Thursday, 28 February 2019

பதிவர் சநதிப்பு



வகுப்புகள் +வீட்டு வேலைகள்:
 தவிர வீட்டுக்கு ஒரு புது நபர் வந்து மூன்று மாதம் ஆகிறது . இதனால் தான் வலைப்பக்கம் வர இயலவில்லை .
புது நபர் பேரன் .
வலை உலகில் இரு பிரபலமான பதிவர்களின் சந்திப்பு பற்றித்தான் இப்போது எழுதப் போகிறேன் . 
அந்த இரு வலைப் பதிவர்களும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம்
இருவருமே திருச்சியில் வளர்ந்தவர்களாம் .
இருவருமே 40 வயதைக் கடந்தவர்கள்
இருவருமே உலக விஷயங்கள் நாட்டு நடப்புக்குகளில் ரொம்பவே அப்டேட்  ஆக இருப்பவர்கள் .
இருவருமே பல நாட்களாக சந்திக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தாலும்  எதோ காரணங்களால்   சந்திப்பு நிகழமுடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது .
 கடைசியாக இருவரும் புதன்கிழமை அன்று 27 .2 .2019  அன்று சந்தித்துக்  கொண்டனர் .
வயதிற்கேற்ப திருச்சி யில் படித்த காலத்தில் நடந்த வற்றை அசை போட்டு மகிழ்ந்தனர் .
கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை  .
 மணியும் எட்டுக்கு மேலே ஆகிவிட்டபடியால்  பேச்சை முடிக்க மனமின்றி முடித்து அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.

 ஹி..ஹி .. 
சந்தித்தவர்கள் நானும் பானுமதி தம்பட்டம் அவர்களும்தான்.
 பேரில் தான் தம்பட்டம் தவிர நிஜத்தில் எதிர் மறை .
 எதோ பல நாள் பழகியவரைப் போன்று மிக சகஜமாகப் பேசினார் . கன்னடம் பேசிக் கற்றுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் ஓகே .அது normal 
ஆனாலும் கன்னடம் எழுதப் படிக்க அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு ரொம்பவே inspiring ஆக    இருந்தது.
அதற்காக அவர் எடுக்கும் முயற்சி  பிரமிப்பாக இருந்தது
நான் நேரில் சந்தித்த கீதா ஒரு வகையில்   inspiring ஆக இருந்தார் என்றால் இவர் வேறு வகையில் .
 நெடு நாள் கழித்து திருச்சி சம்பவங்களை நினைவு கூர்ந்தது மன நிறைவாக இருந்தது