குரிய டாஸ்மாக் வாடிக்கையாளர் .

குடிக்காத நேரங்களில் என்னவோ நல்லவன்தான்.

அவ்வப்போது அவளுக்கும் அடி விழும் .

அவளுக்கு வயது 50க்கு மேலே இருக்கும் .
மகன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது .
ஆனாலும்  மகன்களுக்கு நிரந்தர வருமானமில்லை .
கணவனும் மனைவியும் இங்கேயே படுத்து வாழும் ஜீவன்கள்

இந்த பதிவு எழுதும் போது அவன் குடித்து விட்டுத் தான் வெளியில் கத்திக் கொண்டு இருக்கிறான்.

வேலைக் காரப் பெண்மணிஅவ்வப்போது கடவுளைத் திட்டுவாள் .
கணவனைத் திட்டுவாள் .
அதே சமயம் ஒரு சின்ன சாமி போட்டோ வுக்கு ஓசியில் கிடைக்கும் பூக்களையும்  தினமும் மறக்காமல் போடுவாள் .

இன்று காலை என் வீட்டுக்கு அவள் வந்திருந்தாள் .
கழுத்தில் ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டிருந்தாள்.
நெற்றியில் சந்தனம்+ குங்குமம் + பெரிய விபூதிப் பட்டை  தலையில் பூ இத்யாதிகளுடன்  இருந்தாள்.
என்ன இப்படி இருக்கிறாய் .பக்தி முத்தி விட்டதா என்றேன் .

கதவைச் சாத்துங்கம்மா என்று சொல்லிவிட்டு
மெல்லிய குரலில்
"அதில்லேம்மா .
நா இப்ப மாலை போட்டிருக்கேன்னா  நா சாமிக்கு சமானம் .
புருஷன் குடிச்சிட்டு வந்தாலும் என்னை அடிக்க முடியாது
.அவரும் அடிக்க பயப்படுவாரு
அப்படியும்குடி போதையிலே  அடிச்சாருன்னக்க நா சாமி வந்த மாதிரி குதிப்பேன் .

மிரண்டு ஒடிருவாரும்மா.
அடி தாங்க முடியலேம்மா
வேறே வழி" என்றாள்.

 கடவுளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில்
புரிந்துகொண்டு அவரை நம் சௌகரியத்திற்கு
 ஏற்ப உபயோகித்துக் கொள்கிறோம்
அவ்வளவே !
இதில் வாதம் தேவை இல்லை


4 comments:

  1. வீண் வாதம் தவிர்ப்போம் என்பது மிகச்சரி தான்...

    அந்தப் பெண்ணில் நிலை மிகவும் வருந்தத்தக்கது...

    ReplyDelete
  2. // கடவுளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில் புரிந்து கொண்டு அவரை நம் சௌகரியத்திற்கு ஏற்ப உபயோகித்துக் கொள்கிறோம்
    அவ்வளவே ! இதில் வாதம் தேவை இல்லை //

    சரியாகச் சொன்னீர்கள் சகோதரி!
    தாங்கள் எனது பதிவில் சொன்ன கருத்துக்கு மறுமொழி தந்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது பார்வையிடவும்.
    http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_16.html


    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.அவற்றையும் பார்த்தேன்.

      Delete