உலகம்
எங்கும்
பரவலாக
மூட
நம்பிக்கைகள் பின்
பற்றப் படுகின்றன .
நமக்கு நாம் வாழும் சமூகத்தில்
அல்லது நம்
நாட்டில் பின் பற்றப்படாத பழக்க வழக்கங்களை விநோதமாகப் பார்த்தோம்
ஒரு காலம் வரை . இப்பொழுது எல்லாம் மீம்ஸ் போட்டுவிடுகிறோம் .
உதாரணமாக மழை வேண்டிக் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம்
பண்ணிவைத்த செய்தி
நம் எல்லோருக்கும் தெரியும் . பிறகு 2015 ல் சென்னையில் பெரு
வெள்ளம் வந்தபோது எல்லோராலும் ரசிக்கப் பட்ட
மீம்ஸ் " முதலில்
அந்தக் கல்யாணம் பண்ணி கிட்ட கழுதைங்களுக்கு விவகாரத்துப் பண்ணி வைங்கப்பா சீக்கிரம்
. மழை
நிக்கட்டும் "
.
.
இது
போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி
ஒரு MNC யில் வேலை செய்துகொண்டிருந்த
போது மதிய சாப்பிட்டு வேளையின்
போது நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்
.அப்போது ஒரு ஜெர்மானியர்
தங்கள் நாட்டில் புது வீடு குடி போகும் போது
அவர்களுக்குப் பரிசாக ரொட்டியும்
உப்பும் கொடுத்தால், அவர்கள் ஒருபோதும் தங்கள் புதிய வீட்டில் பசியோடு இருக்க மாட்டார்களாம்
இருப்பினும்,
கத்திகளைப் பரிசாக கொடுக்கவே கூடாதாம் அப்படிக் கொடுத்தால் அது அவர்களுக்கு மரணம்
அல்லது காயத்தைக் கொடுக்குமாம்
கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் உப்புடன் தொடர்புடைய மூட நம்பிக்கைகள் நிறைய உள்ளன .ஜப்பானில் உப்பு
என்பது ஒரு சுத்தீகரிக்கும் வஸ்துவாகக் கருதப் படுகிறது .. ரஷ்யா
மற்றும் சில நாடுகளில் , உப்பைக் கீழே கொட்டுவது குடும்பத்தில் உள்ள
உறவுகளுக்கிடையிலான சந்தோஷத்தைக் குலைக்குமாம். நம் நாட்டில் உப்பைக் கீழே சிந்தினால் கடன் வரும் என்பார்கள் .
சாய்ந்த ஏணியின் கீழ் நடப்பது கூடாது
என்பதும் ஐரோப்பிய நாடுகளின்
பொதுவான மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும். இதன் பின்னணி என்னவென்றால் ஒரு சுவர், ஏணி மற்றும் தரை
ஆகியவை ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன.
முக்கோணம் என்பது ஒரு மிகவும் புனிதமான
வடிவம். ( பிரமிட்டுடன் தொடர்பு கொண்ட ஒரு சிந்தனை மாதிரி)
ஒரு ஏணியின் கீழ் நடப்பவர் ஒரு
புனிதப் பகுதியை சேதப்படுத்துகிறார், அவரது
வாழ்க்கையில் தீமையை அவரே அழைக்கிறார் என்பதாம் . அதாவது "சும்மா
போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள போட்டுக்கிற மாதிரி"
நான் மிகவும்
கிண்டலடித்த மூட நம்பிக்கையில் ஒன்று தென் கொரியா, ரஷ்யா ஜப்பான் மற்றும் சில
ஆசிய நாடுகளில் பரீட்சை அன்று தலைக்குக் குளிப்பது எனபது நாம் படித்த எல்லாவற்றையும் கழுவி விடுமாம் ,எதுவுமே ஞாபகம் இருக்காதாம் தலைமுடியையின் அழுக்கு கழுவப் படும் போது நாம் படிச்சதும் அந்தத் தண்ணியிலே ஓடிடுமாம் .
