தேர்தல் சமயத்தில் எல்லோரும் எழுதித் தீர்த்து விட்டார்கள் .அதுவும் பக்கம் பக்கமாக !
நாம மட்டும் ஒண்ணுமே எழுதலேன்னா எப்புடி ?
அதன் விளைவுதான் இந்த சிறிய பதிவு.
காலை நேரம் என் மகனுக்கான காலை உணவு (எங்களுக்கும் சேர்த்துத்தான்). தயாரித் துக் கொண்டிருந்தேன் பையன் குளித்து முடித்து ஓட்டுப் போட கிளம்பினான்
.நானோ செம பிஸி
எங்கே ஓட்டுப் போடத்தானே?ம் ...
அப்படீன்னாக்க என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
சும்மா ஒரு லுக் விட்டான் .பாருங்கள்
வேலைக்காரியும் அம்மா கீழே போய் ஓட்டு போடப்போறேன் .
ஏதாவது செய்யணுமா என்றாள்.
சரி அவ்வளவு தூரம் போறியே அப்படியே என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
அம்மா ....நீங்க இருக்கிங்களே ..... என்று சொல்லிவிட்டு மேலே ஒன்றும் பேசவில்லை .
என் கணவரிடமும் இதையே சொன்னேன் .
அவரும் இதே போல் மறுத்துவிட்டார்.
எல்லா மானேஜ்மெண்டு புத்தகங்களும்
திறமையாக வேலைகளை delegate அல்லது அவுட் சோர்சு பண்ணும் என்கிறார்கள் .
யாரும் செய்தால் தானே .
பிறகு நானே போய் ஓட்டுப் போட்டு வந்தேன் .