Sunday 18 December 2022

Tea making settings

 இது என்னுடைய Tea making processக்கான   Arrangement



 இத பாத்த உடனே ஆஹா ......இவங்களுக்கு எவ்வளவு ஒரு அழகு உணர்ச்சி... எதிலும் ஒழுங்கு ..எங்கும்  .ஒழுங்கு என்று நீங்கள் நினைத்தீர்களானால் அங்குதான் நீங்கள்  தப்பு செய்கிறீர்கள் .

இது எதற்கு என்றால் யாராவது எங்க வீட்டுக்கு வந்தால் அவர்களேதனக்குப் பிடித்த மாதிரியான டீ போட்டுக் கொள்ளலாம் என்பதற்கான வசதிதான் இது

 ஏனெனில் என் உறவுக்காரர் ஒருவருக்கு நான் புதினா டீ போட்டுக் கொடுத்தேன் ஆனால் அதை சாப்பிட்ட உடனே அவர்கள் முகம் ஏதோ விளக்கெண்ணெய் சாப்பிட்ட மாதிரி போனது.

 எனக்கு மனசு கஷ்டமாக இருந்தது 

அதே போல் இன்னொருவருக்கும் இரண்டு நாள் முன்னாடி வந்த போது  கொடுத்தேன்

 அவரும் கிட்டத்தட்ட அதே எக்ஸ்பிரஷன் கொடுத்தார் .

பிறகு" ஏன் டீ நல்லா இல்லையா ?விளக்கெண்ணை மாதிரியா இருக்கு" என்று  கேட்டேன் .

 "இல்ல விளக்கெண்ணெய் கூட இதை விட  நல்லாருக்கும் போல "அப்படின்னு சொன்னாங்க .

அதன் பிறகு நான் என்ன சொன்னேன் என்றால்  இந்த டீயின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் குடிப்பவர்கள் விளக்கெண்ணை மாதிரி இருந்தால் டீயும் விளக்கெண்ணெய் மாதிரி தான் இருக்கும்

  "நல்லவர்களுக்கு மட்டுமே  புதினா டீ போன்ற  வாசனை கொடுக்கும் .ஒண்ணும் பண்ண முடியாது " என்று சொல்லிவிட்டேன்

 நம்மகிட்டயா  இந்த வேலை எல்லாம்  நடக்கும்

 சரி இனிமே இந்த வேலையே வேண்டாம் .

யார் வந்தாலும் அவர்களே அவர்களுக்கு பிடித்தமாதிரி டீயைப் போட்டுக் கொள்ளட்டும் என்று நான்  இந்த arrangement  செய்திருக்கிறேன் .

இது எப்படி இருக்கிறது?

 சரி அது போகட்டும் கீழே இருப்பது இன்று நான் போட்ட புதுமாதிரியான ஆரஞ்சு டீ .




டீ  டிகாக்க்ஷனில் ஆரஞ்சு ஜூஸ்  பிழிந்து  போட்டது தான் இந்த டீ .

.டேஸ்ட் நன்றாக இருக்கிறது.


4 comments:

  1. சூப்பர். நல்லாருக்கு. நான் வந்தா பிரச்சனை இல்லை அருணா....நீங்க எந்த டீ போட்டாலும் குடிப்பேன்!!!!!!!!!!

    நம்ம வீட்டிலயும் ஆரஞ்சு ஜூஸ், வழக்கமான லெமன் ஜூஸ் இப்படி டீ டிக்காஷனில் போடுவதுண்டு....துளசி, புதினா லெமன், இஞ்சி, இப்படி சில அது போல நாரத்தை இலை அல்லது எலுமிச்சை இலை கிடைச்சா அதையும் போட்டுச் செய்யலாம்....நம்ம வீட்டிலும் கிச்சன் எக்ஸ்பெரிமென்ட்ஸ் உண்டு. ரோஸ் டீ கூடப் போட்டதுண்டு!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கமென்டிற்கும் நன்றி கீதா

      Delete
  2. I don't drink tea so no problem 😂🤣😂

    ReplyDelete
  3. Aunty.. Enaku satharna paal tea please…

    ReplyDelete