என்னதான் உலகத்தையே
நாம கிண்டல் பண்ணினாலும் கிளம்பற போது பூனை
குறுக்க வந்தாக்க வீட்டுக்குத் திரும்பி வந்து தண்ணி குடிச்சுட்டு ஒரு நிமிஷம் உக்காந்துட்டு
அப்புறம் கிளம்புறவங்கதான் நாம எல்லாம்
வாங்க அருணா ரொம்ப நாளைக்கப்புறம்!!
ReplyDeleteஒவ்வொரு நாட்டிற்கும் நிறைய இருக்கு வளர்ந்த நாடுகளிலும் கூட இருக்கிறது.
உப்பு நம்மூரிலும் அப்படித்தானே சொல்லப்படுகிறது. சுத்திகரிக்க என்று திருஷ்டி கழிக்கக் கூடப் பயன்படுத்துவாங்களே.
கீதா
வருகைக்கு நன்றி
Deleteசாய்ந்த ஏணி// அது நம் மேல் விழுந்துவிடாமல் இருக்க இப்படிச் சொல்ல்ப்படுகிறதாக இருக்கலாம்.
ReplyDeleteஉப்பு பற்றி மற்றொன்று, ப்ரானிக் ஹீலிங்கில் கூட உப்பு பயன்படுத்துவாங்க. உறவினர் ஒருவர் இந்த ஹீலிங்க் எடுத்துக் கொண்டவர் சொல்லிக் கேள்வி.
கீதா
நீண்ட இடைவெளிக்கு காரணம் வீட்டில் நாங்கள் இருவருமே ஒருவர் மாற்றி ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்தோம் , ஒரு நான்கு ஐந்து மாதம் லாப் டாப் வேறு ரிப்பேர்.தனியாகப் போய் லாப்டாப் வாங்க த் தெரியவில்லை டேப்லெட் இருந்தாலும் அதில் லாப்டாப் மாதிரி தமிழ் டைப் அடிக்க வரலை . புதிய லாப் டாப் வாங்கியபின் தான் ஆரம்பித்திருக்கிறேன்
Deleteபூனை ஆமாம் சொல்லுவாங்க.
ReplyDeleteஇங்கு மூ ந ரொம்பவே குறைவு. கடைசியில் சொன்னதும் பார்ப்பதில்லை!!!!!
கீதா
வருகைக்கு நன்றி
Deleteமூடநம்பிக்கைகள் இல்லாதவர்கள் இல்லை. பழைய மூடநம்பிக்கைகள் பலவற்றுக்கு இப்போது புதிய
ReplyDeleteஅர்த்தம் சொல்கிறார்கள். அது அறிவியல் பூர்வமாக
உண்மை என்று வேறு கூறுகிறார்கள். உப்பு தீய சக்திகளை தடுக்கும் என்பது உலகளாவிய நம்பிக்கை. நல்ல பதிவு 👍
வருகைக்கு நன்றி
Deleteமூடநம்பிக்கைகள் எல்லா நாட்டிலும் இருக்கிறது உண்மைதான்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஒரு காலத்தில் நம்ம ஊாில் இரவில் உப்பு விற்கவோ வாங்வோ மாட்டார்கள்.
ReplyDeleteஇப்பல்லாம் இது சாத்தியம்.
இதில் எது மூட நம்பிக்கை?
அர்த்தம் தொிந்தால் அது நம்பிக்கை. தொியாவிட்டால் மூடநம்பிக்கை.
வருகைக்கு நன்றி
Deleteஎல்லா நாடுகளிலும் இப்படியான நம்பிக்கைகள் - அது அடுத்தவருக்கு மூட நம்பிக்கையாகத் தெரிந்தாலும்!
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
வருகைக்கு நன்றி
Deleteபல மாதங்கள் கழித்து உங்கள் பதிவு என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஉலகம் முழுக்க ஒவ்வொருநாட்டிலும் ஒவ்வொரு வித மூட நம்பிக்கைகள். நம் நாட்டிலுமே ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக.
துளசிதரன்
வருகைக்கு நன்றி
DeleteEnjoyed your article throughly..excellent narration..Poonai kurukae vandhaal konjam jalam saappittu vittu povadhu mooda nambikai endru solla mudiyathu..poonaiyidam irundhu avolo vibrations emit aagum..To avoid the side effects we pause and then continue in our path..Science keeps changing..We have to wait for eons before they agree with our belief.
ReplyDeleteThank you for your comment
ReplyDelete