எனது குழிப்பணியாரச் சட்டி சோதனைகளில் வெற்றிக்கு மேல் வெற்றியே!
வடை பண்ணலாம் என்றுதான் நினைத்தேன் .
ஆனால் சாப்பிட ஆள் வேண்டும் என்பதால் அந்த முயற்சியைச் சிறிது தள்ளிவைத்துள்ளேன் .
வடை பண்ணலாம் என்றுதான் நினைத்தேன் .
ஆனால் சாப்பிட ஆள் வேண்டும் என்பதால் அந்த முயற்சியைச் சிறிது தள்ளிவைத்துள்ளேன் .
.
சரி என்று ஹோதாவில் இறங்கி சேப்பங்கிழங்கு
ரோஸ்ட் செய்து பார்த்தேன்.
சும்மா சொல்லக்கூடாது
தேவாமிர்தம்
இன்று வத்தல் குழம்பு (புளிக் குழம்பு ) +.சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நல்ல காம்பினேஷன்
ஆக இருந்ததது .
அதுவும் தயிர் சாதத்துடன் சகலவிதமான பொருத்தங்களும் அம்சமாகப் பொருந்தியது .
அதுவும் தயிர் சாதத்துடன் சகலவிதமான பொருத்தங்களும் அம்சமாகப் பொருந்தியது .
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சேப்பங்கிழங்கு 14 துண்டுகள் (ஏழு குழி என்பதால் )
காரப் பொடி தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் மிகக் குறைந்த அளவு
செய்முறை :
பிறகு அதில் காரப் பொடி உப்பு சேர்த்து
நன்கு கலந்து வைக்கவும்.எண்ணெய் தடவ வேண்டாம்
.
ஒரு ஐந்து நிமிடம் ஆனதும் ஃ போர்க் கொண்டு திருப்பி விடவும் .இரண்டே நிமிடத்தில் நன்கு ரோஸ்ட் ஆகிவிடுகிறது .
முதல் செட் தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது , அடுத்த செட் எல்லாம் சீக்கிரம் ரோஸ்ட் ஆகிறது ,
ஒரு ஒரு கிழங்கும் பர்ஃ பெக்கெட்டாக எல்லாப்
பக்கமும் ரோஸ்ட் ஆகி ஒன்றோடொன்று சேர்ந்து குழைந்து போகாமல் இருந்தது பார்க்க அழகு . எண்ணெய் செலவும் மிக மிகக் குறைவே .என்பது பெரிய பிளஸ் பாய்ண்ட் ።
சேப்பங்கிழங்கு ரோஸ்டின்
அல்டிமேட் என்பதே இது தானோ என்று நினைக்கும் அளவுக்கு டேஸ்ட் ஆக இருந்தது
சூடாகச் சாப்பிடும் போது எனக்கு நானே ஏதாவது ஒரு அவார்டு கொடுத்துக் கொள்ளலாம்
போலத் தோணியது.